Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவர் டேரல் ஹார்ப்பரின் மோசமான தீர்ப்புகள்

Webdunia
சனி, 25 ஜூன் 2011 (15:03 IST)
FILE
இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், தோல்வியடைவதற்கான அனைத்து தவறுகளையும் நடுவர்கள் செய்தனர். குறிப்பாக ஆஸ்ட்ரேலிய நடுவர் டேரல் ஹார்ப்பர் மீது தோனியே சூசகமாக விமர்சனம் வைக்கும் அளவுக்கு தீர்ப்புகள் மோசமாக இருந்தது.

" சரியான தீர்ப்புகளை வழங்கியிருந்தால் ஆட்டம் இன்னும் சீக்கிரமே முடிந்து நாங்கள் இந்நேரம் விடுதியில் இருந்திருப்போம்" என்று வெளிப்படையாகவே தோனி குறிப்பிட்டுள்ளார்.

டேரல் ஹார்ப்பர் குறிப்பாக 6 தீர்ப்புகளை தவறாக வழங்கியதாக் அணியின் மூத்த் வீரர் ஒருவர் வெளிப்படையாக குற்றம்சாற்றியுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது டேரல் ஹார்ப்பர் 3வது டெஸ்ட் போட்டியில் நடுவராக பணியாற்றக்கூடாது என்று அனைத்து வீரர்களும் விரும்புவதாக அந்த மூத்த வீரர் குறிப்பிட்டுள்ளார்.

ரைனா, ஹர்பஜன் சிங், தோனி ஆகியோருக்கு அவுட் கொடுத்தது அராஜகத் தீர்ப்புகளாகும். குறிப்பாக தோனிக்கு வீசப்பட்ட பந்து நோ-பால் அதைக்கூட கவனியாத ஒரு நடுவராகச் செயல்பட்டுள்ளார் டேரல் ஹார்ப்பர், ரெய்னாவின் மட்டைக்கும் பந்துக்கும் தொடர்பில்லை. ஹர்பஜன் சிங் எல்.பி.டபிள்யூ.வும் நாட் அவுட்தான்.

இதோடு மட்டுமல்லாது, மேற்கிந்திய அணி 2வது இன்னிங்ஸில் டேரன் பிராவோவுக்கு இருமுறை அவுட் கொடுக்கப்படவில்லை, சந்தர்பாலுக்கு ஒருமுறை கிளீன் அவுட் தரப்படவில்லை.

இந்த 6 மோசமான தீர்ப்புகளையும் நடத்தியவர் டேரல் ஹார்ப்பர். இவர் மோசமான நடுவர் என்று ஐ.சி.சி. உயர்மட்ட நடுவர் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கையின் அசோக டிசிலவாவுக்குப் பிறகு இவர் ஒரு மோசமான நடுவர் என்ற பெயரை எடுத்துள்ளார்!

மேலும் முதல் இன்னிங்ஸில் முதல் போட ்ட ியை விளையாடும் பிரவீண் குமாரை அச்சுறுத்தும் விதமாக பிட்சில் கால் வைத்து சேதம் செய்தார் என்று இனி இந்த முனையிலிருந்து பந்து வீசக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

முதலில் எச்சரிக்கைக் கூட செய்யவில்லை. நேரடியாக தடை! இதனால் ஹார்ப்பர் இந்திய அணிக்கு எதிரான உணர்வுடன் களமிறங்குவதாக் வீரர்கள் மத்த ிய ில் அதிருப்தி நிலவுகிறது.

இதே ஹார்ப்பர்தான் சச்சின் டெண்டுல்கர், மெக்ராவின் பவுன்சருக்குக் குனிந்தபோது பந்து தோள்பட்டையில் பட்டதற்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தார்.

FILE
இதுபோன்ற தீர்ப்புகள்தான் இரு முனையிலும் அந்தந்த அணிகளைச் சாராத நடு வர ை நிறுத்தும் முறையை அமல் செய்ய வைத்தது.

இந்திய அணி வீரர்களில் சிலரும், பி.சி.சி.ஐ.யும் நடுவர் தீர்ப்பு மறுபரிசீலனை கோரல் முறையை எதிர்த்து வருகின்றனர்.

ஒருவேளை இந்திய அணிக்கு எதிராக தவறான தீர்ப்புகளை தொடர்ந்து அளித்தால் அதை விடத் தவறான யு.டி.ஆர்.எஸ். முறைக்கு இந்தியா ஒப்புக் கொள்ளும் என்று திட்டமா என்பது புரியவில்லை.

FILE
யு.டி.அர்.எஸ். முறையில் வெறும் 'ஹாக் ஐ' என்ற பந்தின் போக்கு ஸ்டம்புகளைத் தாக்குமா என்ற ஒன்றை மட்டுமே கொண்டதாக இருந்தால் அதனை ஏற்கமுடியாது என்று இந்திய தரப்பில் கூறுவதில் நியாயம் உள்ளதாகவே தெரிகிறது. அதனுடன் பேட் எட்ஜில் பந்து பட்டதா என்பதைக் காண்பிக்கும் ஹாட் ஸ்பாட்' இன்னும் ஓரிரு தொழில்நுட்பங்கள் சேரும்போதுதான் யு.டி.ஆர்.எஸ். முறை 100% துல்லியமாக இருக்கும்.

இல்லையெனில் இலங்கையில் யு.டி.ஆர்.எஸ்.-ற்கு இந்தியா முதன் முறையாக ஒப்புக் கொண்டபோது அஜந்தா மெண்டிஸின் பந்தை காலில் வாங்கினாலே மேல்முறையீடு செய்யப்பட்டு இந்திய வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

அதன் பிறகு அந்தத் திட்டம் இல்லாதபோது அஜந்தா மெண்டிஸின் பந்து வீச்சிற்கு நேர்ந்த கதியை நாம் அறிவோம்.

இங்கிலாந்து அணி தனது பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆன்டர்சன், டிரெம்லெட், என்று திறமைகளை வைத்திருந்தாலும் கிரகாம் ஸ்வானை இந்திய வீரர்கள் புரட்டி எடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் யு.டி.ஆர்.எஸ். முறை வேண்டும், என்று இதற்கு ஒப்புக் கொள்ளாததால் இந்தியாவை கண்டபடி ஏசியும் வருகின்றனர். யு.டி.ஆர்.எஸ். முறையைக் கொண்டு கிரகாம் ஸ்வானை ஒரு அச்சுறுத்தலாக்க முயல்கிறது இங்கிலாந்து.

ஆனால் இதே அச்சுறுத்தல் அவர்களுக்கும் உண்டு. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்று நாம் இதனை இங்கிலாந்தின் நேர்மை என்று கொள்ள முடியாது. சச்சின், திராவிட், லஷ்மண், சேவாகை யு.டீ.ஆர்.எஸ்.-ஐ வைத்துக் காலி செய்து விட்டால் பிறகு இந்தியா ஒன்றுமில்லை. எனவே அதன் பிறகு இந்தியா சொற்ப ரன்களே எடுக்கும் நிலையில் அதே யு.டி.ஆர்.எஸ். நம்மை ஒன்றும் செய்து விடாது என்ற நினைப்பில்தான் இங்கிலாந்து உள்ளது.

யு.டி.ஆர்.எஸ். இல்லாத நிலையில் நடுவர்கள் ஏன் 3வது நடுவரை கலந்தாலோசிக்கக்கூடாது? நேர்மையாக தீர்ப்பளிக்கவேண்டும் என்றால் சந்தேகம் ஏற்படும்போது ரெஃபர் செய்ய வேண்டியதுதானே? இதில் என்ன தயக்கம்?

நடுவர்களின் தரத்தை உயர்த்துவதை விடுத்து யு.டி.ஆர்.எஸ்.-ஐ ஏற்றுக் கொள்ளாததற்காக இந்திய வீரர்களைச் சாடுவதில் என்ன பயன்?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி படைக்காத மோசமான சாதனை… இந்த ஆண்டில் நடந்திடுமோ?

வைபவ் சூர்யவன்ஷியால் இன்னும் ஓராண்டுக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது?... ஏன் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பின்னடைவு… இளம் வீரர் விலகல்!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த சீசன்.. சிஎஸ்கேவின் மோசமான சாதனை..!

எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் சொத்தாக அவர் இருப்பார்… இளம் வீரரைப் பாராட்டிய தோனி!

Show comments