விஷால் பொய் சொல்கிறாரா?

ஜே.பி.ஆர்
சனி, 22 ஆகஸ்ட் 2015 (10:31 IST)
நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி இப்போதைய நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவியை விஷால் எதிர்க்க ஆரம்பித்த நாள்முதல், சரத்குமார் தரப்பு விஷால் மீது வைக்கும் குற்றச்சாட்டு, விஷால் பொய் சொல்கிறார்.

நடிகர் சங்க நிலத்தில் தனியார் கட்டிடம் கட்ட ஒப்பந்தம் போட்டது, நடிப்புப் பயிற்சி எனச் சொல்லி பல லட்சங்களை செலவளித்தது, ஒருநாள் உண்ணாவிரதத்துக்கு 11 லட்சங்கள் செலவு கணக்கு காண்பித்தது, ஜே.கே.ரித்தீஷ் நாடக நடிகர்களுக்கு 10 லட்சம் தந்ததாக கூறப்படும் விவகாரம் என அனைத்துக்கும் சரத்குமார் வைத்திருக்கும் இன்ஸ்டன்ட் பதில், விஷால் பொய் சொல்கிறார்.

சரத்குமார் அணியினைச் சேர்ந்த சங்க பொருளாளர் கே.என்.காளையும் இதே குற்றச்சாட்டை விஷால் மீது வைத்துள்ளார். இது எதற்கு?
 
நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுள்ள உறுப்பினர்களின் பட்டியலை விஷால் அணிக்கு தராமலே வைத்திருந்தனர். வாக்களிக்கும் தகுதியுள்ளவர்கள் யார் என்பது தெரியாமல் எப்படி வாக்கு கேட்பது? பிறகு நீதிமன்றம் உத்தரவிட்டபின் வாக்களிக்கும் தகுதியுள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டனர்.
 
முன்னாள் முதல்வர் கருணாநிதியை...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க....

இந்தப் பட்டியலில், தொழில்முறையற்ற உறுப்பினர் என குறிப்பிட்டு, அவரது வாக்களிக்கும் உரிமையை பறித்ததாக விஷால் தரப்பினர் குற்றம்சாட்டினர். அதேநேரம் முதல்வர் ஜெயலலிதா வாக்களிக்கும் தகுதியுள்ள உறுப்பினராக தொடர்கிறார்.


 

 
மேலும், சினிமாவில் எந்த பங்களிப்பும் செய்யாத ராதிகாவின் மகள் ரேயான், ராதாரவியின் மகன் ஹரி ஆகியோரின் பெயர்களும் வாக்களிக்க தகுதியுள்ளவர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டு ஒருவாரம் கழிந்த நிலையில் இப்போது கே.என்.காளை பதிலளித்துள்ளார்.
 
கருணாநிதி கவுர உறுப்பினராகத்தான் நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கவுரவ உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. கருணாநிதி இதுவரை நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்ததும் இல்லை. விஷால் பொய் தகவல்களை பரப்புகிறார் என காளை கர்ஜித்திருந்தார்.
 
பிரச்சனை கிளம்பிய ஒருவாரமும் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? கருணாநிதி குறித்த தகவலுக்கு மட்டும் விளக்கமளித்தவர் ரேயான், ஹரி ஆகியோர் குறித்து எதுவும் சொல்லாதது ஏன்?
 
சரத்குமார் தலைமையிலான அணியின் செயல்பாடுகள் ரகசியமாகவும், ஒருதலைபட்சமாகவும் இருப்பதை இந்த நிகழ்வு இன்னொருமுறை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெல்ஜியம் கார் ரேஸில் 2ம் பரிசை வென்ற அஜித்தின் டீம்!.. தல செம மாஸ்!..

5 நிமிஷம் லேட்டா போனா படமே புரியாது!.. கர இயக்குனர் விக்னேஷ் ராஜா சொல்றத கேளுங்க!..

அழகிய பெண் குழந்தைக்கு தந்தையானார் அட்லி - குவியும் வாழ்த்துக்கள்!

தீபிகா படுகோன் 2வது முறையாக கர்ப்பம்.. அட்லி படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

Show comments