Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண் ஜெட்லிதான் அடுத்த பிசிசிஐ தலைவர்? அதனால் மௌனம்?

Webdunia
செவ்வாய், 28 மே 2013 (15:41 IST)
இந்திய கிரிக்கெட் சூதாட்டத்தில் நாறிக்கொண்டிருக்கும் வேளையில் ஊழலில் தன் மருமகன் ஈடுபட்டாலும் நான் ராஜினாமா செய்யமாட்டேன் என்று அழுது அடம்பிடிக்கும் ஸ்ரீனிவாச்னை பெரிய அரசியல் தலைகள் உட்பட யாருமே விலக்கூறவில்லையே ஏன்? குறைந்தது அவரது இந்தப் பிடிவாதம் தவறு என்று கூட கூறவில்லையே ஏன்? இப்படி பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதைத் துளைக்கலாம்.

இதற்கு கீர்த்தி ஆசாத் கூறும் பதில் ஓரளவுக்கு சரியாகவே படுகிறது:

" அதிகப் பணம் புரளும் பிசிசிஐ-யின் அடுத்த தலைவர் பதவிக்கு இவர்களில் சிலர் போட்டியிடுகின்றனர். அதாவது யாரோ ஒருவர் அடுத்த தலைவராக விரும்புகிறார். இதனால் ஸ்ரீனிவாச்னை விமர்சனம் செய்யவோ, அவரை பதவியிலிருந்து இறக்கவோ இவர்கள் தயங்குகிறார்கள். பதவிக்கு ஆசைப்படும் அந்த நபர் எப்படி ஸ்ரீனிவாசனை விலக்கோருவார்?

FILE
ஸ்ரீனிவாசனுக்கு எதிராக வாயைத் திறந்தால் அடுத்த தலைவருக்கான தேர்தலில் ஸ்ரீனிவாசனுக்கு ஆதராவன 10- 15 வாக்குகளை இழக்க நேரிடும் என்பதே இவர்களது கணக்கு.

இவர்கள் காந்தியின் 3 பொம்மைகள் போல் செயல்படுகின்றனர். இவர்களுக்கும் அனைத்திலும் தொடர்பிருக்கிறது. என்னை நோண்டினால் நான் உன்னை நோண்டுவேன் இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது" என்று கூறுகிறார் கீர்த்தி ஆசாத்.

பாஜக தலைவர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் ஊழல்களுக்கு எதிராக ஆதாரத்துடன் ஆவேசமாகப் பேசுபவர் ஆனால் இங்கு மூச்! காரணம் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் அருண் ஜெட்லி, தற்போதைய சுழற்சி முறையில் வட இந்திய பிரதிநிதியாக பிசிசிஐ தலைவர் ஆக வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இது குறித்து கீர்த்தி ஆசாத் கூறுகையில், "நான் ஏன் ஸ்ரீனிவாசன் ராஜினாமா செய்யவேண்டும் அல்லது கூடாது என்று கூறப்போகிறேன ்? பொதுவாழ்க்கையில் பெரிய அறம், தர்மம் என்றெல்லாம் பேசி வரும் பிசிச ி ஐ-யில் இருந்து வரும் தற்போதைய தலைகள் ஸ்ரீனிவாசன் பற்றி என்ன கூறுகிறார்கள் என்பது எனக்கு முதலில் தெரியவேண்டும்." என்றார் கீர்த்தி ஆசாத்!

கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாகவும் இருக்கும் 3 பெரிய தலைகளான மோடி, ஜெட்லி, தாக்கூர் என்று அனைவரும் பாஜகவை சேர்ந்தவர்கள். இவர்கள் பவன் குமார் பன்சலின் உறவினர் தகாத செயல்களில் ஈடுபட்டதற்காக அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கூரை மீது ஏறி கூச்சலிடுகின்றனர். சிபிஐ அறிக்கையில் மாற்றம் செய்த அஷ்வினி குமாருக்கு எதிராக பேசுகின்றனர். ஏன் ஸ்ரீனிவாசனைப் பொறுத்தவரை இந்த மௌனம்?

பிசிசிஐ.-யில் இந்த நபர்கள் வகுத்துள்ள தற்காப்பு விதிகளின் படி ஸ்ரீனிவாசனை வெளியே அனுப்புவது கடினம் என்றாலும் ஏன் இவர்கள் இது குறித்து ஒரு கருத்தைக் கூட வெளியே கூறாமல் மௌனம் சாதிக்கின்றனர்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள மற்றொரு ஹை புரொபைல் அரசியல் தலைகள் காங்கிரஸைச் சேர்ந்த ஷுக்லா, சிந்தியா, ஜோஷி, மற்றும் பிஸ்வால் ஆகியோர் இவர்களும் வாயைத் திறக்கமல் இருப்பது எங்கோ உறுத்தவே செய்கிறது.

இவர்களையெல்லம் விட ஸ்ரீனிவாசன் சக்தி வாய்ந்தவரா? அல்லது இவர்களுக்கும் மறைக்கவேண்டிய கட்டாயம் ஏதும் உள்ளதா? அப்படியில்லை எனில் ஏன் இவ்வளவு பூசி மெழுகல், ஏன் இவ்வளவு மௌனம்?

பெரும் மர்மமாகவே உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் இல்லை.. ஆட்ட முடிவிலாவது மாற்றம் வருமா?

“தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை… ஆனால்?”… கில்கிறிஸ்ட் கொடுத்த அட்வைஸ்!

’கோவிந்தா.. கோவிந்தா..!’ திருப்பதியில் RCB கேப்டன் ரஜத் படிதார் சாமி தரிசனம்!

ஒரே நாளில் ஹீரோவான சூர்யவன்ஷி… படையெடுக்கும் பாலோயர்ஸ்!

அதிரடி சதத்துக்கு உடனடி பலன்… இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சூர்யவன்ஷி?

Show comments