Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (12:41 IST)
ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்து வந்த, இந்தியா- மேற்கிந்திய தீவுகள் 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் மழையால் பாதிக்கப்பட்டது.


 
இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அதை தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள், 10.2-வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 33 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. மழை விட்ட பிறகு விளையாடிய மேற்கிந்திய தீவுகள் தடுமாறியது. முகமது ‌ஷமியின் அபாரமான பந்து வீச்சால் பிராவோ (20 ரன்), சாமுவேல்ஸ் (0) ஆட்டம் இழந்தனர். பிராத் வெயிட் (23 ரன்) விக்கெட்டை அமித்மிஸ்ரா கைப்பற்றினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 15.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 48 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது. பலத்த மழையால் நேற்றைய ஆட்டம் அதோடு நிறுத்தி வைக்கப்பட்டது. மழையால் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய ஆட்டத்தில் தப்பித்தது. கடைசிநாள் ஆட்டத்தில், இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments