Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் ஹாக்கி: இறுதியில் இந்தியா

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2010 (21:17 IST)
புதுடெல்லியில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் இன்று நடைபெற்ற ஹாக்கி அரையிறுதியில் இங்கிலாந்து அணியை டை பிரேக்கரில் 5-4 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவை சந்திக்கிறது.

இன்று நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் உலக சாம்பியன் அணியான ஆஸ்ட்ரேலியா 6-2 என்ற கோல்கணக்கில் நியூ ஸீலாந்து அணியை வென்றது.

ஆட்டத்தின் துவக்கத்திலிருந்து சிறப்பாக ஆடிய இந்திய அணி, முதல் 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி முதல் கோலைப் போட்டது. ஆனால் அதன் பிறகு இங்கிலாந்து அணியின் எதிர் தாக்குதலை தடுக்க மிகவும் திணறியது. ஆயினும் இங்கிலாந்து அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து ஆடியது.

ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டிருந்ததால், 15 நிமிடம் கூடுதலாக ஆட்டம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால், டை பிரேக்கர் நடத்தப்பட்டது.

இதில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட 5 வாய்ப்புகளையும் கோலாக்கியது இந்திய அணி. இங்கிலாந்து அணி வீரர் ஒருவர் அடித்த பந்தை இந்திய கோலி தடுத்ததால், அவர்களால் 4 கோல்களை மட்டுமே போட முடிந்தது. 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments