Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாக்கி: 2வது டெஸ்டில் இந்தியா வெற்றி

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2009 (16:42 IST)
இரண்டு கோல்களை வாங்கி பின்தங்கியிருந்த இந்திய அணியினர் இரண்டாவது பகுதியில் மிக அபாரமாக ஆடி 4 கோல்கை அடித்து இங்கிலாந்தை தோற்கடித்துள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஹாக்கி டெஸ்டில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் வெளிப்படுத்தியத் திறன் அபாரமாக இருந்தது.

பிர்மிங்ஹாம் பல்கலை மைதானத்தில் நடந்த இப்போட்டியில், துவக்கத்திலிருந்தே மிகச் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி, ஆட்டத்தின் 22, 26வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து முன்னிலைக்கு வந்தது. ஆஸ்லி ஜாக்சனும், ஜோன்டி கிளார்க்கும் கோலடித்தனர்.

இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் துவங்கியதும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணியினர் 8 நிமிட இடைவெளியில் 3 கோல்களை அடித்து முன்னிலைக்கு வந்தனர். அர்ஜூன் ஹாலப்பா, தனஞ்செய் மஹாடிக், ராஜ்பால் சிங் ஆகியோர் கோல் போட்டனர்.

இதன் பிறகு இரு அணியினரின் ஆட்டும் சிறப்பாக இருந்தது. 65வது நிமிடத்தில் இந்தியாவின் குர்விந்தர் சண்டி 4வது கோலை அடித்தார். ஆட்டம் முடியும் தருவாயில் ஆஸ்லி ஜாக்சன் மேலும் ஒரு கோலை அடித்து வித்தியாசத்தை குறைத்தார்.

இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்திய ஹாக்கி அணி ஐரோப்பிய பயணத்தில் பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments