Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4ஆம் நாள் ஆட்டத்தை விறுவிறுப்பாக்கிய இஷாந்த் ஷர்மா

Webdunia
திங்கள், 25 ஜூலை 2011 (12:24 IST)
FILE
லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விக்கெட்டை வீழ்த்த கடுமையாக முயன்று தோல்வி அடைந்த இஷாந்த் ஷர்மா நேற்று திடீரென உணவு இடைவேளைக்குப் முன்ப ு அபாரமாக பந்து வீசி இங்கிலாந்தை அச்சத்தில் ஆழ்த்தினார்.

190 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து இஷாந்தின் அபார வேகப்பந்து வீச்சு ஸ்பெல்லினால் 62/5 என்று ஆனது. ஒட்டுமொத்த ரன் முன்னணி 250 ரன்கள்தான்.

எதிமுனையில் பிரவீண் குமார் களைப்படையாமல் இருந்திருந்தாலோ, அல்லது ஜாகீர் கான் இருந்திருந்தாலோ இங்கிலாந்து நேற்று 120 ரன்களுக்கு முடங்கியிருக்கும். இந்திய அணி வெற்றிக்கு விளையாட நிர்பந்திக்கப்பட்டிருக்கும்.

இந்த ஸ்பெல்லில் மட்டும் இஷாந்த் ஷர்மா 5 ஓவர்கள் 3 மைடன்கள் 4 ரன்கள் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுவும் ஜொனாதன் டிராட், பீட்டர்சன், பெல் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி அச்சமுறச் செய்தார்.

தொடர்ந்து இஷாந்தின் பந்துகள் பேட்டை உரசிக் கொண்டு செல்ல இஷாந்தின் பந்து வீச்சு வேகம் அதிகமானது. அவரது பந்து வீச்சின் அளவும், திசையும் திடீரென ஒரு ஆட முடியாத கடின நிலையை ஏற்படுத்தியது.

2005 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் பிளின்டாஃப், ரிக்கி பாண்டிங்கிற்கு வீசிய அந்த ஸ்பெல், 2010 ஆஷஸ் தொடரில் எங்கிருந்தோ வந்து திடீரென கலக்கிய மிட்செல் ஜான்சனின் ஸ்பெல், கடந்த ஆண்டு டேல் ஸ்டெய்ன் இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் வீசியது, 2008ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங்கை பெர்த்தில் இஷாந்த் கடும் சோதனைக்குள்ளாகிய அந்த ஒரு மணி நேரம், மீண்டும் ஆஸ்ட்ரேலியா இங்கு கடந்த முறை வந்து ஒரு டெஸ்ட் ஆடியபோது இஷாந்த் இரண்டாவது இன்னிங்ஸில் திடீரென விரைவில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்து வெற்றிக்கு வித்திட்டதும், தற்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்ந்த அற்புதமான தொடர் பந்து வீச்சுக்கள் என்றால் அது மிகையாகாது.

மேலும் ஞாயிறான நேற்று இங்கிலாந்து மகிழ்ச்சியுடன் களமிறங்குகிறது. பிட்ச் மிகவும் மந்தமாக பேட்டிங்கிற்கு படு சாதகமாக உள்ளது. சக்தி வாய்ந்த நடுவரிசை வீரர்கள் என்று இங்கிலாந்து சோரம் போக வாய்ப்பேயில்லை.

இஷாந்தை ஆஃப் ஸ்டம்புக்கு நேராக நடந்து வந்து ஆடிய பீட்டர்சன், அதேபோல் நடந்து வர முயன்றார் ஆனால் வேகமும் எழுச்சியும் அவரை பின்னுக்குத் தள்ளியதோடு அவரையும் அறியாமல் பந்து கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது.

அதற்கு அடுத்த படியாக ஃபார்மில் உள்ள இய பெல்லுக்கு சற்றே கிரீஸின் வெளி விளிம்பை ஒட்டிச் சென்று இன்ஸ்விங்கராகச் செய்து பிறகு பந்தை நேராக ஆக்க அபாரமான அந்தப் பந்தை பெல் எட்ஜ் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிறகு ஜொனாதன் டிராட்டின் இரும்பு தடுப்பு மட்டையைத் தாண்டி ஒரு இன்ஸ்விங்கரை வீசி பவுல்டு செய்தார் இஷாந்த்.

உணவு இடைவேளையின் போது வயிற்றில் பய மோட்டார் ஓட இங்கிலாந்து பெவிலியன் சென்றது. ஆனால் 3வது வேகப்பந்து வீச்சாளர் இல்லாத நிலையில் பிரவீண் குமாரும் களைப்படைய இங்கிலாந்தின் பிரையரும், ஸ்டூவர்ட் பிராடும் இங்கிலாந்து சார்பாக ஆட்டத்தைத் திருப்ப முடிந்தது.

இஷாந்த் இது போன்று ஆட்டத்தை வெல்லும் ஸ்பெல்களை இந்தக் குறுகிய காலத்தில் நிறைய முறை வீசியுள்ளார். கடந்த ஆண்டு இலங்கையில் காஏ டெஸ்ட் போட்டியில் மகேலா ஜெயவர்தனேயை ஒன்றுமில்லாமல் செய்தார். ஜெயவர்தனேயிற்கு இஷாந்த் வீசுவது என்னவென்றே புரிய நீண்ட காலமாகிவிட்டது.

ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு தோனி, இஷாந்திடம் கேட்டபோது இஷாந்த் இப்போது பந்து வீசவில்லை என்று கூறியுள்ளார். இதனை நாம் புரிந்து கொள்ள முடியும். உணவு இடைவேளக்கு முன்பாக 11 ஓவர்களை இத்தனை அபார சக்தியுடன் வீசிய இஷாந்த் காயமடைந்தால் இந்தத் தொடரில் இந்திய அணி முடிந்த கதையாகிவிடும். எனவே தோனி மீது தவறில்லை. ஓய்வு கேட்ட இஷாந்தின் மீதும் தவறில்லை.

இந்த டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்யுமேயானால், அடுத்த 3 டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்து அணிக்கு இஷாந்த் பெரும் கவலையாக மாறுவார். அதே போல் பிரவீண் குமாரும் அச்சுறுத்துவார். ஜாகீர் உடற்தகுதி பெற்று விட்டால் இங்கிலாந்து பேட்டிங்கிற்கு சவால் காத்திருக்கிறது.

இல்லையெனினும் ஸ்ரீசாந்த் அணிக்குத் திரும்பினாலும் இங்கிலாந்துக்கு சவால் குறைந்து விடாது. ஏனெனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அங்கே ஸ்ரீசாந்த் திறமையாக வீசி வெற்றிக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டாரா நடுவர்?... கிளம்பிய சர்ச்சை!

மின்னல் வேகக் கேட்ச்… பந்தைத் தேடிய கேமராமேன்… நேற்றையப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

காதலில் விழுந்த ஷிகார் தவான்… இன்ஸ்டாகிராமில் அறிவித்து மகிழ்ச்சி!

“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

Show comments