இலக்கு 400 ரன்கள்.. 35 ரன்களில் 2 விக்கெட் இழப்பு.. தடுமாறும் ஆஸ்திரேலியா..!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (19:07 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 399 ரன்கள் எடுத்தது. 
 
இதில் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். மேலும் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடிய அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 400 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது ஆஸ்திரேலியா அணி விளையாடி வரும் நிலையில் தொடக்க ஆட்டக்காரரான மாத்யூ ஷார்ட் மற்றும்  கேப்டன் ஸ்மித் ஆகிய இருவரும் அவுட் ஆகிவிட்டனர். தற்போது  ஆஸ்திரேலியா அணி 35 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments