Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல்.: நெகிழ்ச்சியுடன் ஓய்வு பெற்றார் ஷேன் வார்ன்

Webdunia
சனி, 21 மே 2011 (13:09 IST)
PTI Photo
FILE
4 ஆண்டுகள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சவாலான தன்மையையும் போட்ட ி மனப்பான்மையையும் உருவாக்கிய ஷேன் வார்ன் நேற்று தனது தலைமையில் கடைசி வெற்றியுடன் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் வருவதற்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்ட ஷேன் வார்ன், 20 ஓவர் கிரிக்கெட்டின் நுணுக்கங்களை மிகுந்த புத்தி சாதுரியத்துடன் நிகழ்த்திக்காட்டியுள்ளார் என்றால் மிகையாகாது.

ஷேன் வார்ன் ஏன் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ், மார்க் டெய்லர் ஆகியோரை விட மிகவும் சிறந்த கேப்டன் என்பது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது தலைமை வழி நடத்துதலைப் பார்த்து ஒருவர் புரிந்து கொள்ளலாம்.

பந்து வீச்சில் மாற்றம், கள வியூகம், வீரர்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல் ஆகியவை மட்டுமல்லாது இளம் வீரர்களை ஒரு பெரிய கிரிக்கெட்டிற்குத் தயார்படுத்தியது என்ற அளவில் வார்ன் இந்திய கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய பணியாற்றியுள்ளார் என்றே கூறவேண்டும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது அபாரத் தலைமை வழி நடத்துதலால் மட்டுமே சாம்பியன் பட்டத்திற்கு இட்டுச் சென்றார்.

இவர் ஆஸ்ட்ரேலியாவுக்காக 10 ஒருநாள் போட்டிகளுக்கு தலைமைப் பொறுப்பு வகித்துள்ளார். அதில் 9-இல் வெற்றி பெற்றுள்ளார் ஷேன் வார்ன். இது சாதாரண சாதனையல்ல.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் ஸ்வப்னில் அஸ்னோட்கர் என்ற அதிரடி ஆட்டக்காரரை உலகிற்கு அறிமுகம் செய்தார். முனாஃப் படேலின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அவரை ஊக்குவித்தார்.

அதேபோல் நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மெனாரியா என்ற வீரரை பெரிதும் ஊக்குவித்தார். சாலுங்கே என்ற லெக் ஸ்பின்னர், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை இந்திய கிரிக்கெட்டிற்கு அறிமுகம் செய்துவித்தார். இது போன்று ஷேன் வார்ன் ஏராளமான இளம் திறமைகளை ராஜஸ்தான் கிரிக்கெட்டிற்கும், இந்திய கிரிக்கெட்டிற்கும் அளிப்பதில் பங்களிப்பு செய்துள்ளார்.

PTI Photo
FILE
இப்போது கூட அவர் சவான், மெனாரியாவின் திறமைகளை சிலாகித்துப் பேசி வருகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாபின் வல்தாட்டி முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்னின் தலைமையின் கீழ் பயனுள்ள அறிவுரைகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யூசுப் பத்தான் என்ற வீரரை இந்திய கிரிக்கெட்டிற்கு அளித்தவர் ஷேன் வார்ன் என்றால் மிகையாகாது.

தான் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய காலத்திலும் விக்கெட்டுகளே விழாத கடினமான தருணங்களில் தனது புத்தி கூர்மையினால் நன்றாக செட் ஆன பேட்ஸ்மெனை வீழ்த்தும் திறமை ஷேன் வார்னுக்கு மட்டுமே இருந்தது.

அது போன்ற திறமைகளைத் தற்போது அவர் பல இந்திய வீரர்களுக்கும் கற்றுக் கொடுத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

கிரிக்கெட்டை பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தும் இன்றைய இளம் வீரர்களுக்கு ஷேன் வார்ன் நிச்சயம் கிரிக்கெட்டின் மதிப்பை கற்றுக் கொடுத்திருப்பார் என்றே நாம் நம்பலாம்.

இப்போது கூர ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்காக ஆலோசனை வழங்கத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் ஷேன் வார்ன். இந்திய கிரிக்கெட் அவரை இவ்வாறு பயன்படுத்துவது பற்றி பரிசீலனை செய்யவேண்டும்.

அனைத்தையும் விட அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் பணிந்து போகாமல் தனக்கு அணித் தேர்வு விவகாரங்களில் முழு அதிகாரம் அளித்தால் மட்டுமே விளையாடுவேன் என்றும் இல்லையேல் உடனடியாக தனக்கு விமான டிக்கெட்டை புக் செய்யவும் என்று கூறியது ஒவ்வொரு எதிர்கால கேப்டனுக்கும் முக்கியமான தாக்கமாக இருக்கவேண்டும்.

உரிமையாளர் கூறும் வீரரை தேர்வு செய்வதற்கு எதற்கு தனியாக கேப்டன், பயிற்சியாள ர?. எனவே இந்த சுயமரியாதை விவகாரத்தையும் இந்திய இளம் வீரர்கள் வார்னிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும்.

