யூரோ 2008 கோப்பை கால்பந்துப் போட்டியின் மூன்றாவது காலிறுதிப் போட்டியில் ஹாலந்தை வீழ்த்தி ரஷ்யா அரையிறுதிக்கு முன்னேறியது.
ஃபாசல் நகரில் நடந்த மூன்றாவது காலிறுதிப் போட்டிகளில் ஹாலந்தும் ரஷ்யாவும் மோதின.
ரஷ்யா அபாரமாக ஆடியது. ஆட்டத்தின் 56 ஆவது நிமிடத்தில் ரஷ்யாவின் ரோமன் பேவ்லிசென்கா முதலாவது கோலைப் போட்டு ரஷ்யாவை முன்னிலைப்படுத்தினார்.
ஆனால் 86 ஆவது நிமிடத்தில் ஹாலந்தின் ரூட் வான் நிஸ்டல்ரூய் ஒரு கோல் அடித்து தன் அணியைச் சமநிலைப்படுத்தினார்.
பின்னர் ஆட்டம் முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை என்பதால், கூடுதல் நேரம் தரப்பட்டது.
இதில், 22 ஆவது நிமிடத்தில் ரஷ்யாவின் டோர்பின்ஸ்கி ஒரு கோலையும், அடுத்த நான்கு நிமிடங்களில் அர்ஷவின் மற்றொரு கோலையும் அடித்தனர்.
இறுதியில் 3- 1 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.