டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் கால் இறுதியில் விளையாட தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், அமல்ராஜ் ஆகியோர் தகுதி பெற்றனர்.
சரத்கமல் 11-7, 11-9, 9-11, 11-6, 11-4 (4-1) என்ற கணக்கில் ஸ்காட்லாந்து வீரர் தேவினை வீழ்த்தினார். அமல்ராஜ் 4-3 என்ற கணக்கில் கடுமையாக போராடி சைபிரஸ் வீரர் மரியாசை தோற்கடித்தார்.
இதேபோல சவுமிதீப் ராய் 4-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் வில்லியசை வீழ்த்திகால் இறுதிக்கு முன்னேறினார். தமிழக வீரர் அபிஷேக் இங்கிலாந்து வீரரிடம் தோற்றார். இதே போல முன்னணி இந்திய வீராங்கனையான மவுமாதார்கம் தோல்வி அடைந்தார்.
ஸ்குவாஷ் போட்டியில் கலப்பு இரட்டையர் கால் இறுதிக்கு தமிழகத்தை சேர்ந்த சவுரவ் கோஷல்- ஜோஸ்னா ஜோடி தகுதி பெற்றது. இந்த ஜோடி 11-9, 11-5 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆலன்சினளன் பிரானியா ஜோடியை வென்றது.