Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவர் மீது விமர்சனம்! ஸ்டூவர் பிராடிற்கு அபராதம்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2014 (00:25 IST)
நியூசீலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபாரமாக ஆடியும் மழை குறுக்கீடு காரணமாக நியூசீலாந்து 5.2 ஓவரில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தேவையான ரன் விகிதத்தைபெற்றிருந்ததால் வெற்றி பெற்றது.
FILE

இந்தத் தோல்விக்கு நடுவரின் முடிவுதான் காரணம் என்று பிராட் கூறியிருந்தார். அதாவது 5.2 ஓவர்கள் வரை ஆட்டத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் வானில் இடி இடிக்கத் தொடங்கியபோதே அதாவது 5வது ஓவரின் ஆரம்பத்திலேயே ஆட்டத்தை நிறுத்தியிருக்கவேண்டும் என்றும் 5.2 ஓவர்கள் வரை ஆட்டத்தை நீட்டித்து பிறகு நிறுத்தியது தவறு என்று நடுவர்கள் அலீம் தார் மற்றும் பால் ரெய்ஃபல் ஆகியோரை கடுமையாக சாடியிருந்தார்.

5 வது ஓவரி வீசியவர் பிராட். பிராடின் 5வது பந்தில் ரன் இல்லை. ஆனால் 6வது பந்தை மெக்கல்லம் சிக்ஸருக்குத் தூக்கினார் அதுவே வெற்றி ரன்னாக அமைந்துவிட்டது. ஆனால் பிராட் என்ன கூறுகிறார் என்றால் சிறிது நேரமாகவே இடி இடித்துக் கொண்டிருக்கிறது மின்னல் கடுமையானது. அப்போதே வீரர்களின் பாதுகாப்பு கருதி ஆட்டத்தை நிறுத்தியிருக்கவேண்டும், 5.2 ஓவர்கள் வரை இருந்திருக்கவேண்டியதில்லை. என்று அவர் கூறினார்.

நடுவர்களுக்கு இந்த விஷயத்தில் தெளிவு வேண்டுமென்றும் 4.2 ஓவரில் மின்னல் கடுமையாக வர பேட்ஸ்மென் ஒதுங்கினார். இப்போதே நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் 5 ஓவர்கள் முடிந்துவிட்டால் அது ஒரு ஆட்டம் என்ற கணக்கில் வரும் அதற்காக வீரர்கள், மற்றும் ரசிகர்களின் பாதுகப்பை நடுவர்கள் உணராமல் இருக்கலாமா என்றார் பிராட்.

இந்த விமர்சனத்திற்குத்தான் ஐசிசி ஸ்டூவர்ட் பிராடிற்கு அவரது ஆட்டத் தொகையில் 15% அபராதம் விதித்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஐசிசிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அசாதாரண வானிலை சூழல் இருக்க்கும்போது ஆட்டமாகக் கணக்கில் வரக்கூடிய 5 ஓவர்கள் முடியும் வரை காத்திருக்க முடியாது. ஸ்டூவர்ட் பிராடின் கவலையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே ஐசிசி எதிர்காலத்தில் நடுவர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலையில் வழிகாட்டுதல் செய்யவேண்டியது அவசியம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடுமை காட்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments