Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுதந்திரமான மனநிலையில் இங்கு வந்தோம் - வெற்றிகள் குறித்து தோனி பெருமிதம்!

சுதந்திரமான மனநிலையில் இங்கு வந்தோம் - வெற்றிகள் குறித்து தோனி பெருமிதம்!
, சனி, 29 மார்ச் 2014 (14:02 IST)
ஐபிஎல் சூதாட்ட விவகாரம், பிசிசிஐ சர்ச்சை என்று மைதானத்திற்கு வெளியே தோனியை இணைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையிலும் சாம்பியன்ஸ் டிராபி போலவே இந்த உலகக் கோப்பையை வெல்லவும் இந்தியா சரியான அடித்தளம் அமைத்துள்ளது.
இது பற்றி தோனி கூறியதாவது:
 
வெற்றிகளுக்குக் காரணம்: நல்ல ஓய்வறை சூழல், ஒவ்வொருவர் வெற்றியிலும் மற்றவருக்கு மகிழ்ச்சி, தன்னம்பிக்கை ஆகியவையே காரணம்.

கிரிக்கெட்டிற்கு வெளியே நிறைய நடக்கும் ஆனால் நாட்டிற்காக விளையாடும்போது நாம் ஆட்டத்தில் கவனம் செலுத்தினோம், இதைத்தான் இந்த அணி இப்போது செய்துள்ளது.
webdunia
மேலும் சவால்களை ஏற்றுக் கொள்வது,சவால்களை சந்திப்பதில் மகிழ்வு ஆகியவையும் உள்ளன. சர்வதேச கிரிக்கெட் என்று வரும்போது நாம் சிறந்தவர்கள் என்ற எண்ணம் முக்கியம். இவையனைத்திற்கும் நல்ல ஓய்வறைச் சூழல் அவசியம் அதனை நாங்கள் சிறப்பாகவே பரமாரித்து வருகிறோம்.
 
அரையிறுதிக்குள் தகுதி பெறுவது நோக்கம் நிறைவேறிவிட்டது என்றால் அதில் என்ன செய்யவேண்டும் என்பதுதான் இப்போது முக்கியம். 

நாங்கள் இங்கு வரும்போது எந்த வித முன் அனுமானமும் இல்லாமல் சுதந்திரமான மன நிலையில்தான் வந்தோம், இங்கு பிட்ச் உள்ளிட்ட சூழல்கள் மிகவும் எங்களுக்கு பிரசித்தமானவை. பவுலிங், பேட்டிங் என்று வந்தால் என்னன்ன பிரச்சனைகளை சந்திக்கவேண்டி வரும் என்பது எங்களுக்கு தெரியும் அதில் பயிற்சி மேற்கொண்டோம்.
webdunia
ஆகவே T20, டெஸ்ட், ஒருநாள் என்ற வேறுபாடு அல்ல, எப்படி நாம் நம்மை தயார் படுத்திக் கொள்கிறோம் என்ற முறையே முக்கியம். 
 
இதுபோன்ற போட்டித் தொடர்களில் எதிரணியினருக்கு பலவீனமான பகுதியை நாம் காண்பித்து விடக்கூடாது என்பது மிக மிக முக்கியம்.
 
இவ்வாறு கூறினார் தோனி.

Share this Story:

Follow Webdunia tamil