Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷையும், விஜய்யையும் ஏமாற்றிய தீபாவளி...

Webdunia
சனி, 29 அக்டோபர் 2016 (13:28 IST)
தனுஷை ஏமாற்றிய அதிகாலை காட்சிகள்
----------------------------------------
தொடர்ந்து இரண்டு தோல்விகள். அந்தப் பக்கம் பார்த்தால், ரெமோ ஓபனிங்கில் சாதனை படைக்கிறது. வெற்றி பெற்றாக வேண்டும்.... அதுவும் அதிக கலெக்ஷனில்.



 

ஒதுக்கி வைத்த பத்திரிகையாளர்கள் தனுஷ் தேடிச் சென்று சந்தித்தார். பல வருடங்களுக்குப் பிறகு சென்னையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கொடி படத்தை பிரமோட் செய்ய ஆலோசனை நடத்தினார். சில திரையரங்குகுளுக்கு நேரடியாகச் சென்று ரசிகர்களை சந்தித்தார். இவ்வளவு செய்தும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் முந்தையப் படங்களால் கொடிக்கு சின்னதாக கிளிசல் ஏற்பட்டுவிட்டது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்தான் கொடி படத்தை வெளியிட்டார். இவரது பழைய வெளியீடுகளான கயல், மாப்ள சிங்கம் சரியாகப் போகாததால் விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு தொந்திரவு செய்திருக்கிறார்கள். கடைசிகட்ட பேச்சுவார்த்தை நடந்ததால் கொடியின் அதிகாலை சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கொடி ஓபனிங்கில் சின்ன இழப்பு இதனால் ஏற்பட்டுள்ளது.

விஜய் படக்குழுவை ஏமாற்றிய வில்லங்க திருடர்கள்
---------------------------------------------------
தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் பைரவா படத்தின் டீசர் 28 -ஆம் தேதி அதிகாலை 12.01 இணையத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், வில்லங்க ஆசாமிகள் டீசரை திருட்டுத்தனமாக 27 -ஆம் தேதி இரவு இணையத்தில் வெளியிட்டனர்.

இதற்கு மேலும் தாமதித்தால் மரியாதை இல்லை என்று உடனடியாக இரவு ஒன்பதைரை மணிக்கே பைரவா டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.  

விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசரை அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பு, திருட்டுப் பேர்வழிகளில் இணையத்தில் பதிவேற்றிவிடுகின்றனர். இந்தமுறையும் திருட்டு பேர்வழிகள்தான் முந்திக் கொண்டுள்ளனர்.

நல்லவேளை படத்தையாவது அதிகாரப்பூர்வமாக வெளியிட விட்டு வைத்திருக்கிறார்களே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments