Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 ரன்கள் இலக்கு.. மேக்ஸ்வெல் அதிவேக சதம்.. நெதர்லாந்து சமாளிக்குமா?

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (18:11 IST)
ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்து உள்ள நிலையில் 400 என்ற இலக்கை நோக்கி இன்னும் சிறிது நேரத்தில் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆஸ்திரேலிய அணி இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் அந்த அணி மிக அபாரமாக விளையாடி 399 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார். ஆனால் மேக்ஸ்வெல் மிக அபாரமாக 44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார்.  அவர் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள், லாபுசாஞ்சே 62 ரன்கள் அடித்தனர்.  இந்த நிலையில் 400 என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ள நிலையில் இவ்வளவு பெரிய இலக்கை அந்த அணி எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பை அடிச்ச இந்திய அணியா இது? ஜிம்பாப்வேவிடம் தோல்வி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments