Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அலட்சியமாக அவுட் ஆன ரோகித், தவான், ரஹானே!

அலட்சியமாக அவுட் ஆன ரோகித், தவான், ரஹானே!
, வெள்ளி, 31 ஜனவரி 2014 (12:10 IST)
ஒரு ஆறுதல் வெற்றியையாவது பெற்று டெஸ்டிற்கு முன்னால் ஒரு தன்னம்பிக்கையைப் பெற போராடி ஆடவேண்டும். ஆனால் வெலிங்டனில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திஆவின் 3 முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, தவான், ரஹானே ஆகியோர் பொறுப்பின்றி ஆடி அவுட் ஆனதால் இந்தியா 16 ஓவர்களில் 39 ரன்களை எடுத்து தேவுகிறது.
FILE

வெற்றி இலக்கு 304 ரன்கள் முதல் 15 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் ஒரு 60, 65 ரன்கள் எடுத்தால் போதும் பின்னால் கோலி, தோனி, ஜடேஜா, அஷ்வின் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் மிகவும் மோசமாக ஆடினர் இந்தியாவின் துவக்க வீரர்கள்.

முதலில் ரோகித் சர்மா 13 பந்துகள் தேவு தேவி 4 ரன்கள் எடுத்து மில்ஸ் வீசிய பந்தை இந்தா வைத்துக் கொள் என்று டெய்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ரோகித் சர்மா. 2 ஸ்லிப்கள் இருப்பது தெரிந்தும் நல்ல பந்தை தேர்ட்மேன் திசையில் தட்டிவிட எந்த ஒரு சர்வதேச வீரராவது நினைப்பார்களா? அவ்வளவுதான் ரோகித்தின் சமயோசிதமெல்லாம்.

ஷிகர் தவான், இவரும் 28 பந்துகள் தடவு தடவென்று தடவி 9 ரன்கள் எடுத்து அப்படியே நின்றிருந்தால் பிறகாவது அடித்திருக்கலாம் ஆனால் இவரும் ஹென்றி என்பவர் வீசிய பந்தை ஸ்லிப்பில் குறிபார்த்து கேட்ச் கொடுத்து விட்டுச் சென்றார். ஒன்று அந்தப் பந்தை அறைந்திருக்கவேண்டும், அல்லது விட்டிருக்கவேண்டும் இரண்டும் கெட்டானாக சும்மா அதை தடவி கொடுத்து வெளியேறினார் தவான்.
webdunia
FILE

ரஹானே வந்தார் சென்றார் 10 பந்துகள் ஒன்றுமே செய்ய முடியவில்லை 2 ரன்கள் எடுத்து ஹென்ரி வீசிய துக்கடா பந்தை நேர் பந்தை மிட்விக்கெட்டில் பிளிக் ஆடுகிறேன் என்று கால்காப்பில் வாங்கினார். அது ஒரு நேர் எல்.பி. அவுட் ஆனார்.

மீண்டும் சிலுவையைச் சுமப்பவர் கோலி அவர் 16 ரன்களுடனும், ராயுடு 8 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்தியா 17 ஓவர்களில் 41/3. வெற்றிக்கு தேவையான ரன் விகிதம் 7.96. இன்னொரு தோல்வி உறுதி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil