Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்ட்ரேலியாவிடம் தொடர்ந்து 10 டெஸ்ட்களை தோற்ற பாகிஸ்தான்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2009 (16:10 IST)
FILE
மெல்போர்னில் நேற்று முடிந்த ஆஸ்ட்ரேலி ய- பாகிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அண ி 170 ரன்களில் தோல்வியைத் தழுவியதன் மூலம் கடந் த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆஸ்ட்ரேலிய அணியிடம ் 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளத ு.

இந்த தொடர் உதை தொடங்கியது நவம்பர ் 5 ஆம் தேத ி 1999 ஆம் ஆண்ட ு. ஆஸ்ட்ரேலிய அணிக்கு ஸ்டீவ் வாஹ் தலைமை தாங்குகிறார ். ஜான் புக்கானன் பயிற்சியாளர ். பாகிஸ்தான் அணிக்கு வாசிம் அக்ரம் தலைவர ்.

பாகிஸ்தான் அணியில் சயீத் அன்வர ், இஜாஜ் அகமட ், யூசுப் யுஹான ா ( இப்போது மொகமட் யூசுப ்), இன்சமாம் உல் ஹக ், அசார் மஹ்மூத ், முஷ்டாக் அகமட ், அப்துல் ரசாக ், மொயின் கான ், வாசிம் அக்ரம ், ஷோயப் அக்தர் என்ற பலம் மிக்க வீரர்கள் இருந்தனர ்.

ஆஸ்ட்ரேலியா அப்போது கிரிக்கெட் ஆட்டத்தின் புதிய தத்துவமான அதிரடி ரன் குவிப்ப ு, வெற்ற ி, வெற்றியத் தவிர வேறில்லை என்று உறுதி பூண்டிருந்த சமயம ்.

ஆஸ்ட்ரேலிய அணியில் ஸ்லேட்டர ், புளூவெட ், லாங்கர ், மார்க் வாஹ ், ஸ்டீவ் வாஹ ், பாண்டிங ், அதிரடி மன்னன் கில்கிறிஸ்ட ், வார்ன ், பிளெமிங ், மெக்ர ா, முல்லர் என்று பலமான வீரர்கள் பலர் இருந்தனர ்.

பிரிஸ்பேனில் ஆஸ்ட்ரேலியாவின் அந்த தொடர் வெற்றி துவங்கியத ு. அதுவே பாகிஸ்தானின் தொடர் தோல்வியின் துவக்கமாகவும் அமைந்தத ு.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான ் 367 ரன்கள் எடுத்தத ு. இன்சமாம ் 88, யூசுப ் 95, அன்வர ் 61, மொயின் கான ் 61.

ஆஸ்ட்ரேலியா அணியில் அப்போது அவர்களின் விரேந்திர சேவாகாகத் திகழ்ந்த மைக்கேல் ஸ்லேட்டர ் 169 ரன்களையும ், மார்க் வாஹ ் 100 ரன்களையும ், கில்கிறிஸ்ட ் 81 ரன்களையும ், வார்ன ் 86 ரன்களையும் எடுக்க அந்த அணி சுமார ் 130 ஓவர்களில ் 575 ரன்கள ்.

பாகிஸ்தான் தன ் 2 வது இன்னிங்ஸில் அன்வரின் அபாரமா ன 119 ரன்களுடன் துவங்கியத ு. அதுவும ் 3/37 என்று தத்தளித்த போது அன்வர் அணியை மீட்கிறார ். யுஹான ா 75 ரன்களை எடுக்கிறார ். அன்வர் துவக்கத்தில் களமிறங்க ி 6- வது விக்கெட்டாக ஆட்டமிழக்கிறார ். பாகிஸ்தான ் 281 ரன்களில் சுருண்டத ு. ஃபிளெமிங ் 5 விக்கெட்டுகளை சாய்க்கிறார ்.

ஆஸ்ட்ரேலியா அணிக்கு வெற்றி பெ ற 74 ரன்கள ். அதன ை 14 ஓவர்களில் எடுத்து முடித்து வெற்றி பெறுகின்றனர ்.

அடுத் த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்டீவ் வாஹ ், பாகிஸ்தான் அணிக்கு கடுமையான பாடங்களை புகட்டுகிறார ். பாகிஸ்தான ் 0- 3 என்று தோல்வி தழுவிகிறத ு. அதன் பிறகு இந்தியாவிற்க ு 3-0 தோல்வ ி, நியூஸீலாந்து சென்ற ு 3-0 வெற்ற ி என்று ஸ்டீவ் வாஹின் 'ஜெயிக்கமுடியா த' அணி தன் பயணத்தைத் துவங்குகிறத ு.

அதற்கு அடுத்த படியா க 2002 ஆம் ஆண்டு ஸ்டீவ் வாஹ் தலைமையில் பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்ளவேண்டியிருந்த ஆஸ்ட்ரேலியா பாதுகாப்பு காரணங்களினால் நடுநிலை மைதானங்களில் விளையாட சம்மதித்தத ு. இதனால் முதல் டெஸ்ட் கொழும்புவில் நடந்தத ு.

FILE
சௌரவ் கங்கூலி தலைமையில் எழுச்சியுற்ற இந்திய அண ி 2001 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவை டெஸ்ட் தொடரில ் 2- 1 என்று வீழ்த்தி ஸ்டீவ் வாஹின் தொடர ் 17 டெஸ்ட் போட்டி வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்ததோட ு, ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்ட்ரேலிய அணி அப்படியொன்றும் வெல்ல முடியாத அணி அல்ல என்று உலகிற்கு நிரூபித்த பிறகு கொழும்புவில் இந்த பாகிஸ்தான ் - ஆஸ்ட்ரேலிய டெஸ்ட் போட்டி நடைபெற்றத ு.

இப்போது பாகிஸ்தான் அணிக்கு வக்கார் யூனிஸ் கேப்டன ், அக்ரம் இல்ல ை. சயீத் அன்வரும் அணியில் இல்ல ை, இன்சமாம் இல்ல ை. இந்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானது ஏனெனில் ஷோயப் அக்தரின் வேகத்திற்கு ஆஸ்ட்ரேலியா ஈடு கொடுக்க முடியாமல் திணறியதை பார்க்க முடிந்தத ு.

ஆஸ்ட்ரேலிய அணியில் லாங்கர ், ஹெய்டன ், பாண்டிங ், ஸ்டீவ் வாஹ ், மார்க் வாஹ ், கில்கிறிஸ்ட ், மார்டின் என்று அதிரடி பேட்ஸ்மென்கள் வரிசையாக இருந்தனர ். மெக்ர ா, கில்லஸ்ப ி, ல ீ, வார்ன் என்ற பயங்கர பந்து வீச்சு கூட்டணி யும் பாகிஸ்தானின் அச்சத்திற்கு வலு சேர்த்தத ு.

முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலியா, பாண்டிங்கின ் 163 பந்துகள ் 141 ரன்களுடன் ஓவருக்க ு 4 ரன்கள் வீதம ் 467 ரன்கள் குவித்தத ு. பாகிஸ்தான் அணி மோசமாக துவங்கினாலும் அதன் பிறகு பைசல் இக்பாலின் அதிரட ி 88 ரன்கள் மூலம ் 279 ரன்களுக்குச் சுருண்டத ு. ஷேன் வார்ன ் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார ்.

188 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த ஆஸ்ட்ரேலியா தன் இரண்டாவது இன்னிங்ஸையும் உறுதியாக துவங்கியத ு.

ஒரு விக்கெட் இழப்பிற்க ு 74 என்று இருந்த நிலையில் ஷோயப் அக்தர் வீசிய அந்த உலகப் புகழ் பெற்ற பந்து வீச்சு நிகழ்வு நடைபெற்றத ு. இதுவரை அது போன்ற ஒரு பந்து வீச்சை ஸ்டீவ் வாஹின் ஆஸ்ட்ரேலிய அணி சந்தித்திருக்காது என்றே கூறிவிடலாம ்.

FILE
ரிவர்ஸ் ஸ்விங் பந்துகள ை 158 கிமீ வேகத்தில் வீசி வந்த அக்தர ், ஆட்டத்தின் அந்த புகழ் பெற் ற 21- வது ஓவரின ் 2- வது பந்தில் அபாரமான யார்க்கர் ஒன்றை வீச பாண்டிங்கின் குச்சி எகிறியத ு. அடுத்த பந்து மீண்டும் அக்தர் என்ற அந்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஒரு அபாயகரமான ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கரை வீச மார்க் வாஹின் ஸ்டம்புகளும் எகிறியத ு. ஸ்டீவ் வாஹ் களமிறங்குகிறார் வந்தவுடன் அவருக்கு பவுன்சர் வீசப்படுகிறத ு.

அடுத்த பந்து மீண்டும் யார்க்கர ், ஸ்டீவ் வாஹ் எல ். ப ி. டபிள்ய ூ. ஆனார் ஒரே ஓவரில ் 3 விக்கெட்டுகள ் 74/1 என்று இருந்த ஆஸ்ட்ரேலிய ா 74/4.

அடுத்த ஓவரில் சக்லைன் முஷ்டாக ், ஹெய்டன் விக்கெட்டை சாய்க் க 74/5 என்று ஆனது ஆஸ்ட்ரேலிய ா. அப்போதைய அபாய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் களமிறங்குகிறார ். அக்தர ், ரவுண்ட் த விக்கெட்டில் ஓடி வந்து மீண்டும் அபாரமான யார்க்கரை வீச கில்கிறிஸ்டும் கிளீன் பௌல்ட ு. அடுத்ததாக ஷேன் வார்னையும் அக்தர் வீழ்த்த ி 8 ஓவர்களில ் 2 மைடன்களுடன ் 21 ரன்கள் கொடுத்த ு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அக்தர ்.

அக்தரின் இந்த பந்து வீச்சை நீண்ட நாட்களுக்கு ஆஸ்ட்ரேலியா மறந்திருக்காத ு. 74/1 என்று இருந்த ஆஸ்ட்ரேலிய ா 127 ரன்களுக்குச் சுருண்டத ு.

பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்க ு 316 ரன்கள ். துவக்க வீரர்களான இம்ரான் நசீரும ், டஃபிக் உமரும் மெக்ர ா, கில்லஸ்ப ி, ல ீ, ஷேன் வார்ன் ஆகியோரின் வசைகளுக்கும் ஆக்ரோஷத்திற்கும் இடைய ே 91 ரன்களைச் சேர்த்தனர ்.

4 ஆம் நாள் ஆட்டத்தின் போது பாகிஸ்தான ் 179/3. வெற்றி பெற இன்னமும் தேவ ை 137 ரன்கள ே, கையில ் இருப்பத ோ 7 விக்கெட்டுகள ்.

யூனிஸ் கான ், மிஸ்ப ா, ஃபைசல ், லடீஃப ், சக்லைன் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர ். ஆனால ்... மறு நாள் காலை பாகிஸ்தானின் புகழ் பெற்ற சரிவு நிகழ்ந்தத ு. இன்று வரை இது போன்ற அதிரடி சரிவை பாகிஸ்தான் அணியால் கட்டுப்படுத்த முடியவில்ல ை.

யூனிஸ்கான ் 51 ரன்களில் ஆட்டமிழக் க, 230/5 என்று இருந்த பாகிஸ்தான ் 274 ரன்களுக்கு சுருண்டத ு. வார்ன ் 4 விக்கெட்டுகள ், மெக்ர ா 3, கில்லஸ்ப ி 2 விக்கெட்டுகள ். கொழும்புவில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்து ஷோயப் அக்தரின் வியர்வை சிந்திய பந்து வீச்சை விரயம் செய்த பாகிஸ்தான் அடுத்ததாக ஷார்ஜாவில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கேவலமாக இன்னிங்ஸ் தோல்வியடைந்து தொடர ை 0- 3 என்று இழந்தத ு.

அதில் குறிப்பாக அந் த 2- வது டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் தன் வாழ் நாளில் மறக்க வேண்டிய ஒரு போட்டியாக அமைந்தத ு.

ஷார்ஜா போன்ற கவர் பால் பிட்சில் முதல் இன்னிங்சில ் 31 ஓவர்களில ் 59 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான ், வார்ன ், பிகெல ், மெக்ர ா, லீ விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர ். அந்த நாள் முடிவில் ஆஸ்ட்ரேலிய ா 191/4 என்று இருந்தத ு. இரண்டாம் நாள் ஆஸ்ட்ரெலிய ா 310 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தத ு.

251 ரன்கள் பின் தங்கியிருந்த பாகிஸ்தான் அன்றைய தினம ே 24 ஓவர்களில் தன் இரண்டாவது இன்னிங்ஸில ் 53 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் மற்றும ் 198 ரன்களில் தோல்வி தழுவியத ு.

FILE
இரண்டே நாளில் அந்த டெஸ்ட் போட்டி முடிவுற்று சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றத ு. அடுத்ததா க 3- வது டெஸ்ட் போட்டியும் ஷார்ஜாவிலேயே நடைபெற்றத ு. வார்ன் இரு இன்னிங்ஸ்களில ் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும ் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவ ி 0- 3 என்று தொடரை இழந்தத ு.

2002 ஆம் ஆண்டிற்கு பிறக ு 2004 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்ட்ரேலியா சென்று சௌரவ் கங்கூலி தலைமையில் ஸ்டீவ் வாஹின் கடைசி டெஸ்ட் தொடரில் அவருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து. ஆஸ்ட்ரேலியா நூலிழையில் தொடரை இழப்பதிலிருந்து தப்பியத ு. வாஹ் ஓய்வு பெற்றார ். பாண்டிங் தலைமைப் பொறுப்பிற்கு வந்தார ்.

அப்போது பாகிஸ்தான் ஆஸ்ட்ரேலியாவிற்கு மீண்டும ் டெஸ்ட் தொடரை விளையாடச் சென்றத ு. இந்த டெஸ்ட் தொடரிலும் ஆஸ்ட்ரேலியா பாகிஸ்தான ை 3- 0 என்று வீழ்த்தியத ு. இந் த 9 டெஸ்ட் தொடர் தோல்வியின் வரலாற்றிற்கு பங்கம் ஏற்படாமல் இன்று மெல்போர்னிலும் தோற்ற ு 10- வது தொடர் தோல்வி தழுவியுள்ளது பாகிஸ்தான ்.

1995 ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் அந்தத் தொடரின் கடைசி போட்டியை வென்று தொடர ை 1- 2 என்று பாகிஸ்தான் தோற்றத ு. அந் த 1995 ஆம் ஆண்டு பெற்ற ஒரேயொரு ஆறுதல் வெற்றியே பாகிஸ்தான் கடந் த 14 ஆண்டுகளில் ஆஸ்ட்ரேல்யாவிற்கு எதிராக பெற்ற வெற்றியாகும ்.

1956 ஆம் ஆண்டு முதல ் 20089 ஆம் ஆண்டு வரை ஆஸ்ட்ரேலிய ா- பாகிஸ்தான் அணிகள ் 53 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ள ன. இதில் ஆஸ்ட்ரேலிய ா 25 போட்டிகளில் வெற்றி பெற்ற ு 11 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளத ு. 17 போட்டிகள் எத்தரப்பிற்கு வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளத ு.

இந்தி ய - ஆஸ்ட்ரேலிய அணிகள ் 1947 ஆம் ஆண்டு முதல ் 2008 ஆம் ஆண்டு வர ை 76 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலிய ா 34 போட்டிகளில் வென்றுள்ளத ு, இந்திய ா 18 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது ஒரு போட்டி ஸ்கோர்கள் அளவில் சமன் ஆனத ு ( புகழ் பெற்ற அந்த சென்னை டெஸ்ட்தான் இத ு), 23 போட்டிகள் டிரா ஆகியுள்ளத ு.

சில அணிகளுக்கு எதிரா க, ஆஸ்ட்ரேலியா தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வந்துள்ளத ு. நியூஸீலாந்த ு, பாகிஸ்தான ், இலங்க ை, ஏன் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராகவும் ஆஸ்ட்ரேலியாவின் கையே ஓங்கியுள்ளத ு.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரா க 1902 ஆம் ஆண்டு முதல ் 2009 ஆம் ஆண்டு வர ை 83 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள ஆஸ்ட்ரேலியா அதில ் 47 டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்ற ு 18- இல் மட்டுமே தொல்வி தழுவியுள்ளத ு. வெற்ற ி /தோல்வி விகிதம ் 2.61.

இந் த 10 டெஸ்ட் போட்டிகள் தொடர் தோல்வியை அடுத்த சிட்னி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியாக மாற்றி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

Show comments