Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து இந்தியா விலகுகிறது?

Webdunia
வியாழன், 11 ஜூலை 2013 (14:31 IST)
FILE
தென் ஆப்பிரிக்கா இந்திய அணிக்கு எதிரான தொடருக்கான அட்டவணையின் மீது இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க பயணத்திலிருந்தே விலகுமா என்று பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

காரணம் என்ன?

ஐசிசி முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஹரூன் லோர்கட் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்க முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படவுள்ளதை பிசிசிஐ.யின் இடைக்கால நிர்வாகி ஜக்மோகன் டால்மியா கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரூன் லோர்கட் ஐசிசி தலைவராக இருந்தபோது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராகச் செயல்பட்டார் என்று ஒரு குற்றச்சாட்டு இந்திய தரப்பில் இருந்துவந்தது.

இந்த நிலையில் லோர்கட்டை தலைமைப் பதவிக்கு தென் ஆப்பிரிக்கா நியமித்தால் இந்தியா பயணத்திலிருந்தே விலகலாம் என்று லேசான மிரட்டல் விடுத்துள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியில்தான் 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் அட்டவணையை இந்தியா எதிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏன் அட்டவணையை எதிர்க்கிறது என்பதற்கு 7 ஒருநாள் போட்டிகள் அதிகம் என்று கூறியுள்ளது. ஏன் ஆஸ்ட்ரேலியாவை இங்கு 7 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வலியுறுத்தவில்லையா? இங்கிலாந்தில் இந்தியா 7 ஒருநாள் போட்டிகளில் விளையாட வில்லையா?

மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கான இடைவெளியில் திருப்தி இல்லை என்று கூறியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இந்த விஷயங்களையெல்லாம் பேசித் தீர்த்து மாற்றங்கள் செய்யலாம் என்று அமைதியாக பதில் அளித்துள்ளது.

பொதுவாக இவற்றயெல்லாம் கண்டு கொள்ளாத இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது லோர்கட்டை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்போகிறது என்ற செய்தியின் அடிப்படையில்தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது.

இன்னொரு நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் முக்கியப் பொற்ப்பில் யார் இருக்கவேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமா தீர்மானிக்கும்? இது என்ன நியாயம்?

ஊழல் குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ஸ்ரீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் நீடித்தால் எந்த அணீயும் இந்தியா வந்து விளையாடாது என்று டாப் அணிகள் முடிவெடுத்தால் இந்தியா அதனை ஏற்குமா?

தனக்கொரு சட்டம், வழிமுறை அடுத்தவன் என்றால் அவனுக்கு ஒரு சட்டம் வழிமுறை அதுவும் நான் சொல்வதைத்தான் நீ கேட்கவேண்டும்!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆதிக்கம் எப்போது முறியடிக்கப்படும்? என்ற கேள்விகள் பல ஆண்டுகளாகவே ஐசிசி மட்டத்தில் பெரும் பேச்சாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments