Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்லா அவமானம்: கிரிக்கெட் மீது அக்கறை இல்லாத பி.சி.சி.ஐ.

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2009 (16:54 IST)
FILE
இன்றைய தினத்தில் ர ூ.10,000 கோடி பண மதிப்புள்ள உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம ், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதும ், ஆட்டக்களத்தின் மீதும் காட்டிவரும் அலட்சியப் போக்கிற்கு சிறந்த உதாரணம ், இலங்க ை- இந்திய அணிகளுக்கு இடையிலா ன 5- வது ஒரு நாள் போட்டி ஆடுவதற்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா லாயக்கற்ற ஆட்டக்களம் என்ற காரணத்தினால ் ரத்து செய்யப்பட்டிருப்பத ு, என்றால் அது மிகையாகாத ு.

இந்தியாவின் மானம் போய்விட்டது என்று பத்திரிக்கைகள ், தொலைக்காட்சி ஊடகங்கள் இதனை ஒரு புறம் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கும் போது, இன்னொரு முக்கியமான விடயத்தையும் வெளியிடாமல் இருந்தது என்பதை நாம் பார்க்கவேண்டும ்.

இந்த போட்டிக்கு முன்பு உள்ளூர் போட்டிகளைய ோ, ரஞ்சி கோப்பை போட்டிகளையோ அல்லது எந்த ஒரு போட்டியையும் கோட்லா மைதானத்தில் நடத்திராத போது, நேரடியாக பரிசோதனை ஆட்டக்களத்தில் சர்வதேச போட்டி ஒன்றை எவ்வாறு நடத்த முடியும ்?

சமீபத்தில் இந்திய ா- ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற் ற 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் போத ு 3 வது ஒரு நாள் போட்டிக்க ு 3 நாட்களுக்கு பிறகு ஐ. ச ி. ச ி. கோட்லா மைதானத்தின் ஆட்டக்களத்தை மேற்பார்வையிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளத ு.

அதாவத ு, இந்த மைதானத்தில் டிசம்பர ் 27 ஆம் தேதி ஒரு நாள் சர்வதேச போட்டி ஒன்று நடைபெறுகிறத ு, அதற்குள் இந்த ஆட்டக்களத்தில் பெரும் முன்னேற்றம் தேவ ை, விளையாடுவதற்கு ஏற்றதாக இதனை மாற்றி அமைக்கவேண்டும் என்று ஐ. ச ி. ச ி. ஆட்டக்கள மேற்பார்வைக் குழுவினர் கடந்த நவம்பர் மாதம ் 4 ஆம் தேதியிலேயே அறிக்கை மூலம் எச்சரித்துள்ளனர ்.

மேலும் சாம்பியன் லீக் போட்டிகள் இங்கு நடைபெற்றபோதும ், ஆட்டக்களம் வீரர்களுக்கு கவலையளிக்கும் வகையில் இருந்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத ு. இந்த எச்சரிக்கைகளை ஊழலுக்கு பேர் போன டெல்லி கிரிக்கெட் சங்கமும ், காசைத் தவிர வேறு எந்தவித சிந்தனையும் இல்லாத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் கிடப்பில் போட்ட ன.

மேலும் கடந் த 5 ஆண்டுகளில் ஒரு ஆட்டக்களம ் 4 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது அல்லது புதிதாக இடப்பட்டுள்ளது என்றால் அது டெல்லி கோட்லா மைதான ஆட்டக்களம் மட்டுமே!

மீண்டும் புதிதாக இடப்படும் ஆட்டக்களங்கள் சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்திற்கு தயாராக குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்று நேற்று வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் களங்கள் கண்காணிப்புக் குழுத் தலைவரான தல்ஜித் சிங் ஏற்கன்வே தெரிவித்துள்ளார ். இதையெல்லாம் மீறி ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராகவும் தற்போது இலங்கை அணிக்கு எதிராகவும் அங்கு ஒரு நாள் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது ப ி. ச ி. ச ி.ஐ.

webdunia photo
FILE
நேற்று கவாஸ்கர் பிட்ச் அறிக்கை கொடுத்தபோத ு, ஆங்காங்கே புற்கள் திட்டுத் திட்டாக இருக்கிறது என்றும், ஏதோ "ஹேர் டிரான்ஸ்பிளாண்ட ்" செய்யப்பட்ட பிட்ச் போல் உள்ளது என்றார ்.

ஐ. ச ி. ச ி. கள கண்காணிப்புக் குழுவின் கருத்துகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மதிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதும் - அதாவது பிட்ச்சில் உள்ள பிரச்சனைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு போதும் திறந்த மனதுடன் விவாதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஐ. ச ி. ச ி. அதிகாரிகளிடம் இருந்து வந்துள்ளது என்பதும் தற்போது தெரியவந்துள்ளத ு.

