Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பீரின் டயமண்ட் டக்; சேவாகிற்கு விட்ட கேட்ச்; டெல்லி வெற்றி!

Webdunia
வியாழன், 2 மே 2013 (12:03 IST)
FILE
கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி நேற்று சொதப்பலாக விளையாடி டெல்லிக்கு எளிதான வெற்றியை அளித்தது. கம்பீர் எப்போதும் தன் கூட விளையாடும் பேட்ஸ்மெனை ரன் அவுட் செய்து மகிழ்பவர். ஆனால் அந்த டிராப்பில் அ வர ே நேற்று விழுந்து பந்தை எதிர்கொள்ளும் முன்பே 0-வில் ரன் அவுட் ஆகி 'டயமண்ட் டக்' புகழ் பெற்றார்.

ஆட்டத்தின் 2வது பந்து பிஸ்லா, இர்பான் பத்தான் பந்தில் பேடில் வாங்க அது பிஸ்லாவுக்கு அருகிலேயே விழுந்தது. ஆனால் உயிரை வெறுத்து ஏதோ அந்த ஓவரில் மீதமுள்ள 4 பந்துகளில் 4 சிக்சர்களை விளாசுவது போல் ஓடி வந்தார் கம்பீர், பிஸ்லா, கேப்டன் கூப்பிட்டால் போகாமல் இருக்க முடியுமா லேட்டாக ஸ்டார்ட் செய்தார். ஆனால் பத்தான் பந்தை ஓடி வந்து எடுத்து ஸ்டம்பில் அடிக்க பந்தை எதிர்கொள்ளாமலேயே ரன் அவுட். கம்பீரின் ஐபிஎல். கிரிக்கெட் 8வடு ரன் அவுட் ஆகும் இது. டுவெண்டி 20 கிரிக்கெட்டில் 15வது ரன் அவுட் ஆகும். பேசாமல் ரன் அவுட் புகழ் கம்பீர் என்றே பெயர் வைத்து விடலாம். இவரது தாறுமாறான ரன் ஓடும் பழக்கத்தினால் இங்கிலாந்துக்கு எதிராக கொல்கட்டாவில் சேவாக், புஜாரா விக்கெட்டுகளை இந்தியா இழக்க நேரிட்டது. இதனால் தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையையே இழ்ந்துள்ள கம்பீர் இன்னமும் திருந்தவில்லை என்றே தெரிகிறது.

FILE
இதனையடுத்து டெல்லி பேட் செய்யும் போது பிரெட் லீ உயிரைக் கொடுத்து அதிவேகமாக வீசினார். சேவாகை தவறாக ஆட வைத்து பந்து கேட்ச்சிற்கு சென்றது. எப்போதும் ஷாட் கவரில் பெரிய ஃபீல்டர் போல் தானே நிற்பார் கம்பீர் அதுபோல்தான் நேற்றும் நின்றார் பந்து நேராக அவரிடம் சென்றது. பிடிக்கக்கூடிய வசதியான உயரத்தில்தான் பந்து வந்தது ஆனால் தட்டுத் தடுமாறி பொத்தென்று தரையில் விட்டார் கம்பீர். மொத்தத்தில் கேப்டன்சி, பேட்டிங், ரன் கணிப்புத் திறன், பீல்டிங் என்று அனைத்திலும் கடுமையாக சொதப்பி வருகிறார் இந்த 'இந்தியாவின் ஜஸ்டின் லாங்கர்'!

முதலில் பேட்டிங்கில் சொதப்பிய கொல்கட்டா 136 ரன்களை எடுத்ததே டெல்லியின் பெரிய மனசுதான் காரண என்று கூறலாம் 50/5 என்று தடுமாறிய கொல்கட்டாவை நெஹ்ரா, உமேஷ் யாதவ் 136 ரன்களுக்குக் கொண்டு செல்ல வைத்தனர். பிரெட் லீ 2 சிக்சர்களுடன் 16 ரன்களை 6 பந்துகளில் விளாசினார். யூசுப் பத்தான் மோர்னி மோர்கெலை அபார சிக்சர் அடித்து 20 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் அதே ஷாட்டை முயல இர்பான் பத்தானில் அதி அற்புத கேட்சிற்கு அவுட் ஆனார். டெல்லி அபாரமான ஃபீல்டிங் செய்ய கொல்கட்டா சொதப்பல் பீல்டிங் செய்தது.

இலக்கைத் துரத்திய டெல்லி டேர் டெவில்ஸ் 5வது ஓவரின் போது சேவாக், ஜெயவர்தனேயை இழ்னது 27/2 என்று ஆனது ஆனால் அதன் பிறகு உன்முக்த் சந்த் (37), வார்னர் (66 நாட் அவுட், 42 பந்து 6 பவுண்டரி 3 சிக்சர்) இலக்கை ஒன்றுமில்லாமல் செய்தனர். 13 பந்கள் மீதமிருக்க டெல்லி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் டேவிட் வார்னர்.

ராய்பூரின் பெரிய பவுண்டரிகள் டெல்லியின் அருமையான அபீல்டிங், கம்பீரின் சொதப்பல் கேட்பன்சி மற்றும் கொல்கட்டாவின் சொதப்பல் பீல்டிங் இந்த மைதானத்தில் கொல்கட்டாவிற்கு மோசமான நினைவுகளையே கொடுத்துள்ளது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments