Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் டென்னிஸ் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (22:36 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு பெடரேஷன் கோப்பை தொடரில் விளையாடிய சானியா மிர்சா அதன்பிறகு குழந்தை பெற்றுக் கொண்டதால் தற்காலிகமாக டென்னிஸ் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார்
 
இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் அவர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. குழந்தை பிறந்த பின்னர் உடல் தகுதிக்காக தான் இதுவரை தயார் செய்து கொண்டிருந்தாகவும் தற்போது தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதை அடுத்து சர்வதேச டென்னிஸ் போட்டியில் அவர் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
முதல் போட்டியாக சானியா ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சனோக்குடன் இணைந்து விளையாட உள்ளதாகவும், அதனையடுத்து பெடரேஷன் கோப்பைக்கான இந்திய மகளிர் அணியில் சானியா மிர்சா இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
சானியா மிர்சாவுடன் அங்கிதா ரெய்னா, டியா பாட்டியா, ருதுஜா போசலே, கர்மான் கவுர் தண்டி ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளதாகவும், விஷால் உப்பல் கேப்டனாகவும், அங்கிதா பாம்ப்ரி பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மா போட்ட பவுலிங்.. க்ளீன் போல்ட் ஆன ஸ்ரேயாஸ் அய்யர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

கிரிக்கெட் களத்தில் இறங்கும் சேவாக், விராத் கோஹ்லியின் குடும்ப வாரிசுகள்..! ஏலப்பட்டியலில் இடம்..!

பார்ட் டைம் வேலை பார்க்க மறுத்த வினோத் காம்ப்ளி.. என்ன காரணம்?

இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் இருக்க மாட்டார்களா?... பின்னணி என்ன?

உலகிலேயே முதல் கிரிக்கெட் வீரர்: ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் செய்த அசத்தலான சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments