Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது ஒருநாள் போட்டி: அவுட்டான தவான்; களமிறங்கியிருக்கும் கோலி

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (14:47 IST)
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ். அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில்  இந்தியா வீரர் தவான் ஆட்டமிழந்துள்ளார்.
 
நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 க்கு என சமநிலையில் உள்ளது.
 
இன்று மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகித் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் கே பாலின் 11.5வது ஓவரில் தவான் அடித்த பந்தை பொவெல் கேட்ச் பிடித்து தவானை அவுட்டாக்கினார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் கோலி விளையாடி வருகிறார். 16வது ஓவரில் 98 ரன்களுக்கு 1 விக்கெட் இழப்பிற்கு இந்தியா விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்… கங்குலி அறிவுரை!

அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடித்த தோனி… வைரலாகும் புகைப்படம்!

இந்தியாவால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.869 கோடி இழப்பு.. ஜெய்ஷா வைத்த ஆப்பு..!

நடிகராக அறிமுகமாகும் ‘தாதா’ கங்குலி.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

‘இந்த இளைஞன், நம்மை அதிக நாட்கள் வழிநடத்தப் போகிறார்’- ரஜத் படிதாரை உச்சிமுகர்ந்த விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments