Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெய்லின் அதிரடியை நம்பியிருக்கும் மேற்கிந்திய அணி

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2011 (11:32 IST)
webdunia photo
FILE
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லும் என்று உறுதியாகக் கணிக்க முடியாமலும், மோசமாகத் தோல்வி தழுவும் என்று நிர்ணயம் செய்ய முடியாமலும் உள்ள ஒரே அணி மேற்கிந்திய அணிதான். ஆனால் ஓரிரு அதிர்ச்சி வெற்றிகளைப் பெற்றால் இந்த அணியின் உணர்வு எந்த அளவுக்கு அதனை உயர்வுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் எளிதில் கூறவியலாது.

முந்தைய உலகக் கோப்பைப் போட்டிகள ்

1975 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இந்த அணியின் உலகக் கோப்பை வெற்றிகள் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். 57 உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள மேற்கிந்திய அணி 35 போட்டிகளில் வெற்றியும் 21 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.

1987 ஆம் ஆண்டு காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கார்ட்னி வால்ஷின் விளையாட்டு உணர்வுடன் கூடிய பெருந்தன்மையான செயல்பாட்டினால் மேற்கிந்திய அணி வெற்றி வாய்ப்பை பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுத்தது என்றால் மிகையாகாது.

கார்ட்னி வால்ஷ் ஓடி வந்து பந்து வீசாமல் நின்றபோது பாகிஸ்தானின் கடைசி பேட்ஸ்மென் சலீம் ஜாஃபர் ரன்னர் முனையில் கிரீஸை விட்டு வெகுதூரம் வெளியே சென்றார். வால்ஷ் பைல்களை அகற்ற ிய ிருந்தால் வெஸ்ட் இண்டீஸுக்கு வெற்றி. ஆனால் வால்ஷ் அவரை உள்ளே வருமாறு செய்கை செய்தது இன்று வரையிலும் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு பெரும் எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. அடுத்த பந்து எதிர்முனையில் இருந்த அப்துல் காதிரால் சிகருக்கு தூக்கி அடிக்கப்பட பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது என்பது வேறு விஷயம்.

1996 ஆம் ஆண்டு மேற்கிந்திய அணி ரிச்சி ரிச்சர்ட்சன் தலைமையில் பிரயன் லாரா என்ற நட்சத்திரத்துடன் சற்றே பலமான அணியாகக் களமிறங்கியது.பந்துவீச்சில் ஆம்புரோஸ், வால்ஷ், இயன் பிஷப் என்று அச்சுறுத்தும் வரிசை இருந்தது.

ஃபிப்ரவரி 29ஆம் தேதி 1996ஆம் ஆண்டு மேற்கிந்திய அணியின் கறுப்பு நாள் என்றால் அது மிகையாகாது. ஏற்கனவே இந்தியாவுடன் தோற்று களமிறங்கிய மேற்கிந்திய அணி கென்யா நிர்ணயித்த 167 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 93 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சித் தோல்வி தழுவியது.

அனைவரும் மேற்கிந்திய அணியின் கதை முடிந்தது. அவ்வளவுதான் என்று பேசத்தொடங்கினார்கள். ஆனால் பிப்ரவரி 26ஆம் தேதி ஆஸ்ட்ரேலியாவைச் சந்தித்த இதே அணி அதிசயிக்கத் தக்க வகையில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலியா ரிக்கி பாண்டிங்கின் சதத்துடன் 50 ஓவர்களில் 229 ரன்களை எடுத்தது.

இலக்கைத் துரத்திய மேற்கிந்திய அணியில் பிரையன் லாரா 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது 113/3 என்று தத்தளிக்கும் நிலைமைக்குத் தள்ளபட்டது. உடனேயே சந்தர்பாலும் ஆட்டமிழந்தார். 146/4. ஆனால் ரிச்சி ரிச்சர்ட்சன் ஒரு முனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இவரும் ரோஜர் ஹார்ப்பரும் இணைந்து ஸ்கோரை 194 ரன்களுக்குக் கொண்டு வந்தனர். கடைசியில் ரிச்சர்ட்சன் 93 ரன்களை எடுக்க ஜிம்மி ஆடம்சுடன் வெற்றியைச் சாதித்து மேற்கிந்திய அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

webdunia photo
FILE
கென்யாவுடன் தோற்று ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியது. ஆனால் காலிறுதியில் குரோனியே தலைமை பலமான தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க வேண்டிய கட்டாயம். தென் ஆப்பிரிக்க அணி குரோனியே தலைமையில் 10 ஒருநாள் சர்வதேச போட்டிகளை தொடர்ச்சியாக வென்று களமிறங்கிய தருணம்.

மார்ச் 11ஆம் தேதியன்று பாகிஸ்தானின் கராச்சியில் இந்தக் காலிறுதி நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய அணியின் கேப்டன் ரிச்சர்ட்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சந்தர்பால் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். 42/1 என்ற நிலையில் சந்தர்பாலுடன் இணைந்த பிரையன் லாரா அன்று தனது வாழ்நாளின் சிறந்த ஒரு நாள் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 94 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் எடுத்து அதிர்ச்சியளித்தார். தென் ஆபிரிக்காவின் உயரமான ஆஃப் ஸ்பின்னர் பேட் சிம்காக்ஸின் ஒரே ஓவரில் லாரா 22 ரன்களை விளாசியது பசுமையான நினைவு. சந்தர்பாலுடன் இவர் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு சேர்த்த 138 ரன்கள் உலகக் கோப்பையில் மேற்கிந்திய அணியின் புதிய சாதனையாக அமைந்தது. 50 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்தது மேற்கிந்திய அணி.

இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா கல்லினனின் அரைசதத்துடன் 140/2 என்ற நிலையில் கல்லினன் விக்கெட்டை இழந்தது. குரோனியே 40 ரன்களில் ஆட்டமிழக்கும்போது தென் ஆப்பிரிக்கா 186/4. ஆனால் ரோஜர் ஹார்ப்பர், ஜிம்மி ஆடம்ஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா 49.3 ஓவர்களில் 245 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சித் தோல்வி தழுவியது. லாரா ஆட்ட நாயகன்.

அரையிறுதியில் ஆஸ்ட்ரேலியாவை மொஹாலியில் மேற்கிந்திய அணி சந்தித்த போது உலகம் முழுதும் ஆஸ்ட்ரேலிய அணி தோற்கவேண்டும் என்பது பிரார்த்தனையாக இருந்தது. மொஹாலியில் மேற்கிந்திய அணிக்கு அபரிமிதமான ஆதரவு.

டாஸ் வென்ற மார்க் டெய்லர் பேட்டிங்கைத் தேர்வு செய்ய வே கப ்பந்துக்கு ஆதரவான ஆட்டக்களத்தில் மார்க் வாஹ், டெய்லர், பாண்டிங், ஸ்டீவ் வாஹ் ஆகியோரை ஆம்புரோசும், இயன் பிஷப்பும் அடுத்தடுத்து வீழ்த்த 15/4 என்று துவங்கியது ஆஸ்ட்ரேலிய ா, மைதானத்தில் ஆரவாரம் பெருகியது.

ஆனால் ஸ்டூவர்ட் லா, மைக்கேல் பெவன் மெதுவே இடிபாடுகளைச் சரி செய்யத் துவங்கினர்.இருவரும் இணைந்து 138 ரன்களை 5-வது விக்கெட்டுக்குச் சேர்த்தனர். லா 72 ரன்களையும் மைக்கேல் பெவன் 69 ரன்களையும் எடுக்க இயன் ஹீலி 31 ரன்களை எடுத்தார். மேற்கிந்திய அணி 50 ஓவர்களில் 207 ரன்களையே எடுத்தது.

இலக்கைத் துரத்தக் களமிறங்கிய போது சந்தர்பால், பிரவுன் ஆடத் துவங்கினர். பிரவுன் வார்ன் பந்தில் ஆட்டமிழந்தார். 25/1 என்று துவங்கிய லாராவும், சந்தர்பாலும் அபாரமாக விளையாடினார்கள். லாரா 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஸ்டீவ் வாஹ் பந்தில் பவுல்டு அனார். 93/2. ரிச்சி ரிச்சர்ட்சன் களமிறங்கி சந்தர்பாலுடன் இணைந்து அபாரமான முறையில் விளையாடி ஸ்கோரை 164 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். தேவை இன்னனும் 9 ஓவர்களில் 43 ரன்களே. அப்போது சந்தர்பால் 80 ரன் கள ில் மெக்ராவிடம் வீழ்ந்தார். அப்போது பிடித்தது மேற்கிந்திய அணியின் சமீபத்திய வியாதி.

ஹார்ப்பரை மெக்ரா வீழ்த்த கிப்சன், ஆடம்ஸ் ஆகியோரை வார்ன் வீழ்த்த ஆர்த்தர்டன், பிஷப் ஆகியோரும் வெளியேற 194/8 என்று ஆ னது. ரிச்சி ரிச்சர்ட்சன் ஒரு முனையில் நின்று கொண்டிருக்கிறார். கடைசி ஓவரை ஸ்டீபன் பிளெமிங் வீச வருகிறார். வெற்றி பெறத் தேவை 10 ரன்கள்.

பிளெமிங் வீசிய முதல் பந்தை ரிச்சி ரிச்சர்ட்சன் பவுண்டரிக்கு விரட்ட ஸ்கோர் 202 ரன்களானது. 5 பந்துகளில் 6 ரன்கள் தேவை. அந்த சமயத்தில் ரிச்சி ரிச்சர்ட்சன் ஸ்ட்ரைக்கைத் தன் பக்கம் வைத்துக்கொள்ளாமல் குடுகுடுவென ஒரு ரன் எடுக்க முயல ஆம்ப்ரோஸ் ரன் அவுட் என்று டி.வி. ரீப்ளேயில் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த பந்தை கார்ட்னி வால்ஷ் ஏதோ நினைவில் ஒரு சுழற்று சுழற்ற பவுல்டு ஆனார். ரிச்சி ரிச்சர்ட்சன் ஒரு முனையில் 49 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக சோகத்துடன் வெளியேறினார்.

இந்த உலகக் கோப்பைதான் மேற்கிந்திய அணி சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடிய கடைசி உலகக் கோப்பை அதன் பிறகு 1999, 2003, 2007 உலகக் கோப்பை போட்டிகளில் இந்த அணி அரையிறுதியை எட்டிப்பார்க்கவில்லை என்பதோடு வீழ்ச்சிப்பாதையிலும் சென்றது. அதன் பிறகு ஒரேயொரு முறை சாம்பியன்ஸ் டிராபியை வென்றது மேற்கிந்திய அணி.

மொத்த ஒருநாள் போட்டிகளும், இந்த உலக கோப்பையும்

2000 ஆம் ஆண்டு முதல் 2011 தற்போது வரை மேற்கிந்திய அணி 252 போட்டிகளில் 100 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 135போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. 2010/11 ஆம் ஆண்டில் 20 போட்டிகளில் 6-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது 12 தோல்விகளைச் சந்தித்துள்ளது.

எனவே புள்ளிவிவரங்கள் அந்த அணிக்குச் சாதகமாக இல்லை. ஆனால் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணியின் கிறிஸ் கெய்ல் என்ற ஒருவர் நினைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 15 ஆட்டங்களில் 434 ரன்களையே அவர் எடுத்துள்ளார். ஒரு சதம் 2 அரைசதம்தான் எடுத்துள்ளார். ஆனால் 223 ஒருநாள் போட்டிகளில் 19 சதம் 42 அரை சதங்களுடன் 7917 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 39. ஸ்ட்ரைக் ரேட் 83.74. இவரது கூடுதல் பலம் ஜெயசூரியா போல் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சை சிக்கனமாக வீசுவதோடு முக்கிய விக்கெட்டுகளையும் சில சமயங்களில் வீழ்த்தி விடுவார்.

இவரை விட அனுபவசாலியான சந்தர்பால் அணியில் உள்ளார். ஆனால் அவரது ஃபார்ம் அவ்வளவாக சரியில்லை. சர்வாணின் அனுபவமும் கைகொடுக்கும் ஆனால் இவரெல்லாம் மேட்ச் வின்னர்கள் இல்லை. நடுக்கள வரிசையில் டேரன் பிராவோ என்ற புதிய இடது கை அதிரடி வீரரின் வருகை பலம் சேர்க்கும் ஆனால் உலகக் கோப்பை அழுத்தம் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா அளிக்கும் நெருக்கடி என்று இவரைப்பற்றி எளிதில் ஊகிக்க முடியவில்லை. துவக்கத்தில் அட்ரியன் பரத் நம்பிக்கை அளிக்கிறார்.

புதிய அதிரடி மன்னன் கெய்ரன் போலார்ட் இருபது ஓவர் ஆட்டங்கள் அளவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை பெரிதாக அச்சுறுத்தவில்லை. ஆனால் இவர்களையெல்லாம் நம்ப முடியாது. திடீரென ஆட்டம் பிடித்து விட்டால் 10 ஓவர்கள் 100 ரன்கள் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிடும். டெவன் ஸ்மித் என்ற ஹ ிட்டரும், ஆல்ரவுண்டரும் உள்ளார்.

பந்து வீச்சில் கேமர் ரோச், மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் தவிர மற்ற வ ீச ்சாளர்கள் அதிகம் அறிமுகமில்லாதவர்கள் இந்த இடமும் மிடில் ஆர்டரும் மேற்கிந்திய அணியின் பலவீனங்கள்.

வங்கதேசத்திடமும் தோல்வி தழுவும் வாய்ப்புகளு டன ்தான் இந்த அணி களமிறங்குகிறது. எப்படியும் காலிறுதிக்குள் நுழைந்து விட்டாலும் அதில் முதல் போட்டியிலேயே கிறிஸ் கெய்லுக்கு ஆட்டம் பிடித்துக் கொண்டால் இந்த அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். எனவே எதுவும் கூறவியலாது. ஆனால் வங்கதேசம், அயர்லாந்து அணிகளும் இந்த அணிக்கு சவால் ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

காலிறுதியில் ஏதாவது ஒரு பெரிய அணியை வெளியேற்றி அரையிறுதியில் மோசமாகத் தோல்வியைக்கூட இந்த அணி தழுவலாம். இதனால்தான் இந்த அணியை நாம் குறைத்தும் மதிப்பிட முடியாது, வெற்றி பெறும் என்று உறுதியாகவும் கூறிவிடமுடியாது.

இந்த அணியை பி-பிரிவில் ஒரு எக்ஸ்-ஃபேக்டர் என்று கருத இடமுண்டு. ஆனால் ஏகப்பட்ட எக்ஸ்-ஃபேக்டர்கள் உள்ளது, வங்கதே சமும ், அயர்லாந்தும் எக்ஸ்-ஃபாக்டர்கள்தான். மேற்கிந்திய அணியை ஒப்புநோக்கும்போது வங்கதேச அணி சற்றே ஒருங்கிணைப்பு பெற்றுள்ள அணி என்று கூறலாம். எனவே இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு பிற 3 அணிகள் அச்சுறுத்தல் என்றால் மேற்கிந்திய அணிக்கு ஹாலந்து தவிர அனைத்து அணிகளும் அச்சுறுத்தல்தான்.

இந்த நிலையில்தான் இந்த அணி களமிறங்குகிறது. ஆனால் கிரிக்கெட் ஆட்டம் பற ்றி அடிக்கடி சொல்லும், சலித்துப்போன பழமொழியை நாம் நினைவில் வைத்துக் கொள்வதும் நல்லத ு:

" Cricket is a game of glorious Uncertain-ties"!

மேற்கிந்திய அணி விவரம்: டேரன் சம்மி (கேப்டன்), கிறிஸ் கெய்ல், அட்ரியன் பரத், சர்வாண், சந்தர்பால், டேரன் பிராவோ, டிவைன் பிராவோ, கார்ல்டன் பாஹ்(வி.கீ.), சுலைமான் பென், கேமர் ரோச், டெவன் ஸ்மித், கெய்ரன் போலார்ட், ரவி ராம்பால், நிகிடா மில்லர், ஆந்த்ரே ரஸல்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டாரா நடுவர்?... கிளம்பிய சர்ச்சை!

மின்னல் வேகக் கேட்ச்… பந்தைத் தேடிய கேமராமேன்… நேற்றையப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

காதலில் விழுந்த ஷிகார் தவான்… இன்ஸ்டாகிராமில் அறிவித்து மகிழ்ச்சி!

“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

Show comments