Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழுத்தத்திலும் தன்னம்பிக்கையுடன் ஆடிய இந்தியா

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2011 (16:43 IST)
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான மிகவும் பதற்றமான காலிறுதியில ், கரணம் தப்பினால் மரணம ், என்ற நிலையில் இந்தியா மிகச்சிறப்பாக விளையாடி ஆஸ்ட்ரேலியாவின் உலகக் கோப்பை ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. பாண்டிங் கூறியது போல் இந்தியா நேற்று ஒரு அணி என்ற் உணர்வுடன் திரண்டு எழுந்தது.
PTI Photo
FILE

ஒர ு ஷாட்டைத ் யுவ்ராஜ ் தவறா க விளையாடியிருந்தால ் கத ை கந்தலாகியிருக்கும ், ஆனால ் அவர ோ அதெல்லாம ் பழை ய கத ை என்பத ு போல ் ம ன உறுதியுடன ் நின்றார ் வென்றார ்.

முதல் அதிர்ச்சி டாஸில் தோனி தோற்றது. பாண்டிங் வேறு 250- 260 ரன்கள் போதுமானது என்று கூறுகையில் தோனியோ நமக்கு அழுத்தம் என்று நினைத்தால்தான் அது அழுத்தம் என்று டாஸ் போட்டபிறகு பொத்தாம் பொதுவாகக் கூறியதும் இந்தியா தோல்வி தழுவி விடுமோ என்ற சந்தேகங்களை அனைவரிடத்திலும் ஏற்படுத்தியது.

காரணம் பலமான பேட்டிங் வரிசை குறிப்பிட்ட தருணங்களில் இதற்கு முந்தைய போட்டிகளில் சரிவடைந்ததும், பந்து வீச்சும், ஃபீல்டிங்கும் முன்னேற்றம் காணாமல் இருந்ததும் இந்திய அணியின், ரசிகர்களின் பதற்றத்தை அதிகரித்தது.

மேலும் ரிக்கி பாண்டிங் விக்கெட்டை இந்திய அணியால் வீழ்த்த முடியாமல் போனதும், பாண்டிங் சதம் அடித்த ஒருநாள் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியா தோல்வி தழிவியதில்லை என்ற புள்ளிவிவரங்களும் நிச்சயம் இந்தியா தோல்விதான் என்றே பலரையும் எண்ணச் செய்தது.

ஆனால் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று தனது கள வியூகத்திலும் பந்து வீச்சு மாற்றத்திலும் புதுமைகளைப் புகுத்தினார். பந்து வீச்சை உடனுக்குடனே மாற்றி ஆஸ்ட்ரேலியாவின் ரன் விகிதத்தை ஓரளவுக்கு மேல் ஏறாமல் கட்டுக்குள் வைத்திருந்தார். ஃபீல்டிங்கில ் ரெய்ன ா, கோல ி, அஷ்வின ், யுவ்ராஜ ் ஆகியோர ் அசத்தினர ்.

PTI Photo
FILE
ஜாகீர் கானிடம் பந்தை கொடுக்கும்போதேல்லாம் அவர் விக்கெட்டைக் கைப்பற்றினார். குறிப்பாக பாண்டிங் நிற்கும் போது மைக் ஹஸ்ஸியும் நின்றிருந்தால் ஆட்டம் வேறு திசையில் பயணத்திருக்கும். அப்போது ஜாகீர் கான் தனது 2-வது ஸ்பெல்லில் அபாரமான ஸ்லோயர் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்து ஹஸ்சியை பவுல்டு செய்து திருப்பம் ஏற்படுத்திஅனார்.

அதே போல் அதிரடி வீரர் கேமரூன் ஒயிட்டிற்கும் ஒரு ஸ்லோ பந்தை வீசி திகைக்க வைத்து விக்கெட்டைக் கைப்பற்றினார். யுவ்ராஜ் சிங் உண்மையில் தான் ஒரு ஆல்ரவுண்டராக மாறியுள்ளதை மேலும் ஒருமுறை பலமான பேட்டிங்கிற்கு எதிராக நிரூபித்தார். அவர் மைக்கேல் கிளார்க்கையும், முதலில் அபாய வீரர் ஹேடினையும் வீழ்த்தி பாண்டிங்கின் அழுத்தத்தை அதிகரித்தார்.

ஹர்பஜன் சிங் நேற்று ஏமாற்றமளித்தது என்னவோ உண்மைதான். முனாஃப் படேல் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் பூப்பந்துகளை கைவிட்டால்தான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு லாயக்கானவராகத் திகழ்வார்.

இந்தியா இலக்கைத் துரத்தும் போது சேவாக் காயமடைந்திருந்தாலும் துவக்க விக்கெட்டுக்கு சச்சினும் அவரும் 44 ரன்களைச் சேர்த்தது நல்ல துவக்கமாக அமைந்தது.

