Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணித் தேர்வில் ஸ்பான்சர்கள் குறுக்கீடு; பி.சி.சி.ஐ. குட்டு உடைகிறது!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2012 (01:48 IST)
FILE
இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு நிம்பஸ் நிறுவனத்திற்கு பி.சி.சி.ஐ. ஒளிபரப்பு ஒப்பந்தம் அளித்திருந்தது, ஆனால் அந்த ஒப்பந்தம் டிசம்பர் மாதம் முடிவுக்குவந்தது. இதனையடுத்து நிம்பஸ் நிறுவனம் ரூ.600 கோடி மதிப்பிலான நஷ்ட ஈடு வழக்கைத் தொடர்ந்துள்ளது.

இந்த அளவுக்கு, அதாவது சுமார் ரூ.600 கோடிக்கு நஷ்ட ஈடை எந்த அடிப்ப்டையில் நிம்பஸ் கேட்கிறது என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது:

1. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக இந்தியா அதன் முன்னணி வீரர்களுக்கு சில போட்டிகளில் ஓய்வு அளித்தது.

2. கூறியது போல் இந்தியா, பாகிஸ்தான் தொடர் நடைபெறவில்லை.

இது எப்படி இருக்கு? ஒப்பந்தம் செய்யப்பட்ட போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உரிமை அளித்தால் ஏன் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்தீர்கள் என்று ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் பி.சி.சி.ஐ. மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்கிறது!

2010 ஆம் ஆண்டு இரண்டாவது 4 ஆண்டுகால ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ. நிம்பஸ் நிறுவனத்திற்கு அளித்தது. கிரிக்கெட் உலகில் ஒளிபரப்பு உரிமைக்காக எந்த ஒரு வாரியமும் பெற முடியாத தொகையான ரூ.2000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத் தொகைக்கு பி.சி.சி.ஐ. ஒப்பந்தம் வழங்கியது.

இதன்படி குறைந்தது 64 சர்வதேச போட்டிகள், 312 நாட்கள் உள்நாட்டு கிரிக்கெட் நடைபெறவேண்டும். அதுதான் ஒப்பந்தம்!

ஒப்பந்த் தொகையை அளிப்பதில் நிம்பஸ் விளையாட்டுக் காட்டுகிறது என்று பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தை டிசம்பர் மாதம் முறித்துக் கொண்டது. இப்போது வழக்கு நடைபெற்று வருகிறது.

நியூஸீலாந்துக்கு எதிராக 2010ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடர், தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றில் ஆடும் 11 வீரர்களில் பிரச்சனையை கிளப்பியுள்ளது நிம்பஸ்!

நியூசீலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி, சச்சின், சேவாக், ஹர்பஜன் சிங்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ரெய்னாவும், ஜாகீர் கானும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினர். ஏனெனில் இவர்கள் தென் ஆப்பிரிக்கா தொடருக்காக முன் கூட்டியே அங்கு செல்லவேண்டியிருந்தது.

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின், தோனி பங்கேற்கவில்லை.

மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விரேந்திர சேவாக் 4வது போட்டியில் 219 ரன்களை விளாசி உலக சாதனை புரிந்தார், ஆனால் அவர் 5வது போட்டியில் ஆடவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.சி.சி. எதிர்கால கிரிக்கெட் தொடர் போட்டிப் பட்டியலில் கிரிக்கெட் தொடர்கள் இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக அது நடைபெறவில்லை.

இந்த காரணங்களுக்காக இப்போது நிம்பஸ் நிறுவனம் ரூ.600 கோடி அளவுக்கு பி.சி.சி.ஐ-யிடமிருந்து நஷ்ட ஈடு கேட்டுள்ளது.

அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும்தான் ஒளிபரப்பு உரிமைகளை வழங்குகிறது ஆனால் அங்கெல்லாம் நஷ்ட ஈடு கேட்டு அந்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியத்தின் மீது வழக்கு தொடர்ந்து நாம் கேள்விப் பட்டிருக்கிறோமா?

