Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விம்பிள்டன் டென்னிஸ்: காயத்துடன் ஆடிய பெடரர் காலிறுதியில் நுழைவு!

Webdunia
திங்கள், 2 ஜூலை 2012 (21:45 IST)
FILE
விம்பிள்டன் டென்னிஸ் 2012 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டத்தில் சுவிஸ்.நட்சத்திரம் ரோஜர் பெடரர் பெல்ஜியம் வீரர் சேவியர் மலீஸை 7- 6, 6- 1, 4- 6, 6- 3 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

முதல் செட்டில் மலீஸுக்கு நல்ல வாய்ப்பிருந்தது. பெடரர் முதுகு காயம் காரணமாக சரியாக ஓடி ஆட முடியாத நிலையில் இருந்தார்.

முதல் செட்டில் 2- 2 என்று இருவரும் சமநிலை எய்தியபோது பெடரர் சர்வை முறியடிக்கும் வாய்ப்பு மலீஸுக்குக் கிடைத்தது.

இதில் இருமுறை பெடரர் தவறு செய்தார் நெட்டில் அடித்தார் இதனால் 30 - 40 என்று பெடரர் பின் தங்கியபோது மலீசுக்கு பிரேக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெடரர் அடுத்து ஒரு ஏஸ் சர்வை அடித்து 40- 40 என்று சமன் செய்தார்.

மீண்டும் மலீஸ் அபாரமான ஃபோர்ஹேண்ட் ரிடர்ன் மூலம் வெற்றி வாய்ப்புக்குத் திரும்பினார். ஆனால் பெடரர் அந்த ஆட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டார். 11வது கேமில் பெடரர் தவறுகள் நிகழ்த்த மலீஸ் வென்று 6- 5 என்று முன்னிலை வகித்தார். அடுத்து தன் சர்வை வென்றால் போதும் முதல் செட்டை மலீஸ் கைப்பற்றியிருக்கலாம். ஆனால்..

முதல் செட்டின் 12 வது சர்வ் கேமில் மலீஸ் சர்வ்கள் தோல்வியடைய பெடரரின் ரிடர்னும் நன்றாக அமைய மலீஸை பிரேக் செய்தார் பெடரர் செட்டைக் கைப்பற்றும் வாய்ப்பு பறிபோனது.

இடையில் பெடரர் 8 நிமிடங்களுக்கு காயத்திற்கு சிகிச்சை பெற்றார். மீண்டும் வந்து ஆட்டம் டைபிரேக்கருக்குச் சென்றபோது 7- 1 என்று பெடரர் கைப்பற்றினார்.

அதன் பிறகு பெடரர் தன் பாணி ஆட்டத்திற்கு வந்து இரண்டாவது செட்டை 6- 1 என்று கைப்பற்றினார்.

வழக்கம்போல்தான் என்று நினைக்கும்போது மலீஸ் 3வது செட்டில் பெடரர் டபுள் பால்ட் செய்தார். பிறகு 7 முறை தவறு செய்தார். இதனால் ஒரு பிரேக்கை எடுத்து மலீஸ் 6- 4 என்று கைப்பற்றினார்.

4 வது செட்டில் பெடரர் மீண்டும் அபாரமாக விளையாடி 6- 3 என்று கைப்பற்றி காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments