Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேர்மையாக இருந்ததுதான் கெவின் பீட்டர்சன் செய்த ஒரே தவறு - கிறிஸ் டிரெம்லெட்

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2014 (15:15 IST)
ஆஸ்ட்ரேலியாவிடம் ஆஷஸ் தொடரில் 5- 0 என்று உதை வாங்கியதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கெவின் பீட்டர்சனை பலிகடாவாக்கி அவரை அனைத்து வடிவங்களிலிருந்தும் நீக்கியது. அவரை இதுபோன்று செய்ததற்கான அடிப்படை காரணங்கள் இருக்கின்றன. ஆனால் மௌனமே நிலவி வருகிறது.
FILE

இந்நிலையில் கவுண்டி அணி சர்ரேயில் பீட்டர்சனுடன் சேர்ந்து ஆடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் டிரெம்லெட், கெவின் பீட்டர்சனுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

" நான் பார்த்த வரையில் கெவின் எந்த தவறையும் செல்லவில்லை, ஆனால் என்ன நடந்தது என்பது பற்றிய நேர்மை நமக்குத் தேவை. எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, இதனடியில் சில கசப்பான உண்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கெவின் பீட்டர்சன் மிக நேர்மையான மனிதர். இங்கிலாந்து ஓய்வறையில் வீரர்கள் பலர் அமுக்குணியாக இருக்கும்போது தன் மனதில் பட்டதை நேர்மையாக பேசுபவர் கெவின் பீட்டர்சன்.
FILE

நானும் பீட்டர்சனும் சிறந்த நண்பர்கள். ஆஸ்ட்ரேலிய தொடரில் நானும் இருந்தேன், நான் பார்த்தவரையில் கெவின் எந்த தவறும் செய்யவில்லை.

ஏதாவது அவர் நினைத்தால் நம் முகத்திற்கு நேராக அதைக் கூறிவிடுவார் கெவின். அவர் நடந்ததைப் பற்றி நேர்மையாக கருத்துக்களை தெரிவித்திருப்பார். அவர் பயப்படமாட்டார். ஆனால் இதற்காக அவர் இங்கிலாந்துக்கே விளையாட முடியாது போய்விட்டது என்பது தெரியவில்லை. ஆனால் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்துக்கு இனி விளையாட மாட்டார் என்பது மிகவும் வெட்கப்படவேண்டிய ஒரு விஷயம்.

இவ்வாறு கூறியுள்ளார் கிறிஸ் டிரெம்லெட்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments