கிரண் மோரைத் தொடர்ந்து கபிலும் பி.சி.சி.ஐ. க்குள் நுழைவாரா?

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2012 (12:52 IST)
FILE
சுபாஷ் சந்திராவின் இந்தியன் கிரிக்கெட் லீக் ஒருங்கிணைப்பாளராக இருந்ததால் பி.சி.சி.ஐ.-யால் ஒதுக்கப்பட்ட இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் மீண்டும் பி.சி.சி.ஐ. செயல்பாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே ஐ.சி.எல். கிரிக்கெட்டில் கபிலுடன் சென்ற விக்கெட் கீப்பர் கிரண் மோர் தனக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்க அவருக்கு பி.சி.சி.ஐ. மன்னிப்பு வழங்கியுள்ளது.

இதனையடுத்து அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயல்பாடுஅக்ளில் அங்கம் வகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னிப்பு, கின்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று கபில்தேவ் தீவிரமாக மறுத்து வரும் நிலையில் அவரை பி.சி.சி.ஐ. மீண்டும் செயல்பட அழைக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் என்.ஸ்ரீனிவாசனை கபில்தேவ் சந்தித்ததாகவும் இதனால் சமரசம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கபப்ட்டு வருகிறது.

கபில்தேவ் ஏற்கனவே மைதானம் மற்றும் ஆட்டக்கள கமிட்டியின் தலைவராக பணியாற்றினார். பிறகு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார் கபில்தேவ்.

தற்போது ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட்டை தீவிரப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல முயற்சிகளை நடைமுறைப்படுத்தும் வேளையில் கபில் போன்ற ஒருவர் பி.சி.சி.ஐ.க்கு தேவைப்பட்டிருக்கலாம். அல்லது அவரது தேவை பல விதங்களில் நன்மை பயக்கும் என்று பி.சி.சி.ஐ. நினைத்திருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும் கபில் போன்ற ஒரு கிரிக்கெட் நாயகனை ஒதுக்கும் போக்கை பி.சி.சி.ஐ. கைவிடுவதே இந்திய கிரிக்கெட்டிற்கு நல்ல அறிகுறிதான்!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WWE ஜாம்பவான் ஜான் சீனா ஓய்வு: கடைசி போட்டியில் தோல்வி.. ரசிகர்கள் வருத்தம்..

தொடர்ந்து மோசமான பார்மில் சுப்மன் கில்.. மோசமான சாதனை படைத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

மெஸ்ஸியை சந்திக்க தேனிலவை ரத்து செய்த புது மண தம்பதி: 15 வருடங்களாக தீவிர ரசிகை..!

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

Show comments