சச்சின் டெண்டுல்கர் தனது அனுபவம் முழுதும் ஒன்று திரட்டி எந்த வித அழுத்தமும் இல்லாமல் விளையாடினார். மேலும் ஜான்சனின் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன ஒரு பந்தை அபாரமான ஆன் டிரைவையும், ஒரு புல் ஷாட்டையும் விளையாடி திகைப்பூட்டினார்.

சச்சின் ஒரு அபாரமான பந்துக்கு ஆட்டமிழந்தபோது ஆஸ்ட்ரேலியாவின் உடல் மொழி ஆதிக்க பாவனை மேற்கொண்டது. ஆனால் கம்பீரும், கோலியும் 10 ஓவர்களில் மிகப்பெரிய ஷாட்டிற்குச் செல்லாமல் ஒன்று, இரண்டு என்று ரன்களை மெல்ல தட்டித் தட்டி மெதுவே ஆஸ்ட்ரேலியாவின் ஆதிக்க பாவனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

கோலி, கம்பீர் ஆட்டமிழந்தவுடன் தோனியும் குறுகிய நேரத்தில் போனபோது 37.3 ஓவர்களில் 187/5 என்று ஆனது அந்தத் தருணங்களில் இந்தியா போட்டியை ஆஸ்ட்ரேலியா கையில் ஏறக்குறைய ஒப்படைத்து விட்டது என்றே தோன்றியது.

ஏனெனில் ரெய்னா ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதுவும் அவர்கள் போடும் அழுத்தத்தை தாங்குவாரா என்ற ஐயமும் இருந்தது. ஆனால் சச்சின் அவரிடம் உன்னை நிரூபிக்க இதுதான் சிறந்த தருணம் விட்டுவிடாதே என்று கூறி அனுப்பியுள்ளமை அவரது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தோனி ஆட்டமிழந்தபிறகு யுவ்ராஜ் சிங் ஷான் டெய்ட் பந்து ஒன்றை பாயிண்ட் திசையில் பவுண்டரி அடிக்க ஆட்டம் திசை மாறியது.

PTI Photo
FILE
அதன் பிறகு பிரெட் லீயின் ஓவரில் யுவ்ராஜ் மீண்டும் அபாரமான 3 பவுண்டரிகளை அடிக்க அதற்கு அடுத்த ஷான் டெய்ட் ஓவரிலும் 13 ரன்கள் பறக்க திடீரென இந்தியா 215/5 என்று ஆனபோது ஆஸ்ட்ரேலியாவிடமிருந்து ஒரு 3 ஓவர்களில் ஆட்டம் பறிக்கப்பட்டது.

கடைசியில் பவர் பிளேயின் போது கூட இந்தியாவுக்கு ஒரு 24 ரன்கள் தேவை என்ற போது கடைசி சவாலாக பிரட் லீயை பந்து வீச அழைத்தார் பாண்டிங். அப்போது கூட ஒரு விக்கெட் பறிபோனால் ஆஸ்ட்ரேலியா இந்தியாவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கும்.

ஆனால் பவர் பிளேயின் முதல் பந்தை சுரேஷ் ரெய்னா லாங் ஆன் திசையில் அபாரமான சிக்சர் ஒன்றை விளாச ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

சமீப காலங்களாக தென் ஆப்பிரிக்காவை நெருக்கடியான ஆட்டங்களை தோற்கும் அணி என்று கேலி பேசிய ஆஸ்ட்ரேலிய அணியினர் தொடர்ந்து வெற்றிபெறும் நிலையிலிருந்து தோல்விகளைத் தழுவி வந்துள்ளது.

ஆஷஸ் தோல்விக்குப் பிறகு ஒருநாள் தொடரில் மைக்கேல் கிளார்க் 6- 1 என்று இங்கிலாந்தை வீழ்த்தியுள்ள நிலையில் ரிக்கி பாண்டிங் தலைமையில் வெளியேறியது அங்கு தலைமை மாற்றம் தேவை என்ற பேச்சுக்களைத் துவக்கியுள்ளது.

தொடர்ந்து ஆஸ்ட்ரேலியா ஏதாவதொரு கட்டத்தில் எழும்பிவிடலாம் என்று நினைத்துக் களமிறங்கும்போதெல்லாம் இந்தியா அந்த அணிக்கு அதிர்ச்சியளித்து வருவது வழக்கமாகி வருகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக 'வின்னிங் காம்பினேஷன்' என்ற மூட நம்பிக்கை முடிவெடுக்காமல் முனாஃப் படேல் பற்றி தெளிவான முடிவொன்றை இந்திய அணியின் கேப்டன் எடுப்பது அவசியம்.

மொத்தத்தில் நேற்று தன்னம்பிக்கையான இந்திய அணியின் ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் இது. கோப்பையை வெல்ல அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சாதிக்குமா இந்திய அணி என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டாரா நடுவர்?... கிளம்பிய சர்ச்சை!

மின்னல் வேகக் கேட்ச்… பந்தைத் தேடிய கேமராமேன்… நேற்றையப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

காதலில் விழுந்த ஷிகார் தவான்… இன்ஸ்டாகிராமில் அறிவித்து மகிழ்ச்சி!

“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

Show comments