அபார வெற்றியாக இருந்தாலும் பலவீனங்கள் வெ‌ளி‌ப்படை

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2010 (17:46 IST)
FILE
கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட தேநீர் இடைவேளைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா தனது கவனத்தை இழந்தது. இந்திய பேட்டிங்கும ், இரண்டாவது இன்னிங்சில் ஹர்பஜன ், மிஷ்ரா வீசிய பந்து வீச்சும் இந்திய அணிக்கு முதலிடத்தைத் தக்க வைக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்தத ு. ஆனாலும் இந்திய அணியின் பலவீனங்கள் மேலும் நீடித்தால் அது விரைவில் நம்பர ் 1 இடத்தை இழந்துவிடும ்.

நாம் நாக்பூரில் போராடாமல் சரணடைந்தோம ், கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்கா கடைசி தினத்தில் தங்கள் போராட்ட குணத்தை நிரூபித்து டிரா செய்வதற்கு மிக அருகில் வந்தனர ். இதுதான் இந்திய அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையிலான பெரிய வித்தியாசம ்.

இந்த வித்தியாசம்தான் இந்திய அணியின் பல பலவீனங்களில் ஒன்று.

சேவாகின் அதிரடி துவக்கம் எப்போதும் எதிரணியினரை நிலைகுலையச் செய்யும் என்பது இப்போது அனைவரும் அறிந்தத ே. இருப்பினும் நாக்பூரில் அவர்கள் சேவாகை சதம் எடுத்தவுடன் வீழ்த்த முடிந்தத ு. அது போலவே இந்த டெஸ்ட் போட்டியிலும் நடந்திருக்க வேண்டும ். ஆனால் அவர்கள் கேட்ச்களைக் கோட்டை விட்டனர ். இதுவே அந்த அணியின் தோல்விக்குக் காரணமானத ு.

டெஸ்ட் தரவரிசையில் ஒன்றாம ், இரண்டாம் இடத்தில் இருக்கும் இரு அணிகள ், ஐ. ச ி. ச ி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்று வர்ணிக்கப்பட்ட தொடரில் விளையாடும் போது நாம் என்ன எதிர்பார்ப்போம், ஒன்று தென் ஆப்பிரிக்கா வெல்லும் அல்லது இந்தியா வெல்லும் என்றுதான ே?

ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றத ு. இரண்டாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது எனும்போது இரு அணிகளுமே தடுமாற்றங்களும ், சீரற்ற போக்குகளையும் கொண்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிந்தத ு.

முதலில் முதல் நாள் ஆட்டத்தில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆட்டக்களம் அமைக்கப்படுவதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும ். டாஸ் வென்ற அணி டெஸ்ட் போட்டியை வெல்லும் நிலை நீடிக்கக் கூடாத ு. கொல்கத்தாவிலும் தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க்க ா 208 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தத ு.

சரிவு ஏற்படவில்லை எனில் அந்த அணி நாக்பூர் போலவ ே 500 ரன்களுக்கும் மேல் குவித்திருக்கும ். அப்போது இந்தியாவின் வெற்றிக் கனவு பொய்த்துப் போயிருக்கக்கூடும ்.

முதல் நாள் ஆட்டக்களத்தில் திறமையுடன் பந்து வீசும் அணியாக இந்தியா இல்ல ை. இது ஒரு மிகப்பெரிய பலவீனம ், முதல் நாள் ஆட்டத்தில் இப்போதெல்லாம் ஜாகீர் கான் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் குறிப்பாக இஷாந்த் ஷர்ம ா, ஹர்பஜன ், மிஷ்ரா ஆகியோர் கண்டபடி வீசுகின்றனர ்.

தோனியின் ஃபீல்டிங் அமைப்பும் கேள்விக்குறியாகவே உள்ளத ு. ஹஷிம் ஆம்லா நல்ல பேட்ஸ்மென் என்பதில் சந்தேகமில்ல ை. ஆனால் அவரை ஏதோ மகான் வீரர் போல் பாவித்து டீப் பாயிண்ட ், டீப் கவர் என்றெல்லாம் ஃபீல்டிங் அமைப்பது ஏன் என்று புரியவில்ல ை.

கொல்கத்தா டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இன்னமும ் 4 ஓவர்களில் ஆட்டம் முடியப்போகிறது என்ற போது அமித் மிஷ்ரா பந்து வீச்சிற்கு தோனி அமைத்த வியூகம் அதிர்ச்சியளிப்பதாயிருந்தத ு.

மட்டைக்கு அருகே ஒரு ஃபீல்டர் கூட இல்லை! மட்டையைச் சுற்ற ி 4 அல்லத ு 5 வீரர்கள் இருக்கும்போதே அவர் பந்தை திறம்பட தடுத்தாடி வந்தார ். இந்த நிலையில் அந்த இடங்களில் ஒரு ஃபீல்டர் கூட இல்லாமல் அந்த ஒரு ஓவரை வீசச்செய்த தோனியின் உத்தி என்னவென்று புரியவில்ல ை.

FILE
கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்திருந்தால் ஹஷிம் அம்லாவை முன்னதாகவே வீழ்த்தியிருக்கலாம ். அதேபோல் ஆட்டம் துவங்கி புதுப் பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போத ு 2 ஸ்லிப் மட்டுமே நிறுத்துவது அல்லத ு 3 ஸ்லிப் நிறுத்தி கல்லி இல்லாமல் பந்து வீசுவது போன்ற தவறுகளை தோனி செய்து வருகிறார ். 2 வது ஸ்லிப்பிற்கும் கல்லியிற்கும் நடுவே ஆம்லா அடித்த பவுண்டரிகளை கணக்கிட்டால் நமக்கு இந்த பலவீனம் தெரியவரும ்.

பவுண்டரிகள் பிரச்சனையல்ல, ஆனால் அதில் பல ஷாட்கள் கேட்ச் பிடிக்கும் உயரத்தில் செல்கிறது என்பதுதான் நாம் கவனிக்கத் தவறுவத ு. மோசமான பந்து வீச்சிற்கு ஒரு போதும் ஃபீல்டிங் வியூகம் அமைக்கக் கூடாத ு.

செட ்- அப் செய்யும் ஃபீல்டிங்கிற்கு பந்து வீச்சாளரை வீசச் செய்வதுதான் கேப்டனின் திறம ை. இஷாந்த் ஷர்மா நேற்று தேநீர் இடைவேளை வரை மிக மோசமாக வீசினார ். அவரது மோசமான வீச்சிற்கு களம் அமைத்துக் கொடுத்தவர் தோன ி. இதனால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணற நேரிட்டத ு.

பந்து வீச்சு மிகவும் சாதாரணமாக உள்ளத ு. நேற்று ஓரளவிற்கு ஆட்டக்களம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தத ு. மேலும் தென் ஆப்பிரிக்கா அண ி 347 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் தோல்வியைத் தவிர்க்க போராடும் மன அழுத்தத்தில் இருந்தது, அதனால் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டத ு.

தென் ஆப்பிரிக்காவின் நடுக்கள வீரர்களில் டுமின ி, டீவிலியர்ஸ ், பிரின்ஸ் துவக்கத்தில் கேப்டன் ஸ்மித் என்று ஒருவருமே சரியாக விளையாடவில்ல ை. இந்தத் தொடரில் பார்த்தால் ஹஷிம் அம்ல ா, ஜாக் காலிஸ் மட்டுமே அவர்கள் அணியில் சொல்லிக் கொள்ளும்படியான பங்களிப்பைச் செய்துள்ளனர ்.

FILE
பந்து வீச்சு பலமாக இருந்ததால் அந்த அணி நாக்பூரில் வெற்றி பெற்றத ு. இதனை தோனி முன்கூட்டியே உணர்ந்திருக்க வேண்டும ். ஜாக் காலிஸ ், ஹஷிம் அம்லா இருவருமே கடுமையான அழுத்தம் கொடுத்தால் விரைவில் பெவிலியன் திரும்பும் ஆட்டக்காரர்கள் என ஆஸ்ட்ரேலிய ா, இங்கிலாந்து போன்ற அணிகள் நிரூபித்துள்ள ன.

கள வியூகம் அமைப்பதில் எந்த இடத்தில் எந்த ஃபீல்டரை நிறுத்துவது என்பதும் ஒரு முக்கிய அம்சமாகும ். நேற்றைய ஆட்டத்தில் ஸ்பின்னர்கள் வீசும் போது சச்சின் டெண்டுல்கர் ஸ்லிப் திசையில் நிற்கிறார ். அந்த இடத்தில் அவர் ஒரு போதும் தன் வாழ் நாளில் சுழற்பந்து வீசும்போது நின்றதில்ல ை. அங்கு திராவிட் அல்லது லஷ்மண் அல்லது சேவாக்தான் நிற்பார்கள ்.

இன்று நல்ல ஃபீல்டராக முரளி விஜயை அந்த இடத்தில் நிறுத்தலாம ். ஆனால் சச்சினை தோனி ஏன் நிறுத்தினார் என்ற கேள்வியை வர்ணனையாளர்களான சுனில் கவாஸ்கரும் ரவி சாஸ்திரியும் எழுப்பினர ். இது போன்று குருட்டாம்போக்கான சில உத்திகளை தோனி கையாள்கிறார ்.

சுரேஷ் ரெய்னாவை கல்லியில் நிறுத்தி அவர் முக்கிய தருணத்தில் வெய்ன் பார்னெலுக்கு எளிதான கேட்சை கோட்டை விட்டார ். விக்கெட் கீப்பராக இருந்து அனுபவம் பெற்ற தினேஷ் கார்த்திக்தான் எதிர்பாராது விளிம்பில் பட்டு வரும் பந்துகளை பிடிக்கத் தகுதியானவர ். ஆனால் கார்த்திக்க ை 3- வது ஸ்லிப்பில் நிறுத்துகிறார் தோன ி.

3- வதாக ஒரு டெஸ்ட் போட்டி இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் ஜாகீர் கானும் தற்போது காயமடைந்துள்ள நிலையில் இந்திய அணி தோல்வியைக் கூட சந்தித்திருக்கலாம் என்ற நிலைதான் உள்ளத ு.

இதனையெல்லாம் சரி செய்வதுதான் பயிற்சியாளரின் வேல ை. தோனி ஒரு கேப்டனாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அபாரமாக விளையாடி வருகிறார் என்பதில் இருவேறு கருத்தில்ல ை. அவர ் 13 டெஸ்ட் போட்டிகளில் சுமார ் 1070 ரன்களைக் குவித்த ு 70 ரன்களுக்கும் மேலான சராசரியை வைத்துள்ளார ்.

ஒரு நாள் தரவரிசையில் அவர் நீண்ட காலமாக நம்பர ் 1 நிலையில் இருந்து தற்போத ு 2 ஆம் இடத்தில் உள்ளார ். எனவே கேப்டன் பொறுப்பு அவரது பேட்டிங் திறமையை பாதிக்கவில்ல ை. இந்த நிலையில் தலைமைப் பொறுப்பின் சில முக்கிய நுணுக்கங்களை அவர் இப்போது முதல் கற்றுக் கொண்டால் மேலும் சிறப்பான வெற்றிகளை அவரால் பெற்றுத்தர முடியும ்.

ஆகவே நாம் முதல் டெஸ்ட் தோல்வியின் போது பதட்டமடைய வேண்டிய தோல்வி அல்ல என்றோம ், அதே போல் இந்த வெற்றியையும் பெரிய அளவிற்கு கொண்டாட வேண்டிய வெற்றி அல்ல என்றுதான் கூற வேண்டும ். ஏனெனில் இன்னொரு டெஸ்ட் இருந்திருந்தால் நம் பலவீனங்களை ஸ்மித் சரியாகப் பயன்படுத்தி தொடரை வெல்லும் உத்திகளை வகுத்திருப்பார ்.

தேவை ஒரு ஆல்ரவுண்டர ்

அணித் தலைவர்களுக்கு இன்று இருக்கும் மிகப்பெரிய தலைவலி அணிச் சேர்க்கையை எவ்வாறு தேர்வு செய்வது என்பதுதான ். அதாவத ு 7 பேட்ஸ்மென்கள ் 4 பந்து வீச்சாளர்கள ா அல்லத ு 6 பேட்ஸ்மென்கள ் 5 பந்து வீச்சாளர்களா என்பதை எளிதில் தீர்மானம் செய்ய முடிவதில்ல ை.

இந்த‌ப் பிரச்சனையை அணியில் ஒரு ஆல் ரவுண்டரை தேர்வு செய்துதான் தீர்க்க முடியும ். இன்றைய நிலையில் ஆல்ரவுண்டர் தரத்திற்கு மூன்று வீரர்கள்தான் உள்ளனர ்.

FILE
இர்பான் பத்தான ், பிரவீண் குமார ், அபிஷேக் நாயர ். இதில் முதல் இருவர் பவுலிங் ஆல்ரவுண்டர்கள ், மூன்றாமவர் பேட்டிங் ஆல்ரவுண்டர ். இவர்களில் யாரேனும் ஒருவரை மாற்றி மாற்றி டெஸ்ட் அணியில் தேர்வு செய்து ஒருவர் அல்லது இருவரை வளர்த்து அந்த இடத்தை நிரப்பும் முயற்சியில் ஈடுபடவேண்டும ்.

உதாரணமாக நாம் ஆஸ்ட்ரேலியாவை சுட்டலாம ். கேமரூன் ஒயிட் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராகத்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டார ். ஆனால் பந்து வீச்சில் அவர் சோபிக்கவில்லை என்பதால் இப்போது அவருக்கு பௌலிங்கே தருவதில்ல ை. பேட்டிங் மட்டும்தான் செய்கிறார ். அந்த இடத்திற்கு தற்போது ஆஸ்ட்ரேலியா ஷேன் வாட்சன ், ஜேம்ஸ் ஹோப்ஸ ், மிட்செல் ஜான்சன் போன்றவர்களை உருவாக்கி வருகின்றனர ்.

அதுபோல் இந்தியத் தேர்வுக் குழுவும் யோசிக்க வேண்டும ்.

மொத்தத்தில் பயிற்சியாளர்கள் இந்திய அணியின் பலத்தில் அல்லாமல் பலவீனத்தில் தற்போது தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டிய நேரம் வந்துள்ளத ு. நம்பர ் 1 இடத்தைப் பிடிக்க இந்திய அணி கடுமையாக போராடியுள்ளத ு, அந்த உழைப்பை நாம் மலினப்படுத்திவிட முடியாத ு.

அதே போல் அந்த இடத்தைத் தக்கவைக்க செறிவான தலைமைப் பொறுப்பை நோக்கி தோனியை பயிற்சியாளர்களும ், மூத்த வீரர்களும ், ஓய்வு பெற்ற வீரர்களும் நகர்த்திச் செல்வது அவசியம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது போட்டி ரத்து.. 5வது போட்டியில் இருந்து சுப்மன் கில் விலகல்..!

மினி ஏலத்தில் சிஎஸ்கே மிஸ் செய்த 5 பிரபல வீரர்கள்.. சோகத்துடன் ஒரு பதிவு..

சிஎஸ்கே அணிக்கு நஷ்டத்தை உண்டாக்கினாரா அஸ்வின்.. வழக்கம் போல் நகைச்சுவையுடன் பதிலடி..!

நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

Show comments