Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தேதிகளை முடிவு செய்ய கூட்டம்

2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தேதிகளை முடிவு செய்ய கூட்டம்
, புதன், 25 பிப்ரவரி 2015 (10:33 IST)
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணையை உறுதி செய்வதற்காக சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாபின் அதிகாரிகள் கத்தாரில் கூடுகிறார்கள்.


 
அந்தப் போட்டிகளை குளிர்காலத்தில் நடத்துவதே யதார்த்தமாக இருக்கும் என்று தேதிகளை முடிவு செய்யும் சிறப்புக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
அந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை எந்தெந்தத் தேதிகளில் நடத்துவது என்பது குறித்து ஃபிஃபாவின் குழு ஆராய்ந்து வருகிறது.
 
கத்தாரில் அப்போட்டியை 2022ஆம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால் அப்போட்டி அந்த மாதங்களில் நடந்தால் அவை ஃபிஃபவுக்கும் ஐரோப்பியக் கால்பந்துக் குழுக்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
 
ஐரோப்பியக் கால்பந்துக் குழுக்கள் அந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி, தமது லீக் போட்டிகளுக்கு மிகக் குறைந்த அளவுக்கே பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் மே மாதம் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil