Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளென் மெக்ராவின் 4- 0 ஆரூடமும், வரலாறும்!

கிளென் மெக்ராவின் 4- 0 ஆரூடமும், வரலாறும்!
, திங்கள், 2 ஜனவரி 2012 (11:14 IST)
FILE
இந்தியாவுக்கு எதிரான நடப்பு தொடரில் ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியாவை 4- 0 என்று ுற்றொழிப்பு (White wash) செய்யும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா ஆரூடம் கூறியுள்ளார்.

இவர் ஏற்கனவே 2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை 5- 0 என்று ஒழிப்போம் என்று கூறியபோது ஆஸ்ட்ரேலியா 1- 2 என்று மண்ணைக்கவ்வி ஊர் திரும்பியது.

பிறகு மீண்டும் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தலைமை இங்கிலாந்துடன் இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் விளையாடியபோதும் இவர் 5- 0 என்று ஆரூடம் கூறினார். அப்போதும் 1- 2 என்று ஆஸ்ட்ரேலியா மண்ணைக்கவ்வியது.

மீண்டும் இங்கிலாந்து அணி ஆஸ்ட்ரேலியா சென்றபோதும் இதே கிளென் மெக்ரா ஆஸ்ட்ரேலியா 3- 1 என்று வெல்லும் என்று இங்கிலாந்துக்கு பெருந்தன்மையாக ஒரு வெற்றியை தன் ஆரூடத்தில் அளித்தார். ஆனால் 3- 1 என்று இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இவ்வாறாக தவறான ஆரூடம் கணித்துள்ள கிளென் மெக்ரா இப்போது இந்தியா 0- 4 என்று உதை வாங்கும் என்று கூறியுள்ளார். இதனாலேயே இந்தத் தொடர் இந்தியாவுக்குச் சாதகமாக அமையும் என்று நாம் தவறாக நினைத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.

ஒருவேளை, மெக்ரா கூறிவிட்டார் எனவே இந்தியா வெற்றி பெறும் என்று தவறான நம்பிக்கைக்குள் இந்திய ரசிகர்களை செலுத்தி வேடிக்கை பார்க்கிறாரோ கிளென் மெக்ரா!

கிரிக்கெட்டைப் பார்க்கும்போது பொங்கும் இந்திய தேசப்பற்றாளர்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் போலிருக்கிறது கிளென் மெக்ரா!

அதுவும் "நிச்சயம் 4- 0 என்று வெற்றி பெறுவோம்" என்று கண கச்சிதமாக ஆரூடம் தெரிவிக்கிறார் கிளென் மெக்ரா.

மெல்பர்ண் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியாவைச் சுருட்டியவர் ஹில்ஃபென் ஹாஸ், இரண்டாவது இன்னிங்சில் புகுந்தவர் மீண்டும் பீட்டர் சிடில். இவர்களை விடுத்து கிளென் மெக்ரா, ஜேம்ஸ் பேட்டின்சன் இந்திய வீரர்களுக்குள் ஊடுருவதைப் பார்க்கும்போது தான் அசந்து போவதாகக் கூறியுள்ளார்.

பேட்டின்சன் இடையிடையே ஒரு சில நல்ல ஓவரகளை வீசுகிறார். மற்ற படி அவர் விக்கெட் வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பினால் ஏதோ அபாயகரமான பந்து வீச்சாளர் போல் தெரிகிறார். ஆனால் அவர் உண்மையில் வேக ஆட்டக்களங்களில் அபாய வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கிளென் மெக்ரா அவரை உசுப்பேற்றும் அளவுக்கு அதற்குள் அவரை நாம் கணித்து விட முடியாது.

மெக்ரா கூறியிருக்கிறார் 4- 0 ஆஸ்ட்ரேலிய வெற்றியை! அனேகமாக ஆஸ்ட்ரேலிய கேப்டனும், ஆஸ்ட்ரேலிய வீரர்களுமே மெக்ராவின் ஆரூடத்தைக் கண்டு பயந்திருப்பார்கள். ஏனெனில் ஏற்கனவே மெக்ரா கூறியதற்கு எதிர்மறையாகவே அனைத்தும் நடந்துள்ளது.

ஒருவேளை மெக்ராவின் ஆரூடம் ஆஸ்ட்ரேலிய வீரர்களை மேலும் கவனமாக இருக்க பணிக்குமோ என்னவோ!

Share this Story:

Follow Webdunia tamil