Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லஷ்மண், ரெய்னாவுக்குப் பதில் ரோகித் ஷர்மா, கோலி - பீட்டர் ரீபக் கருத்து

லஷ்மண், ரெய்னாவுக்குப் பதில் ரோகித் ஷர்மா, கோலி - பீட்டர் ரீபக் கருத்து
, சனி, 27 ஆகஸ்ட் 2011 (15:57 IST)
FILE
இந்தியா, இங்கிலாந்திடம் பெற்ற தோல்விகளிலிருந்து மீற அணியை மறுகட்டுமானம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கிரிக்கெட் பண்டிதரும், பத்தியாளருமான பீட்டர் ரீபக், லஷ்மண், ரெய்னாவுக்குப் பதில் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் ஷர்மா, வீரத் கோலியை சேர்க்கவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

கிரிக்கெட் பத்தி ஒன்றில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

15 ஆண்டுகளாக இந்திய அணி கண்ட வளர்ச்சி நிலை முடிந்து விட்டது. டெஸ்டில் முதலிடமும், ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாம்பியன் பட்டமும் வென்றது.

மறுகட்டுமானம் செய்தேயாகவேண்டும் இல்லையெனில் 2013ஆம் ஆண்டு துவங்கவுள்ள தரநிலையில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இந்தியா தகுதி பெறாமல் போய்விடும்.

ராகுல் திராவிட் தொடர்ந்து துவக்கத்தில் களமிறங்கவேண்டும், செடேஷ்வர் புஜாரா 3ஆம் நிலையில் களமிறங்கவேண்டும், சேவாக் துவங்கவேண்டும். சச்சின் டெண்டுல்கர், கோலி, ரோஹித் ஷர்மா, தோனி என்று வரிசை இருக்கவேண்டும். லஷ்மண் மிகப்பெரிய பேட்ஸ்மென் என்பதில் ஐயமில்லை ஆனால் அவரது ஆட்டம் இங்கிலாந்தில் எடுபடவில்லை. அவர் ஃபீல்டிங்கிலும் மந்தமாக உள்ளார்.

ரெய்னா பின்னங்காலில் சென்று ஆடுவதில் பெரும் பலவீனம் கொண்டுள்ளார். பந்து வீச்சாளர்களில் பிரவீண்குமார், முனாஃப் படேல், ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், மிஷ்ரா தாக்குப் பிடிக்க முடியாது. ஆர்.பி.சிங் தேர்வு முட்டாள்தனமானது. பிரவீண் நன்றாக வீசினார் ஆனால் அவரிடம் கூடுதல் வேகம் இல்லை.

அதனால் ஜாகீர், இஷாந்தை இந்தியா நம்பியிருக்கவேண்டும். மேலும் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை அறிமுகம் செய்யவேண்டும்.

மேலும் இந்தியா புதிய ஸ்பின்னரை அறிமுகம் செய்யவேண்டும். பெரிய தோல்விகள் எப்போதும் மறுகட்டுமானம் செய்வதை அறிவுறுத்துவதாகும். இந்தியா இந்த வாய்ப்பை விரயம் செய்யக்கூடாது. விடாப்பிடியான மனோபாவம் இந்திய அணிக்குத் தேவை.

இவ்வாறு பீட்டர் ரீபக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil