Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை வரலாறு - பாகம் 1

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (13:36 IST)
ஆசியாவின் கிரிக்கெட் அணிகளை வலுப்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட ஆசியக்கோப்பைக் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்.

 
ஆசியாவின் கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாகவும் ஆசிய நாடுகளில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் 1984 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளும் போட்டிகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.
 
முதல் ஆசியக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை என மூன்று அணிகளே கலந்து கொண்டன. துபாயில் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற இத்தொடரில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
 
1986 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அடுத்த தொடரில் அரசியல் காரணங்களால் இந்தியா விலகிக்கொள்ள வங்கதேசம் முதன் முறையாக ஆசியக்கோப்பையில் பங்கேற்றது. பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வென்று இலங்கை சாம்பியனானது
 
வங்கதேசத்தில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக மூன்றாவது தொடர் அந்நாட்டில் 1988 ஆம் ஆண்டு நடைபெற்றது. முதன் முதலாக வங்கதேசத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவேயாகும். இத்தொடரிலும் இந்தியாவே சாம்பியனானது.
 
1991 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற நான்காவது தொடரில் பாகிஸ்தான் கலந்து கொள்ள மறுத்தது. நடப்புச் சாம்பியனான இந்தியா இலங்கையை வென்று கோப்பையைத் தக்கவைத்தது.
 
1993 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தொடர் இந்தியா பாகிஸ்தான் அரசியல் காரணக்களுக்காக கைவிடப்பட்டது.
 
1995 ஆம் ஆண்டில் ஐந்தாவது தொடர் துபாயில் நடைபெற்றது. இதில், இந்தியா இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இங்கையை வென்ற இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.
 
ஆசியக்கோப்பையின் ஆறாவது தொடர் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றது. இந்த தொடரிலும் இலங்கையும் இந்தியாவுமே இறுதிப்போட்டியில் விளையாடின. இலங்கை அணி இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.
 
2000 ஆம் ஆண்டு போட்டிகள் இரண்டாவது முறையாக வங்கதேசத்தில் நடைபெற்றன. இந்தியா கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெறாத முதல் தொடர் இதுவேயாகும். இலங்கையும் பாகிஸ்தானும் மோதிய இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வென்று முதல்முறையாக சாம்பியன் ஆனது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments