Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் சீரிஸ் பேட்மின்டன்: சாய்னா நேவால் சாம்பியன்

சூப்பர் சீரிஸ் பேட்மின்டன்: சாய்னா நேவால் சாம்பியன்
புதுடெல்லி , ஞாயிறு, 21 ஜூன் 2009 (14:45 IST)
இந்தோனேஷியாவில் நடந்த சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தலைநகர் ஜகர்த்தாவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் சீனாவின் வாங்-லின் உடன் சாய்னா பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் சுற்றில் 12-21 என்ற புள்ளிக்கணக்கில் சாய்னா நேவால் எளிதில் தோல்வியுற்றார்.

அடுத்தடுத்து நடந்த 2வது, 3வது செட் ஆட்டங்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா, அவற்றை 21-18, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் வென்று 2-1 என்ற செட்கணக்கில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ஹைதரபாத்தைச் சேர்ந்த சாய்னா கைப்பற்றும் முதல் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil