Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஒரு நாள் அணித் தேர்வு - சில கேள்விகள்

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2010 (10:34 IST)
webdunia photo
FILE
நியூஸீலாந்து அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் சில விடுபடல்கள், தவறுகள் நிகழ்ந்துள்ளது.

அம்பாட்டி ராயுடு, ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே போன்ற இளம் அதிரடி வீரர்கள் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆஷிஷ் நெஹ்ரா என்ன ஆனார்? அவர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? ஒருவரும் கேள்வியும் கேட்கவில்லை தேர்வுக்குழுவும் இது பற்றி கூறவில்லை.

முதலில் நாம் அணித் தலைமைப் பொறுப்பு பற்றி பார்ப்போம். முன்பு ஒரு முறை ரெய்னா தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு எதிராக விளையாடியது.

அது ஓரளவுக்கு வெற்றிதான் என்றாலும் பெரிய அளவுக்கு அந்தச் சோதனை வெற்றி பெறவில்லை. ஆனால் ரெய்னாவை அணித் தலைமைப் பொறுப்பிற்கு தயார்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அப்போது தேர்வு செய்யப்பட்டது.

இப்போது திடீரென கவுதம் கம்பீரைத் தேர்வு செய்ததன் அடிப்படை என்ன? கம்பீர் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடியே நீண்ட காலம் ஆகிவிட்டது. நிறைய காயத்தால் அவதிப்பட்டு இப்போதுதான் தனது அசலான ஆட்டத்தை ஓரளவுக்கு மீட்டுள்ள அவரை ஒருநாள் போட்டியில் தலைமையிடம் அளித்திருப்பது அவ்வளவு நல்ல யோசனையாகத் தெரியவில்லை.

மேலும் யுவ்ராஜ் சிங் அணியில் இருக்கும்போது கவுதமுக்கு தலைமைப் பொறுப்பு அளிப்பது யுவ்ராஜ் சிங்கை வெறுப்பேற்றுவதாக அவர் நினைத்தால் ஒழுங்காக விளையாடுவது கடினம்.

இரண்டாவது கேள்வி தோனி இல்லாத போது விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது. ஏன் தினேஷ் கார்த்திக் ஓரம் கட்டப்பட்டார்? அவர் விக்கெட் கீப்பிங் நன்றாகத்தானே உள்ளது? பேட்டிங்கும் அவரை நாம் மோசம் என்று கூற முடியாது.

ஆனால் தற்போது அணியில் எடுக்கப்பட்டுள்ள விருத்திமான் சாஹாவின் விக்கெட் கீப்பிங் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதாவது அவரது திறமைகள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படியாக இருந்ததில்லை.

மூன்றாவதாக நமது கேள்வி என்னவெனில், ராபின் உத்தப்பா என்ன கெடுதல் செய்தார்? அவர் அனுபவம் மிக்க ஒரு வீரர், இந்திய அணிக்காக சில முக்கியமான போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். மேலும் அவர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் விக்கெட் கீப்பிங்fகும் செய்கிறார். தோனி இல்லாதபோது உத்தப்பா ஒரு அதிரடி மாற்று வீரர்/விக்கெட் கீப்பர் பங்கைத் திறமையாகச் செய்வார் என்ற நம்பிக்கை ஏன் நம் தேர்வுக்குழுவுக்கு வரவில்லை?

நான்காவதாக ரவீந்தர் ஜடேஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் அவர் அதனை பயன்படுத்திக் கொள்பவர் அல்ல என்று தெரிந்தபிறகு அவரைத்தேர்வு செய்வதன் அடிப்படை புரியவில்லை.

அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தி ஏதாவது சிறப்பாக செயல்பட்டுள்ளாரா இப்போது அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு? அப்படியும் தெரியவில்லை. ரவீந்தர் ஜடேஜாவுக்குப் பதிலாக தற்போது சிறப்பாக விளையாடி வரும் அம்பாட்டி ராயுடுவுக்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்கலாம்.

ஐந்தாவதாக வினய் குமார் என்பவர் ஏன் தேர்வு செய்யப்பட்டார். அவரது மித வேகப்பந்து வீச்சு சர்வதேசத் தரத்திற்கு இல்லை. அவருக்குப் பதிலாக தற்போது ராஜஸ்தான் அணியில் 10 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் அணியை 21 ரன்களுக்குச் சுருட்டிய சாஹருக்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்கலாமே?

ரவீந்தர் ஜடேஜாவுக்குப் பதில் ரோஹித் ஷர்மாவையே முயன்று பார்த்திருக்கலாம். அவரும் பந்து வீசுவார், திறமையான ஃபீல்டர். யூசுப் பத்தான், அஷ்வின் தேர்வு மிகவும் பாராட்டுதலுக்குரியது.

அதேபோ கர்நாடகாவின் மணீஷ் பாண்டேயிற்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் நல்ல பேட்ஸ்மென் என்பதோடு திறமையான ஃபீல்டர்.

இவையெல்லாவற்றையும் விட மிகப்பெரிய கேள்வி இந்தியா ஏ -வின் ஒரு நாள் அணிக்கு தலைமையேற்ற செடேஷ்வர் புஜாராவுக்கு ஏன் வாய்ப்பளிக்கப்படவில்லை.?

தென் ஆப்பிரிக்காவில் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதும், உலகின் நம்பர் 1 அணி உலகின் நம்பர் 2 அணியிடம் அவர்கள் மண்ணில் மோசமானத் தோல்வியைச் சந்திக்கக்கூடாது என்ற சிந்தனையெல்லாம் சரிதான்! ஆனால் தற்போது கையிலிருக்கும் தொடரில் வெற்றி பெறுவதுதான் முதற்படி சிந்தனையாக இருக்கவேண்டும்.

சச்சினை ஓரிரு போட்டிகளில் ஆட வைத்திருக்கலாம். சச்சினின் அனுபவத்திற்கெல்லாம் அவர் முன் கூட்டியே தென் ஆப்பிரிக்கா சென்று அங்கு 'கண்டிஷன்' செய்து கொள்ளவேண்டியத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதேபோல்தான் சேவாகும். எனவே சேவாகிடம் இந்த நியூஸீலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தலைமைப் பொறுப்பை வழங்கியிருக்கலாம்.

சேவாக் இல்லையா குறைந்தது சச்சினை அணியில் தேர்வு செய்து இளம் வீரர்களை ஊக்குவித்திருக்கலாம். ஆனால் குறிக்கோளற்ற ஒரு அணித் தேர்வாக இருக்கிறதே தவிர எதிர்காலத்தை மனதில் கொண்ட மாற்றங்களாக இது தெரியவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

Show comments