Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை மராத்தன்: வெல்வாரா டேவிட் டாரஸ்?

Webdunia
சனி, 16 ஜனவரி 2010 (17:22 IST)
மும்பையில் நாளை நடைபெறவுள்ள சர்வதேச மராத்தன் போட்டியில் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பெற்ற கென்ய வீரர் டேவிட் டாரஸ் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2008 மும்பை மராத்தனில் கென்யாவின் கென்னத் முங்காரா முதலிடத்தைப் பிடித்தார். 2 மணி 11.51 நிமிடங்களில் நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து வெற்றி பெற்றார் முங்காரா.

நாளைய போட்டியில் முங்காரா கலந்துகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, கடந்த அக்டோபரில் எய்ந்தோவனில் நடந்த மராத்தன் போட்டியில் பந்தய தூரத்தை 2 மணி 9.24 நிமிடங்களில் கடந்து டேவிட் டாரஸ் வெற்றி பெற்றுள்ளார். எனவே நாளைய போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமின்றி, புதிய சாதனை படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிடத்தை வெல்லும் வீரருக்கு 35.000 அமெரிக்க டாலர் பரிசு காத்திருப்பதால் போட்டி கடுமையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் பிரிவில், பந்தய தூரத்தை 2 மணி 34.08 நிமிடத்தில் கடந்த, மூன்று முறை வெற்றியாளரான எதியோப்பிய வீராங்கனை முலு சேபோக்காவிற்கு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற சக நாட்டு வீராங்கனை ஹெய்லி கேபேபுஸிடம் இருந்து கடும் போட்டி காத்திருக்கிறது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments