பெங் களூர ு ராயல் சாலஞ்சர்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் சதம் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை புரிந்த மணீஷ் பாண்டே தனக்கு வழங்கப்படும் தொகை போதாமை காரணமாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கையெழுத்திடவில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு விளையாடும் வீரர்களை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒப்பந்தம் செய்யும் ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் அவர்களுக்கு அதிக அளவில் ஒப்பந்தத் தொகை வழங்குகின்றனர். அவர்களை ஒப்புநோக்கும்போது மணீஷ் பாண்டே, அஸ்னோட்கர் போன்றவர்கள் பெறும் தொகை பொட்டுக் கடலைக்குச் சமம் என்றே கருதப்படுகிறது.
ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் இந்திய அணிக்கு விளையாடிய வீரர்களான உமேஷ் யாதவ், சௌரப் திவாரி ஆகியோருக்கு இவர்கள் ஓரிரு போட்டிகளையே இந்தியாவுக்கு விளையாடி இருந்தாலும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்க முன்வருகின்றனர்.
மாறாக பன் மடங்கு திறமையை வெளிப்படுத்தி வரும் மணீஷ் பாண்டே போன்ற இன்னமும் இந்திய அணிக்கு விளையாடாத வீரர்களுக்கு மிகவும் குறைந்த தொகையினை ஒப்பந்தத் தொகையாக அளிக்கின்றனர்.