Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட், ஒருநாள் அணிகளில் இடம்பெற்றது இன்ப அதிர்ச்சி - ஈஸ்வர் பாண்டே!

Webdunia
புதன், 1 ஜனவரி 2014 (14:08 IST)
நியூசீலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இடம்பெற்றுள்ள புது முக வீரர் ஈஸ்வர் சந்த் பாண்டே ஒரு வேகப்பந்து வீச்சாளர், இவர் இரு அணிகளிலும் தேர்வானது தனக்கு இன்ப அதிர்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
FILE

இவருக்கு வயது 24 ஆகிறது. மத்தியபிரதேச வீரர். பவுலர். ஐபிஎல். கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்.

இந்திய அணி நியூசிலாந்துடன் 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

ஜனவரி 19-ந்தேதி ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 31-ந்தேதியுடன் ஒருநாள் தொடர் முடிகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 6-ந்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 18-ந்தேதியுடன் சுற்றுப்பயணம் முடிகிறது.

நியூசிலாந்து தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து யுவராஜ்சிங் நீக்கப்பட்டுள்ளார். இதே போல உமேஷ்யாதவ், மொகித்சர்மா ஆகியோரும் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

வருண் ஆரோன் அணிக்கு தேர்வாகி உள்ளார். அவர் சர்வதேச போட்டியில் விளையாடி 2 ஆண்டுகள் ஆகிறது.

புதுமுக வீரர்கள் ஈஷ்வர் பாண்டே, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் அணியில் இடம் பெற்று உள்ளனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீரரான ஈஸ்வர் பாண்டே டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

FILE
இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி ஆகிய இரு அணியிலும் தேர்வு பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

உள்ளூர் போட்டியிலும், தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக பந்து வீசியதால் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

24 வயதான ஈஷ்வர் பாண்டே 2012-13 ரஞ்சி டிராபி சீசனில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக திகழ்ந்தார். 12 ஆட்டத்தில் 45 விக்கெட் எடுத்தார். 31 உள்நாட்டுப் போட்டிகளில் 131 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

ரயில்வே அணிக்கு எதிராக ஒரு சற்று கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு இன்னிங்சில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பேட்டிங்கிலும் சில பல சிக்சர்களை அடிக்கும் திறமையுடையவர் ஈஸ்வர் பாண்டே.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments