Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினின் 30 ஆண்டு சாதனை: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SachinTendulkar

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (11:27 IST)
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் நுழைந்த 30வது வருடம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மறக்க முடியாத நாயகனாய் மக்கள் மனதில் நிறைந்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் தோற்றுவிட்டால் ஆட்டம் முடிந்துவிட்டது என டிவியை ஆஃப் செய்த காலமும் உண்டு. தனது 16வது வயதில் முதன்முதலாக டெஸ்ட் தொடரில் களம் இறங்கிய சச்சின் டெண்டுல்கருக்கு இப்போது வயது 46 ஆகிறது.

1989ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான் சச்சின் டெண்டுலகர் என்னும் நாயகனை உலகுக்கு காட்டியது. சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக 30 ஆயிரம் ரன்களுக்கும் மேல் பெற்றவரும், டெஸ்ட் மேட்ச்சில் முதல்முதலாக இரட்டை சதம் அடித்தவர் என்கிற பெருமையெல்லாம் சச்சினையே சேரும். 2013க்கு பிறகு சச்சின் ஓய்வு பெற்று விட்டாலும் இன்னமும் கிரிக்கெட் என்றால் பலபேருக்கு சச்சின் தான் ஞாபகம் வருவார்!

சச்சின் தனது 16 வயதில் 1989ம் ஆண்டு நவம்பர் 15 அன்று கராச்சியில் விளையாடினார். இன்றுடன் சச்சின் சகாப்தம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக 30 Years Of Sachinism என்ற வார்த்தையை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் #SachinTendulkar என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments