Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்

Webdunia
சனி, 25 மே 2019 (09:34 IST)
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் 30ஆம் தேதி முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டி வரும் 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்திய அணி வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது
 
இந்த நிலையில் தற்போது உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய பயிற்சி போட்டி ஒன்றில்  பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி பாகிஸ்தான் வீரர்களை மனரீதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
ஸ்கோர் விபரம்:
 
பாகிஸ்தான்: 262/10  47.5 ஓவர்கள்
 
பாபர் அசாம்: 112
ஷோயப் மாலிக்: 44
இமாம் உல் ஹ்க்: 32
 
ஆப்கானிஸ்தான்: 263.7  49.3 ஓவர்கள்
 
ஹஷ்மதுல்லா ஷாஹிதி: 74
ஹஷ்ரதுல்லா: 49
முகமது நபி: 34
 
அதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை தென்னாப்பிரிக்கா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும் இன்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கும், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கும் இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

எக்ஸ்போஸ் ஆகிவிட்டதா தோனி மேஜிக்… ரசிகர்களே ஓய்வு பெற சொல்லி புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments