Webdunia - Bharat's app for daily news and videos

Install App

49 ஓவர்களில் ஆல் அவுட் ஆன பாகிஸ்தான்.. நெதர்லாந்துக்கு இலக்கு எவ்வளவு?

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (18:00 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி வென்றது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது

இன்றைய போட்டியில்  நெதர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில்  மூன்று விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் என்று தத்தளித்து கொண்டிருந்த நிலையில் முகமது ரிஸ்வான் மற்றும் ஷாகில் ஆகிய இருவரும் அணியை ஓரளவுக்கு நிமிர்த்தினர். இருவரும் தலா 68 ரன்கள் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து நியூசிலாந்து அணி இன்னும் சில நிமிடங்களில் 287 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து அணி பந்துவீச்சாளர் பாஸ் டி லீடே அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்.! பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு..!!

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments