Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்திற்காக கிரிக்கெட் அல்ல என்பதை உணர்ந்தேன் - ராபின் உத்தப்பா

Webdunia
சனி, 30 நவம்பர் 2013 (17:19 IST)
ராபின் உத்தப்பா என்ற ஆக்ரோஷமான துவக்க வீரர் இந்தியாவுக்கு கடைசியாக விளையாடியது 2008ஆம் ஆண்டு. இவர் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இறுதிப் போட்டியில் பிரட் லீயின் பந்தை ஒரு டென்னிஸ் ஷாட் ஆடி நேராக சிக்சர் அடித்ததை மறக்க முடியாது.
FILE

இவரது கிரிக்கெட் கரியர் இன்னும் முடிந்து விடவில்லை. ஐபிஎல். கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடினார். அப்போது ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக கிறிஸ் கெய்ல் ஒரு 175 ரன்களை விளாசியபோது விக்கெட் கீப்பராக இருந்து ரசித்த உத்தப்பா கிறிஸ் கெய்ல்தான் எனக்கு கிரிக்கெட் ஆட்டத்தின் மீது ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.

பெல்ஜியத்திற்கு உத்தப்பா சுற்றுலா சென்ற போது 10 நாட்கள் தனியாக கிரிக்கெட் வாழ்க்கை குறித்து யோசித்துள்ளார்.
FILE

" நான் தன்னந்தனியாக 10 நாட்கள் பெல்ஜியத்தில் கழித்தேன், நான் அப்போது ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது பிரவீண் ஆம்ரேயை அழைத்து உங்களுடன் சேர்ந்து நான் எனது கிரிக்கெட் உத்தியை சரி செய்து கொள்ளவேண்டும் என்றேன்"

அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்ற சச்சின், காம்ப்ளியுடன் பயிற்சி பெற்ற 3வது வீரர்தான் பிரவீண் ஆம்ரே. இவரது கரியரும் பாதியிலேயே முடிந்துபோனது. ஆனால் உத்தப்பாவுக்கு பயிற்சி அளிக்க அவர் ஒப்புக் கொண்டார். ஐபிஎல் 2012-இல் ஆம்ரே உத்தப்பாவுக்கு உதவி செய்தார். அவரது உதவிகள் கைகொடுக்க அவரையே தனது சொந்த பயிற்சியாளராக நியமித்துக் கொண்டார் உத்தப்பா.

FILE

'2011 ஆம் ஆண்டு நான் முடிவெடுத்தேன். எனது திறமையை நான் சரியாக வடிவமைத்துக் கொள்ளவில்லை என்பதை உணரத் தொடங்கினேன். கிரிக்கெட் மீதான எனது ஆரம்பகால புத்துணர்வை மீண்டும் கொண்டு வர விரும்பினேன், கிரிக்கெட் மீதான நேசத்தை மீண்டும் என்னிடம் கோண்டுவர முனைந்தேன். கிரிக்கெட்டை வைத்து பணம் சம்பாதிப்பதோ, அதன் மூலம் ஒரு பொருளாதார வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோ சரியல்ல என்று நினைத்தேன், கிரிக்கெட்டை அதன் தன்மைக்காக ஆடவேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினேன், கிரிக்கெட் வீரர்களில் நான்தான் இப்போது உடல்பலத்துடன் இருக்கிறேன். அதேபோல் உணவில் பெரும் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் கொண்டு வந்தேன். என்கிறார் உத்தப்பா.

ஆம்ரே முதலில் கூறியது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதே. அதன் படி 20 கிலோ உடல் எடையை இழந்தார் உத்தப்பா. இது பிரவீண் ஆம்ரேயை பெரிதும் கவர்ந்துள்ளது.

மேலும்...

FILE
உத்தப்பவிடம் 'பாட்டம் ஹேண்ட்' என்ற ஒரு கோளாறு இருந்தது. அதாவது டிரைவ் ஆடும்போது வலது கையை அழுத்துவது அதிகம் இருந்தது. அதை முதலில் சரி செய்யக்கூறியுள்ளார் பிரவீண் ஆம்ரே. பாட்டம் ஹேண்ட் இருந்தால் என்ன என்று கேட்கலாம் ஆனால் பந்து தரையோடு தரையாக செல்லாமல் காற்றில் செல்லும், கேட்ச் ஆகும். பிறகு பேட்டை பிடிக்கும் விதத்திலும் ஆம்ரே சில அட்ஜஸ்மென்ட்களை பரிந்துரைத்துள்ளார்.

அதேபோல் பந்தை எதிர்கொள்ளும் ஸ்டான்ஸையும் ஆம்ரே மாற்றியுள்ளார். முன்பு அவர் நிற்கும் விதத்தில் கோளாறுகள் இல்லையென்றாலும் ஆம்ரேயின் டிப்ஸிற்குப் பிறகு அவர் 9 போட்டிகளில் 683 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆம்ரே பயிற்சியாளர் ஆன பிறகு உத்தப்பா இந்திய அணிக்குள் மீண்டும் வரும் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments