Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை பேட்மின்டன்: நேரடியாக 2வது சுற்றில் நுழைகிறார் சாய்னா

Webdunia
புதன், 22 ஜூலை 2009 (12:00 IST)
ஹைதராபாத்தில் நடைபெற உள்ள உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், நேரடியாக 2வது சுற்றில் நுழையத் தகுதி பெற்றுள்ளார்.

ஆக்ஸ்ட் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை பேட்மின்டன் தொடரில், உலகின் முன்னணி வீரர ், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டித் தொடரில் யார், யாருடன் மோதுவது என்ற விவரம் (டிரா) நேற்று முடிவு செய்யப்பட்டது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனையும ், தரவரிசையில் 6வது இடத்தில் இருப்பவருமான சாய்னா நெவால் நேரடியாக 2வது சுற்றில் (முதல் சுற்றில் ஆடாமல் `பை-ஆர்டர ்' வாய்ப்பு மூலம்) விளையாடத் தகுதி பெற்றார்.

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர் சேத்தன் ஆனந்த் தனது முதல் சுற்றில் தென்கொரிய வீரர் ஜி ஹூன் ஹாங்கை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீரர் அரவிந்த் பாத் சீன தைபே வீரர் பையின் யு சிங் சியேவை முதல் சுற்றில் எதிர்கொள்கிறார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments