Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டனாக தோனி நீடிக்க விரும்பவில்லை?

Webdunia
சனி, 29 மார்ச் 2014 (15:36 IST)
சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சீனிவாசன், தோனி, ஐபிஎல் சூதாட்டம் என்ற சொற்கள் கடந்த சில நாட்களாக அதிகம் புழக்கத்தில் இருந்து வருகிறது. காரணம் உச்சநீதிமன்றம் முட்கல் கமிட்டியின் ஐபிஎல் சூதாட்ட அறிக்கையை மிக சீரியசாக எடுத்துக்கொண்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்ததே.
 
இந்த நிலையில் இதனுடம் தோனியின் நேர்மையையும் சந்தேகிக்கும் விதமான செய்திகள் பரப்பபட்டு வருவதால் தோனி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.
 
மேலும் முட்கல் கமிட்டியிடம் தோனி, குருநாத் மெய்யப்பன் பற்றிய பொயான தகவலை கொடுத்தார் என்று வக்கீல் ஹாரிஸ் சால்வே கூறியிருந்தார்.

இதனாலும் தோனிக்கு கடும் அதிருப்தி நிலவியது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் ஆகியவற்றை தோனி துறக்க முடிவு செய்ததாக தெரிகிறது.
 
இது குறித்து அவர் பிசிசிஐ தலைவர் சீனிவாசனிடம் பேசியதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் தோனியின் இந்த முடிவை நிர்வாகம் ஏற்கவில்லை என்றும் கூறப்ப்டுகிறது. எதுவாக இருந்தாலும் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்தவுடன் தோனி வெளிப்படையாக அறிவிக்கும் வரை கூறுவதற்கில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

Show comments