Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக பிரதமர் மோடியை சந்திப்பேன்: ஷாஹித் அப்ரிடி..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (16:02 IST)
இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக இந்திய பிரதமர் மோடியை சந்தித்து வேண்டுகோள் விடுக்க தயார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பல ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறவில்லை. உலக கோப்பை போட்டிகள் தவிர வேறு எந்த போட்டிகளும் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறாத நிலையில் இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி பேட்டி அளித்துள்ளார்.
 
இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்து இந்திய பிரதமர் மோடியுடன் முறையிட தயார் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
இரு நாடுகளுக்கு இடையே எல்லை பாதுகாப்பு அரசியல் விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சனை இருந்து வந்தாலும் அவை விளையாட்டில் எதிரொலிப்பதை தவிர்க்க வலியுறுத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்துராஜைக் கழட்டிவிட முடிவெடுத்துள்ளதா சிஎஸ்கே?… சஞ்சு சாம்சனால் கிளம்பும் சர்ச்சை!

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு.. பும்ரா, தாக்கூர் சாய் சுதர்சன் வெளியே… இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி… தேதி பற்றி வெளியான தகவல்!

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடர்… ஆனா பேரு மட்டும் வேற!

73 ரன்கள் எடுத்தால் போதும்.. இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா ஜோ ரூட்?

அடுத்த கட்டுரையில்
Show comments