இங்கு ஏன் நடக்கிறது என்றால் பி.சி.சி.ஐ. வீரர்களை பணயம் வைத்து பொய்யான உறுதிகளை வழங்கி மிகப்பெரிய தொகையை ஒளிபரப்பு உரிமை கோரும் நிறுவனங்களிடைமிருந்து கொள்ளை அடிக்கின்றன என்பதே இதிலிருந்து நமக்குத் தெரியவரும் உண்மையாகும். கற்பனையான வருவாயை ஸ்பான்சர்களுக்கு உறுதியளிக்கிறது பி.சி.சி.ஐ. ஆனால் அது ஒருபோதும் வரப்போவதில்லை. எனவே அவர்கள் வழக்கு தொடர்கின்றனர்.

இளைஞர்களைக் கவர ஐ.பி.எல். மூத்த வீரர்களை வைத்து சம்பாதிக்க ஒளிபரப்பு உரிமைகள்!

எப்படி ஐயா இளம் வீரர்கள் அணிக்குள் வரமுடியும்? அப்படியே வந்தாலும் ஸ்பான்சர் நிறுவனங்கள் பச்சைக் கொடி காட்டும் வீரர்களே உள்ளே வர முடியும் என்றுதானே இப்போது நமக்குத் தெரிகிறது.

யார் அணியில் இருக்கவேண்டும், யாருக்கு ஓய்வு அளிக்கவேன்டும் என்பதை ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்ட நிறுவனம் தெரிவு செய்கிறது என்றால் அணித் தேர்வுக்குழு, மண்டலத் தேர்வாளர்கள், பெரிய செலெக்ஷன் புராசஸ், இவர்களுக்கு கடும் சம்பளம் இதெல்லாம் யார் காதில் பூச் சுற்ற?

பேசாமல் நிம்பஸ், சகாரா, ரிலையன்ஸ், டாடா, டி.எஃப்.எல். உரிமையாளர்களை இந்திய அணியைத் தேர்வு செய்யச் சொல்லலாமே நேரடியாக.

அணித் தேர்வு பற்றி கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் கண்டபடி மழுப்பி வரும் பி.சி.சி.ஐ.க்கு இப்படி ஒரு வணிகச் சிக்கல் இருப்பது இது போன்ற நஷ்ட ஈடு வழக்குகள் மூலமே நமக்கு தெரியவருகின்றன.

சஹாரா நிறுவனம் இன்னும் என்னக் கூறப்போகின்றதோ? வீரர்களை வைத்து பணம் பண்ணுகிறது பி.சி.சி.ஐ.! ஏன் இந்த அவல நிலை.

வீரர்கள் யூனியன் துவங்குவதுதான் நல்லது! தோனி தொடர்ந்து பணிச்சுமை குறித்து கூறுவதில் உண்மையில்லாமல் இல்லை.

ஒளிபரப்பு உரிமை என்பது என்ன? இங்கு நடக்கும் போட்டிகளை நியாயமான தொகைக்கு விற்பதுதான்! அவர்களுக்காக போட்டிகளின் அளவை அதிகரிப்பது அவர்களுக்காக முன்னணி வீரர்களை (அவர்கள் எவ்வளவு சொதப்பல் ஆட்டம் ஆடினாலும்) அணியில் நிரந்தம்ரமாக வைப்பது! இப்படியென்றால் கிரிக்கெட் எப்படி முன்னேறும்?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த சீசன்.. சிஎஸ்கேவின் மோசமான சாதனை..!

எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் சொத்தாக அவர் இருப்பார்… இளம் வீரரைப் பாராட்டிய தோனி!

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?... நேற்றைய போட்டியில் சூசக தகவல்!

உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்ட’டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குனர்!

போட்டியின் போக்கையே மாற்றிய சஹாலின் ஒரு ஓவர்…!

Show comments