உலகக் கோப்பை வெற்றி நெஞ்சை விட்டு நீங்காது- சச்சின் டெண்டுல்கர்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2012 (17:03 IST)
FILE
இரண்டாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் வெற்றி பெற்று சாம்பியன்களானதை வாழ்நாள் முழுதும் மறக்கவியலாது என்று மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

" காலம் பறந்தோடிக்கொண்டிருக்கிறது. ஆனால் நினைவுகள் அகலுவதில்லை. அது என்ன ஒரு அற்புதமான தினம் அந்த 2- 4- 2011" என்று சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் நினைவு கூர்ந்துள்ளார்.

இதே நாளில் ஒரு ஆண்டுக்கு முன்பு இலங்கை பந்து வீச்சாளர் நுவான் குலசேகரா பந்தை இந்திய கேப்டன் தோனி அபாரமாக லாங் ஆன் திசையில் மிகப்பெரிய சிக்சரை அடித்து சிலம்பாட்ட வீரர் போல் மட்டையைச் சுழற்றியதை இந்திய ரசிகர்கள் ஒருவரும் மறக்க முடியாது.


கபில்தேவ் தலைமை இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டு வெற்றி பெற்ற நினைவுடன் இந்தியா அதன் பிறகு 87-இல் அரையிறுதியிலும் 96-இல் அரையிறுதியிலும் வெளியேற, 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் சிக்ஸ் சுற்றுடன் வெளியேறியது.

பிறகு 2003ஆம் ஆண்டு சௌரவ் கங்கூலி தலைமை இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவுடன் கேவலமாக தோற்க ரசிகர்களின் கோபத்திற்கு இந்திய வீரர்கள் ஆளானார்கள்.

ஆனால் அதன் பிறகு சச்சின் டெண்டுல்கர், திராவிட், சேவாக், கங்கூலி கூட்டணி அணியை மீண்டும் ஆக்ரோஷமாக வழி நடத்தி இறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்றது. கங்கூலி டாஸ் வென்று முதலில் பேட் செய்யாமல் ஆஸ்ட்ரேலியாவை பேட் செய்ய அழைத்தது பெரும் தவறாக போனது. அதாவது அந்த உலக் கோப்பை போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் பிரமிப்பை வரவழிப்பதாக அமைந்தது.

முதல் போட்டி, இறுதிப் போட்டி ஆகிய போட்டிகளில் ஆஸ்ட்ரேலியாவுடன் மட்டும் இந்தியா அந்த உலகக் கோப்பையில் தோற்றது. கையருகில் வந்த சாம்பியன் கனவு தகர்ந்து போனது.

2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரெக் சாப்பல் பயிற்சியின் கீழ் படு கேவலமான முதல் சுற்று வெளியேற்றத்தைக் காண மறக்கவேண்டிய ஒரு உலகக் கோப்பையாக அது அமைந்தது.

ஆனால் அதன் பிறகு இந்திய அணி மீண்டெழுந்தது. தோனியின் தலைமையின் கீழும், வீரர்கள் அணியின் வெற்றிகளின் மீது அதிக கவனம் செலுத்த இந்தியா வெற்றிகளை தொடர்ச்சியாக ருசித்து வந்தது. டெஸ்டில் முதலிடத்தைப் பிடித்தது.

பிறகு உச்சபட்சமாக 2011 இதே தினத்தில் உலகக் கோப்பையை கைப்பற்றியது.

வீடியோ: நன்றி யூ டியூப்

Summary: " Time flies but memories last forever. What a day it was!!! 02-04-2011," tweeted Tendulkar as the country celebrates the first anniversary of its second World Cup triumph.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புகிறாரா பதிரானா? ஐஎல்டி20 போட்டியில் அசத்தல் பவுலிங்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

Show comments