களத்தின் தன்மைப் பற்றி புரிந்து கொள்ளாமல ், ஆய்வு நடத்தாமல் அதன் மீது இந்திய புற்களை ஆங்காங்கே கவனமற்ற முறையில் வளர்த்ததே இது போன்ற மோசமான ஆட்டக்களங்களை உருவாக்குகிறத ு. அதாவது சத்தற்ற புற்களை களத்தின் நடுவே வளர்ப்பது அதன் மண் தன்மையை உயிரற்றதாகவும ், நொய்மையாகவும் செய்து விடுகிறத ு. இதனால் அபாயகரமான முறையில் பந்துகள் எழும்புவத ு அல்லது எழும்பாமல் காலுக்கு அடியில் பூந்துச் செல்வதும் நிகழ்கிறத ு.

ஆனால் இதெல்லாம் ப ி. ச ி. ச ி.ஐ. க்கு தெரியாதா என் ன? என்ன செய்துவிட முடியும் என்ற திமிர்தான் இதற்கெல்லாம் காரணம ்.

போட்டிக்கு முன்பே ஆட்டக்களம் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை என்று சேவாக் தெரிவித்தார ்.

1997 ஆம் ஆண்டும் இதே போன்று இலங்கைக்கு எதிராக ஒரு போட்டி, ஆட்டக்களத்தின் மோசமான தன்மை காரணமாக ரத்து செய்யப்பட்டத ு.

ஜமைக்காவிலும் இது போன்று ரத்து செய்யப்பட்டுள்ளத ே, என்று கேட்டால் ஏன் லார்ட்சில ோ, மெல்போர்னிலோ ரத்து செய்யப்படுவதில்லையே என்று நாம் திருப்பிக் கேட்க வேண்டியதுதான ்.

மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் விளையாடும் வீரர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாமல் தத்தளிக்கும் ஒரு கிரிக்கெட் வாரியமாகும ். இங்கு அப்படிய ா? பணம் கொழுத்துக் கிடக்கும் ப ி. ச ி. ச ி.ஐ. தங்களுக்கு எதனால் இந்தப் பணம் சேர்ந்தது என்பதைப் பற்றி அலட்சியமாக இருப்பதுதான் இதற்கு காரணம ். கிரிக்கெட்டினால்தான் இவ்வளவு பணம் சேர்ந்துள்ளத ு, ஆனால் நல்ல கிரிக்கெட்டிற்கு மூலக்காரணமான நல்ல பிட்ச்கள் அமைப்பதற்கு பணம் செலவழிப்பதில்ல ை.

மத்திய அரசிலும ், மாநில அரசிலும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் துறையை ஆக்கிரமித்து கொள்ளை கொள்ளையாக பணம் ஈட்டியவர்களும ், கிரிக்கெட் தெரியாத தொழிலதிபர்களும் கிரிக்கெட் வாரியத்தில் புகுந்து நிர்வாகம் நடத்துவதுதான் இதுபோன்ற அவமானங்களுக்குப் பெரிதும் வழிவகுக்கிறத ு.

கிரிக்கெட் அரசியலின் பங்கு!

ஏனெனில் இவர்கள் அரசியல் எதிரிகளைக் கட்டமைத்து வருவது போல், தங்களது மோசமான செயல்களால் கிரிக்கெட் வாரியத்திலும் எதிரிகளையும ், அதிருப்தியாளர்களையும் உருவாக்கி வருகிறார்கள ்.

கொல்கட்டாவில் ஒரே ஒரு விளக்கு மட்டும் பழுதடைந்து ஆட்டம் திடீரெ ன 49.2 ஓவர்களுக்குக் பிறகு நிறுத்தப்பட்டத ு. அது எப்படி ஒரே ஒரு விளக்குக் கம்பம் மட்டும் பழுதடையும்? அதன் ஒழுங்கமைவு எல்லாம் வலைப்பின்னல் அமைப்புதான ே? இதிலும் சதி இருக்கலாம் என்று பிறகு கூறினார்கள ்.

FILE
ஏன் சதி நடப்பதாகக் கருதவேண்டும ்? ஏனெனில் ப ி. ச ி. ச ி.ஐ. யில் மனோகர ், பவார ், ஸ்ரீனிவாசன் ஆகியோர் கொண்டக் குழு ஒருபுறம ், வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவர் டால்மியா குழு ஒருபுறம் என்று அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளத ு. தான் பதவிக்கு வந்த பிறகு டால்மியா ஊழல் செய்துவிட்டார் என்று இவர் குற்றம்சாட்டுவதும ், அவர் உடனே பவார் தலைமை ப ி. ச ி. ச ி.ஐ. எப்படி இயங்குகிறது என்றும் எதிர்க் குற்றச்சாற்றுக் கூறி அரசியல்வாதிகளை விடவும் கேவலமாக ஒருவர் மீது ஒருவர் சேறுவாரி அடித்துக் கொண்டு வழக்குகளை தொடர்கின்றனர ்.

மேலும் கொல்கட்ட ா, ஈடன் கார்டன் மைதானத்தில் ஏன ் 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டி நடத்தப்படுவதில்ல ை? காரணம் நமக்கு விளக்கப்படாத ஒரு புதிர ்!!

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு முறை கொல்கத்த ா, சென்னை போன்ற மைதானங்களில் டெஸ்ட் போட்டியை நடத்துங்கள் என்று வெளிப்படையாகவே கேட்டத ு. ஆனால் ப ி. ச ி. ச ி.ஐ. ஏதோ சுழற்சி முறை என்றெல்லாம் காரணம் கூறி தட்டிக் கழித்தனர ்.

கொல்கட்டாவை இது போன்று ஒழித்ததனால் அன்று விளக்கு அணைந்தது என்று கூட நாம் யோசிக்க இடமுண்ட ு. அதே போல் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் வீரர்கள் தேர்வு முறையில் உள்ள ஊழல்களை எதிர்த்து சேவாக ், கம்பீர் உள்ளிட்ட வீரர்கள் போர்க்கொடி உயர்த்தியபோது ப ி. ச ி. ச ி.ஐ. சேவாகிற்கு ஆதரவு தெரிவித்து டெல்லி கிரிக்கெட் சங்கத்தை கண்டித்தத ு. எனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை பழிவாங்க மேற்கூறிய சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்படுகிறத ு.

ஆட்டக்களங்களில் கவனம் செலுத்தாமல் பதவி மோகம் பிடித்தலையும் லலித் மோடி உள்ளிட்டவர்களின் சொந்த வளர்ச்சிக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்ற ஒன்று செயல்படுகிறதோ என்ற ரீதியிலும் நாம் கவனிப்பது நல்லத ு.

FILE
உடனே ஆட்டக்களக் குழுவை கலைத்துவிட்டால் அது முடிவான தீர்வாகிவிடும ா? இதெல்லாம் கண்துடைப்பு வேல ை. தில்ஷான ோ அல்லது ஜெயசூரியாவோ நேற்று அடிப்பட்டு காயம் அடைந்திருந்தால் அல்லது காயம் தீவிரமடைந்து அவர்கள் ஒர ு 6 மாத காலம் கிரிக்கெட் விளையாட முடியாது போனாலோ அல்லது அவர்கள் கிரிக்கெட் வாழ்வே கேள்விக்குறியாகியிருந்தாலோ ப ி. ச ி. ச ி.ஐ. அதற்கு பொறுப்பேற்கும ா? அப்படி பொறுப்பேற்றாலும் அது அவர்களின் கிரிக்கெட் வாழ்வை மீட்டெடுப்பதாகும ா?

ஹாக்கி வழியில் கிரிக்கெட ்

இந்தியா முதலில் பேட் செய்த ு, சேவாக ், கம்பீர் உள்ளிட்ட வீரர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால ்? இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத ஒரு கிரிக்கெட் வாரியம் உடனடியாக கலைக்கப்படுவதுதான் நியாயம ்.

ஏனெனில் இது போன்ற சிறு சிறு விவகாரங்கள்தான் பூதாகாரமாக மாறி இந்தியாவில் ஹாக்கி விளையாட்டையே இன்று குழி தோண்டிப் புதைத்துள்ளத ு.

முதலில் ஐ. ச ி. ச ி., இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பண பலத்தை கண்டு அஞ்சுவதை நிறுத்தவேண்டும ். பிறகு உடனடியாக டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு ஐ. ச ி. ச ி. கள விதிமுறைகளின் பட ி 2 ஆண்டுகள் தடை விதிக்கவேண்டும ்.

2011 ஆம் ஆண்ட ு உலகக் கோப்பை போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மைதானங்களின் களங்களை மேலும் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தேறாத மைதானங்களைய ோ அல்லது திருப்தியில்லையெனில் உலகக் கோப்பை கிரிக்கெட்டை ஒட்டுமொத்தமாக வேறு நாட்டிற்கு மாற்றவோ செய்ய வேண்டியது ஐ. ச ி. ச ி. யின் கடமையாகும ்.

இது போன்று பாகிஸ்தானில ோ, வங்கதேசத்தில ோ, ஜிம்பாப்வேயிலோ நடந்திருந்தால் ஐ. ச ி. ச ி. அந்த கிரிக்கெட் சங்கங்களை முடக்குவதற்கு இந்தியாவின் உதவியுடன் எப்படியெல்லாம் சிந்திக்குமோ அது போன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும ்.

ப ி. ச ி. ச ி. ஐ.யின் செயல்பாடுகளை விளக்கும் ஒரு பெரிய பனிப்பாறையின் முகடு மட்டுமே நமக்கு இதன் மூலம் தெரியவந்துள்ளத ு. சம்பந்தப்பட்டவர்கள ் (ஐ. ச ி. ச ி.) விழித்துக் கொள்வது சிறந்தத ு!

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments