Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். கிரிக்கெட்டைச் சூழ்ந்துள்ள சூதாட்டப் புகார்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2010 (14:37 IST)
“ ஐ. ப ி. எல ். கிரிக்கெட் ஆட்டத்தில் போட்டி முடிவுகள் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதன்படியே போட்டிகள் முடிவடைகின்ற ன ” என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளத ு. ஐ. ப ி. எல் தலைவர் லலித் மோடியே ஐ. ப ி. எல் கிரிக்கெட் ஆட்டங்களின் முடிவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை முன் கூட்டியே தீர்மானிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ள ன.

4 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஒரு திட்டத்திலும் தோல்விகளைச் சந்தித்து வந்துள்ள லலித் மோடி, ஐ. ப ி. எல் கிரிக்கெட் என்ற ஒன்று நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு ஜெட் விமானம ், ஒரு அதி வசதி படக ு, ப ி. எம ். டபிள்யூ கார்கள் இன்னபி ற... என்று நினைத்துப் பார்க்கமுடியாத வாழ்க்கை வசதிகளை பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்ற ன.

மோடி இதனை மறுத்த ு, அறிவுக்குகந்த காரணங்கள ், விளக்கங்கள் எதையும் அளிக்காமல் ஊடகங்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று அச்சுறுத்தியுள்ளது அவரது செயல்பாடுகள் மீதான் சந்தேகங்களை இன்னும் அதிகரித்துள்ளத ு.

இவரது டிவிட்டர் பதிவுகளில் முடிவுகளை கணித்து எழுதி வருகையில் எதுவும் மாறாமல் அவர் எழுதியது போலவே நடந்ததால் இந்தச் சந்தேகம் ஏற்பட்டத ு. மேலும் டெல்லி டேர் டெவில்ஸ ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தில் சென்னை தோற்றுப் போனது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று லலித் மோடி கூற அது மோடியின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளத ு.

ஆனால் இத்தகைய செய்திகளை கடுமையாக மறுத்துள்ள மோட ி, இவ்வாறான செய்திகளை பரப்பும் ஊடகங்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று எச்சரித்துள்ளார ்.

ஆனால் ஆட்டத்தின் முடிவுகளில் மோடியின் பங்கு உள்ளது என்ற சந்தேகம் முதல்முறையாக எழுவது அல் ல, மாறாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ ், கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தும் என்று அவர் கூறி அதுவே நடந்தத ு.

இந்த போட்டியில் இரு அணிகளும் சம ஸ்கோர்களை எடுக்க சூப்பர் ஓவர் வெற்றியை தீர்மானித்தத ு. ஆனால் அது சூப்பர் ஓவருக்கு செல்லும் என்று வேறு கூறி லலித் மோடி தன் நண்பர்களை அசத்தியுள்ளார ்!.

ஆட்டத்தின் நடுவில் உத்தி வகுப்பு இடைவேளை என்ற பெயரில் ஒரு ஏற்பாடு செய்து கொடுத்து சூதாட்டக்காரர்கள் போட்டி நிலைமையை மாற்ற லலித் மோடி செய்து கொடுத்த திட்டம்தான் இதுவும் என்ற குற்றசாட்டுகளும் எழுந்துள்ளத ு.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை வென்றதும் சந்தேகத்திற்கிடமாகவுள்ளத ு. முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அத்தகைய பெரிய ஸ்கோரை எட்ட முடியாது என்ற நிலையே இருந்தத ு. 12 ஓவர்களில ் 93 ரன்களே எடுத்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடுத் த 8 ஓவர்களில் சுமார ் 100 ரன்கள் குவித்தத ு. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அரையிறுதிக்குத் தகுதி பெற மிகப்பெரிய வெற்றி தேவை என்பது எல்லோரும் அறிந்தத ே. இந்த நிலையில் பஞ்சாப ் 140 ரன்களே எடுத்து அதன ை 8 ஓவர்களில் சென்னை எடுத்திருந்தால் ஆட்ட நிர்ணய சந்தேகம் ஏற்படும ்.

ஆனால ் 192 ரன்களை பஞ்சாப் எடுத்துவிட்டதால் அந்த சந்தேகத்திற்கு இடமில்லாமல் போனத ு.

17- வது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ ் 148/4 என்று இருந்தத ு. 20 பந்துகளில ் 45 ரன்கள் எடுக்க வேண்டும ். அதன் பிறகு இரண்டு கேட்ச்கள் கோட்டை விடப்பட்ட ன. அதில் ஒரு கேட்ச் இரண்டு ரன்களாகவும் மாறியத ு.

இந்த ஒரு போட்டி மட்டுமல் ல, இதற்கு முன்னர் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் ஒரு போட்டியை ஏறத்தாழ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அப்படியே தாரை வார்த்ததை நாம் சந்தேகமில்லாமல் கிரிக்கெட் உணர்வுடன் விளையாடப்பட்டது என்று நம்புவதற்கு இடமில்ல ை.

சர ி! ஆட்ட நிர்ணயச் சூதாட்டங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பது பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருப்போம ். ஆனால் இங்கு லலித் மோடியே இதனை தீர்மானிக்கிறார் என்ற சந்தேகம்தான் இப்போது தீவிரமடைந்துள்ளத ு.

இதற்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாகவே வருமான வரித் துறை மற்றும் மத்திய அரசின் பார்வை லலித் மோடியின் செயல்பாடுகள் மீது கவனம் பெறத் தொடங்கிவிட்டன என்று தெரிகிறத ு

பல கோடி ரூபாய்கள் புழங்கும் இந்த அதி செல்வம் கொழிக்கும் தொடரை எந்தவிதமான வெளிப்படையான விவரங்கள் இன்றியே ஒரு மூடுமந்திரமாக லலித் மோடி இதனை நடத்தி வருவதும் தற்போது சந்தேகங்களை கிளப்பியுள்ளத ு.

ராஜஸ்தானில் நில மோசடி விவகாரங்களில் இவர் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததிலிருந்து தற்போது ஐ. ப ி. எல ். கிரிக்கெட்டில் சூதாட்டத்தை ஊக்குவிப்பவர் லலித் மோடி என்ற அளவுக்கு இவர் மீது வருமானவரித் துறையினர் சந்தேகிப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்ற ன.

இந்த சூதாட்டப் புகார்கள் நடப்பு ஐ. ப ி. எல ். கிரிக்கெட் தொடர் பற்றியதல்ல முதல் இரண்டு தொடர்களில் நடந்த சூதாட்டங்கள் பற்றிய விவரங்களே என்று வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாகச் செய்திகள் தெரிவித்துள்ள ன.

ஐ. ப ி. எல் போட்டிகள் அனைத்திற்கும் வ ி.ஐ.. ப ி. அந்தஸ்துடன் வருகை தரும் டெல்லியைச் சேர்ந்த சமீர் துக்ரல் என்ற பிரமுகர் லலித் மோடியின் பினாமியாக சூதாட்டங்களை நடத்தி வருவதாகவும் செய்திகள் அடிபடுகின்ற ன.

குறிப்பாக லலித்மோடி அல்லது அவரது உறவினர்களின் பங்கு இருக்கும் ஒர ு 3 முக்கிய அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவுகள் சௌகரியத்திற்கு தக்கவாறு செயற்கையாக முன் கூட்டியே மாற்றி அமைக்கப்படுகின்றன என்பது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும ்.

இந்த சமீர் துக்ரல் டெல்லியில் உள்ள ஸ்ரீ கேபிடல் அட்வைஸர்ஸ் என்ற நிறுவனத்தின் சக நிறுவனர் என்ற விவரமும் திரட்டப்பட்டுள்ளத ு.

இவரிடம் இந்த சூதாட்டங்கள் பற்றி கேட்டபோத ு, தனக்கு லலித் மோட ி 30 ஆண்டுகளாக நண்பர் என்றும், தான் தென் ஆப்பிரிக்காவிற்கு ஐ. ப ி. எல ். போட்டிகளைக் காணச் சென்றதாகவும் தெரிவித்ததோட ு, தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்று கூறியுள்ளார ்.

அவர் ஆன்லைன் லாட்டரி வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளத ு.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுல் ஒருவரான கௌரவ் பர்மன் என்பவர் லலித் மோடியின் வளர்ப்பு மகளைத் திருமணம்செய்து கொண்டுள்ளார ். இவருக்கும் பிரிட்டனில் உள்ள உலகின் முன்னணி ஆன்லைன் சூதாட்ட நிறுவனமான பெட்ஃபேர் நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதாகவும ், ஐ. ட ி. துறையினர் கைப்பற்றிய மோடியின் மின்னஞ்சல் தகவல்களின் படி இந்த பெட்ஃபேர் நிறுவனத்திற்கு மோடி உதவி வருவதாகவும் தற்போது புகார்கள் எழுந்துள்ள ன.

ஆனால் தனக்கும் பெட்ஃபேர் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கவ்ரவ் பர்மன் மறுத்தாலும ், வருமானவரித் துறையினர் மோடியின் மின்னஞ்சலைக் குடைந்தபோது சொகுசுப் படகு ஒன்றை வாங்கியுள்ளதற்கான விவரம் கிடைத்துள்ளதாகத் தெரிகிறத ு.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்பந்தத்தில் உள்ள டபிள்ய ூ. எஸ ். ஜ ி., ஐ. எம ். ஜ ி. ஆகிய நிறுவனங்கள ். மோடியின் நிறுவனத்துடன் முன்பு கூட்டுறவு வைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கத ு. மோடி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம்தான் இங்கு ஃபாஷன் டிவியை நடத்தி வருகிறத ு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபாஷன் டிவியுடன் வர்த்தக உறவு வைத்திருந்த நிறுவனம்தான் தற்போது ஐ. ப ி. எல ். கிரிக்கெட்டின் நிர்வாக ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள ஐ. எம ். ஜ ி. நிறுவனம ்.

இந்த ஐ. எம ். ஜ ி. நிறுவனத்திற்கு ஐ. ப ி. எல ். வருவாயிலிருந்த ு 10 விழுக்காடு நிர்வாகக் கட்டணமாகச் செல்லும ். ஆனால் ஜுல ை 2008 ஆம் ஆண்டு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஒப்பந்தத்தை ஏனோ ரத்து செய்தத ு.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குறைந்த கட்டணத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது ஐ. எம ். ஜ ி.

இது தவிர ஐ. ப ி. எல் அயல்நாட்டு உரிமைகளை பெற்றுள்ள டபிள்ய ூ. எஸ ். ஜி என்ற நிறுவனத்திற்கு மோடியின் சொந்த நிறுவனம ் 25 லட்சம் டாலர்கள் கடன் தொகை வைத்திருந்தத ு. இந்தத் தொகை குறித்த இரண்டு வழக்குகளிலும் மோடி தரப்பு தோல்வி அடைந்ததாகவும் இப்போது தகவல்கள் வந்துள்ள ன.

தற்போது ஐ. ப ி. எல ். ஒப்பந்தம் ஒன்றை டபிள்ய ூ. எஸ ். ஜ ி. நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் தனது பழைய கடன்பாக்கியை மோடி தீர்த்துக் கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறத ு.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான நெட்லிங்க் ப்ளூ நிறுவனத் தலைவர் ஆகாஷ் அரோராவிற்கும் லலித் மோடிக்கும் தொடர்புகள் இருப்பதாகவும ், இந்திய ா- ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு எதிரான தொடரின் போது சட்ட விரோதமாக நெட்லிங்கிற்கு லலித் மோடி நேரடி ஒளிபரப்பின் சில பகுதிகளை வழங்கியதாகவும ், பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தலையிட்டு இதனை நிறுத்தியதாகவும் செய்திகள் வந்துள்ள ன.

இந்தத் தகவல்களெல்லாம் மோடியின் மின்னஞ்சல்களிலிருந்து வருமான வரித் துறையினர் பெற்றுள்ளதாகத் தெரிகிறத ு.

ஐ. ப ி. எல ்- இன் பணபலம் என் ன?

எப்போதும் மோசடி நடைபெறுகிறது என்றால் அந்த நபரின் எதிரி அல்லது அவரால் பாதிக்கப்பட்டவரிடம் விசாரித்தால் போதும் பாதி உண்மை வெளிவந்துவிடும ்.

இன்றைய தேதியில் ஐ. ப ி. எல ்.- இன் மதிப்பு ர ூ.20,000 கோடிக்குக் குறைவில்லை என்று அதனால் பாதிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்ட ஐ. ச ி. எல ். கிரிக்கெட் அமைப்பு கூறுகிறத ு.

பீகார ், ஒரிச ா, ஜார்கண்ட ், அசாம ், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் சராசரி இந்தியனுக்குத் தெரிந்ததெல்லாம ், காச ு, ரூபாய் என்பத ே. ஆனால் சராசரி இந்தியர்கள் குதூகலத்துடன் பார்த்து மகிழ்வதாகக் கருதப்படும் ஐ. ப ி. எல ். கிரிக்கெட்டின் பண மொழி என்ன தெரியும ா? " பில்லியன்கள ்" " டாலர்கள ்"!

மும்பைக்குப் பிறகு சூதாட்டத்திற்கு பெயர்போன இடம் குஜராத் மாநிலம் அகமதாபாத் என்றால் மிகையாகாத ு. ஐ. ப ி. எல ். கிரிக்கெட ் 4.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு தொழிலாக மாறியுள்ளது இந்த சூதாட்டத்தினாலோ என்ற சந்தேகம் தவிர்க்கப்படமுடியாதத ு.

ஐ. ப ி. எல ். என்றால் அது மிகப்பெரிய புதையல ், அதனால் அதில் வர்த்தக ஜாம்பவான்கள் முதல ், பண முதலைகளும ், அரசியல்வாதிகளும் பங்கு பெறாமல் இருப்பது கடினம ்.

காரணமில்லாமல் ர ூ.1,700 கோடி கொடுத்து சகாரா நிறுவனம் ஐ. ப ி. எல் அணியை ஏலம் எடுக்கவில்ல ை. சூதாட்டம் எப்படியும் வருவாயைக் கொட்டும் என்பது வர்த்தகர்களின் பார்வைக்கு வராமல் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்க எவரும் முன்வரமாட்டார்கள ்.

லலித் மோடியின் அரசியல் செல்வாக்கும் அபரிமிதமானத ு. இந்த வருமான வரி சோதனைகள் எல்லாம ், ஒரு கண்துடைப்புதான ், லலித் மோடிக்கு தண்டனை தரும் விதமாகவ ோ அல்லது இதில் புழங்கும் கணக்கில் வராத கருப்புப் பணத்தை வெளியிடவோ இந்த ரெய்டுகள் நடத்தப்படவில்ல ை.

பணப்புதையலை அடைய அதனை அடைகாத்து பயன் பெற்று வரும் லலித்மோடியை தாறுமாறாகக் கிழித்த ு, அவரை வெளியேற்றி விட்டு இந்த பொன் முட்டையிடும் ஐ. ப ி. எல ். வாத்தைத் தங்கள் வசமாக்க அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகம்தான் இந்த வருமானவரி ரெய்ட ு.

வரும் மே மாதம ் 2 ஆம் தேதி ப ி. ச ி. ச ி. ஐ இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கூட்டம் கூட்டுகிறத ு. இதில் லலித் மோடியின் அதிகாரங்கள் முடக்கப்படலாம் என்று வெளிவரும் செய்திகள் இதனை உறுதி செய்கின்ற ன.

நாட்டில் ஒரு புறம் கையில் காசே பார்க்காத பஞ்சைப் பனாதிகளான ஆதிவாசிகளை அழிக்க ஆபரேஷன் கிரீன் ஹன்ட ், மறு புறம் ர ூ.20,000 கோடி சர்வ சாதரணமாகப் புழங்கும் கிளு கிளு ஐ. ப ி. எல ். !

தாண்டேவாடாவில ் ஏழ்மையின் உச்சத்தில் இருக்கும் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளின ், வறுமையைப் போக்க எவ்வளவு செலவாகிவிடப்போகிறத ு.? ர ூ.20,000 கோடி ஆகும ா? ஆனால் அங்கு ராணுவ நடவடிக்க ை. இங்கு பொன் முட்டையிடும் வாத்தான ஐ. ப ி. எல ். கிரிகெட்டை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர கண்துடைப்பு நடவடிக்கைகள ்.

மீண்டும் நாம் வலியுறுத்துவது என்னவெனில் ஐ. ப ி. எல ். கிரிக்கெட்டை ஐ. ச ி. ச ி. தடை செய்யவேண்டும ், ஏனெனில் ஐ. ச ி. ச ி. நினைத்தால்தான் இதற்கு முடிவு கட்டமுடியும ். ஆனால் அங்கும் பவார் உள்ளிட்ட நம் தலைகள்தானே அதிகாரத்தில் உள்ள ன!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

Show comments