வயதானதால் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் இந்த 4 ஆண்டுகளில் அவர் சவாலான கேப்டனாகத் திகழ்ந்து ஐ.பி.எல். கிரிக்கெட் மீதே ஒரு தனி ஆர்வத்தை ஏற்படுத்தினார் என்றால் மிகையாகாது.

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் தனது அணித் தேர்வு, வீரர்களை சரியாக, அவர்களது திறமைக்கேற்ப பயன்படுத்துவது ஆகிய விஷயங்களில் கடுமையாக கோட்டை விட்டதை நாம் பார்க்கமுடிந்தது.

ஆனால் உலகக் கோப்பை முடிந்து சில தினங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் துவங்கியது. அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலம் குறைவான அணி என்று கருதப்பட்டது. ஆனால் முதல் 2 போட்டிகளில் ஷேன் வார்ன், தனது அணியின் தென் ஆப்பிரிக்க வீரர் யோஹன் போத்தாவை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தி அவரிடம் உள்ள திறமையை வெளிக்கொணர்ந்து வெற்றியை ஈட்டினார்.

அட ஜோஹன் போத்தாவா பேட்டிங்கில் இப்படி விளாசுகிறார் என்ற அளவுக்கு அவரை 3ஆம் நிலையில் களமிறக்கி சிறப்பாகப் பயன்படுத்தி ஷேன் வார்ன், கிரேம் ஸ்மித்திற்கு ஒரு பாடம் எடுத்தார் என்றே கூறவேண்டும்.

கிரிக்கெட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஷேன் வார்ன் ஒரு முடிசூடா மன்னன் என்பது இந்த 4 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் வீரர்களின் திறமைகளை பயன்படுத்தியதை வைத்து நாம் புரிந்து கொள்ளமுடியும்

ஆனால் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தால் என்ன, இந்தியாவில் அவருக்கு மதிப்பு 0-தான். அப்படித்தான் ஆனது ஷேன் வார்னுக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் விதித்த அபராதமும். அபராதம் விதித்து ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்குத்தான் அவமானமே தவிர ஷேன் வார்னுக்கு இல்லை.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளம்பர வருவாய்க்காக, நட்சத்திர வீரர்கள் அணி வகுக்கும் ஒரு சில் அணிகளே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலை உருவக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் ஜெய்ப்பூர் சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சாதகமாக பிட்ச் தயாரிக்காமல் சென்னை சூப்பர் கிங்சுக்கு சாதகமாக பிட்ச் தயாரிக்கப்பட்டது. இதனால் ரஜாஸ்தான் அந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி தழுவியது. அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் ஷேன் வார்ன் அரையிறுதிக்கு முன்னேற கடும் நெருக்கடிகளை மற்ற அணிக்குக் கொடுத்திருப்பார்.

ஆனால் என்ன செய்வது அந்த அணியில் தோனி, சச்சின், கம்பீர், கெய்ல் ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லையே. தான் கேட்ட பிட்சை கொடுக்காததால் ஷேன் வார்ன், ராஜஸ்தான் அணி நிர்வாகி திக்ஷித்தை தாக்கிப் பேசினார். இது வரவேற்கத்தக்கதே. ஆனால் அதற்காக அவருக்கு அபராதம் விதித்தது ஐ.பி.எல்.

இந்தச் செய்கை உண்மையில் இந்திய கிரிக்கெட் அதிகாரிகளால் ஏற்பட்ட ஒரு தலைகுனிவுதான். ஆனால் ஷேன் வார்ன் போன்ற பலமான ஆகிருதிகளை இது போன்ற அபராதமெல்லாம் ஒன்றும் செய்து விட முடியாது.

ஐ.பி.எல். கிரிகெட் ஷேன் வார்னை இழப்பது அந்தக் கிரிக்கெட்டின் சாரத்தை இழப்பதற்கு ஒப்பானதே..

ஷேன் வார்னின் கிரிக்கெட் அறிவு ஒரு தங்க முட்டையிடும் வாத்து, அவரை இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக எந்த வழியிலாவது தொடரச்செய்தால் அதனால் இந்திய கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய நன்மைகள் ஏற்படும்.

இந்திய கிரிக்கெட் வாரியம் இதனை பரிசீலிக்கவேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

‘எங்களுக்கு இப்போ RCB தான் இன்ஸ்பிரேஷன்’… CSK பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை!

ஒரு ஓவரில் போட்டியின் முடிவை மாற்றிய ஹேசில்வுட்… RR கையிலிருந்த வெற்றியைப் பறித்த ஆட்டநாயகன்!

‘எவ்ளோ அடிச்சாலும் இந்த மைதானத்துக்குப் பத்தாது’… வெற்றிக்குப் பின் கோலி பகிர்ந்த தகவல்!

Show comments