Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டில் அதிக ரன்கள்: டிராவிட் முதலிடம்

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2011 (11:17 IST)
FILE
கிரிக்கெட்டில் இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் டிராவிட் முதலிடம் வகிக்கிறார்.

டிராவிட் 10 டெஸ்ட் போட்டிகளில் (19 இன்னிங்ஸ்கள்) விளையாடி 952 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.இதில் 5 சதம், 2 அரை சதம் அடங்கும்.

இவருக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்தின் இயான்பெல் 8 போட்டிகளில் (11 இன்னிங்ஸ்கள்) விளையாடி 950 ரன்கள் குவித்து 2-வது இடம் பெற்றுள்ளார். இதில் 5 சதம் 2 அரை சதம் அடங்கும்.

3- வது இடத்தை இங்கிலாந்தின் அலாஸ்டயர் குக் பிடித்துள்ளார். இவர் 8 போட்டிகளில் (11 இன்னிங்ஸ்கள்) விளையாடி 4 சதம் 2 அரை சதங்களுடன் 927 ரன்கள் குவித்துள்ளார்.

அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் இஷாந்த் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். அவர் 10 போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் 6 போட்டிகளில் 41 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் தேவேந்திர பிஷூ 9 போட்டிகளில் 36 விக்கெட் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments