Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டிகள்: டெல்லி முதல்வர் கருத்து

Webdunia
புதுடெல்லி: அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான பணிகளில் முழுமையான திருப்தி இல்லை என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அடுத்த ஆண்டு தில்லியில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசுடன் சேர்ந்து டெல்லி மேம்பாட்டு அமைப்பு, டெல்லி மாநகராட்சி ஆகியன மேற்கொண்டுவருகின்றன. சில திட்டங்கள் தொடங்கப்படாமலும், தொடங்கப்பட்ட சில பணிகள் காலம் கடந்தும் நடைபெற்றுவருகின்றன.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக நடைபெற்றுவரும் பணிகளில் முழு திருப்தி இல்லை. அதே சமயம் கலக்கமடையவும் இல்லை. என்றாலும் அனைத்து பணிகளும் போட்டிக்கு முன்னர் முடிவடைந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஸ்டேடியம் மற்றும் ஹோட்டல்களின் கட்டுமானப் பணிகள் தாமதமாக நடைபெற்றுவருவது உண்மைதான். ஆனால், எல்லாம் போட்டி தொடங்குவதற்குள் தயாராகிவிடும். என்றார் ஷீலா தீட்சித்

டாஸ் வென்று பவுலிங் எடுத்த குஜராத்.. டெல்லியின் அக்சர் பட்டேல் அரைசதம்..!

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை..! சென்னையில் 12 பேர் கைது..!!

ஏப்ரல் 28ஆம் தேதி சென்னை - ஐதராபாத் அணிகள் போட்டி.. நாளை முதல் ஆன்லைன் டிக்கெட்..!

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைப் படைத்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்!

அந்த செல்லத்துக்கு அவார்ட் குடுங்க.. சிஎஸ்கே சிங்கங்களுக்கு நடுவே முழங்கிய தங்கம்! – வைரலாகும் புகைப்படம்!

Show comments