Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாணு ஆபிசை அடிச்சு உடைச்சிருவோம்.... சைதை ரஜினி ரசிகர்கள் ஆவேசம்

தாணு ஆபிசை அடிச்சு உடைச்சிருவோம்.... சைதை ரஜினி ரசிகர்கள் ஆவேசம்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (11:07 IST)
ரசிகர்களுக்கு டிக்கெட் தருவதாக கூறி ஏமாற்றிய கபாலி தயாரிப்பாளர் தாணுவின் ஆபிசை அடித்து உடைப்போம் என்று சைதை பகுதி ரஜினி ரசிகர்கள் ஆவேசப்பட்டனர்.


 
 
சென்னை காசி தியேட்டர்தான் ரசிகர்களின் கொண்டாட்ட வெளி. ரஜினி படம் வெளியானால் இங்கு ட்ராபிக் ஜாம் ஆகிற அளவுக்கு கூட்டம் அம்மும். பேனர், போஸ்டர், கட்அவுட் என்று காசி ஏரியாவே திமிலோகப்படும். இந்த ஆர்ப்பாட்டங்களை செய்கிறவர்கள் சைதை பகுதி ரஜினி ரசிகர்கள். அவர்களை ஒருங்கிணைப்பவர் சைதை ரவி.
 
கபாலி படத்தை முதல்நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என்பதற்காக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த ரவி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துள்ளார். ரசிகர்கள் காட்சிக்கு டிக்கெட் தரவேண்டும் என்று தாணுவை பார்க்க சென்றுள்ளார் ரவி. பல மணி நேரம் அவரை தாணு காத்திருக்க வைத்து டிக்கெட் தரவில்லை. தியேட்டரில் கேட்டால், எல்லா டிக்கெட்டும் சோல்ட் அவுட். ஐடி கம்பெனிக்காரர்கள் பல லட்சம் ரூபாய்க்கு மொத்த டிக்கெட்களையும் அமுக்கிவிட்டனர். 
 
தியேட்டரில் தோரணம் கட்டி,; கட்அவுட் வைத்து காலையில் பாலூற்றப் போகும் ரசிகனுக்கு டிக்கெட் இல்லை. கேட்டதற்கு, தியேட்டர்ல 2,500 ரூபாய்க்குதான் டிக்கெட் விற்பாங்க. முடிஞ்சா வாங்கி பாருங்க என்றிருக்கிறார் தாணு. நொந்து போன சைதை ரவியின் உடல்நிலையும் மோசமைந்திருக்கிறது. அண்ணனுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னான தாணுவோட ஆபிசை அடிச்சு உடைச்சிடுவோம் என்று ரவியின் ஆள்கள் ஆவேசப்பட்டனர். காசியில் கட்டியிருந்த தோரணம், பேனர் என்று அனைத்தையும் அகற்றிவிட்டனர். நாங்க தோரணம் கட்டி, பேனர் வைப்போம் எவன் எவனோ முதல் நாள் முதல் ஷோ பார்ப்பானா என்பது அவர்களின் கேள்வி. 
 
ரஜினியை நேர்ல பார்க்கிறதுதான் அபூர்வம்னா தாணு போன்றவர்கள் டிக்கெட் ரேட்டை ஆயிரம் ஐயாயிரம்னு ஏத்தி தியேட்டர்லகூட ரஜினியை சாமானிய ரசிகன் பார்க்க முடியாதபடி பண்ணிவிட்டார்கள். 
 
காசியில் மட்டுமில்லை தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை. ரஜினி படத்தின் முதல்நாள் டிக்கெட் எப்போதுமே அதிக விலைக்குதான் விற்கப்படும். 50 ரூபாய் டிக்கெட்டை சாமானிய ரசிகன் 500 ரூபாய் கொடுத்துதான் வாங்கி வந்தான். இப்போது அதுவே இரண்டாயிரம், ஐயாயிரம் என்று அவனால் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
 
தமிழர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் எதையும் செய்ய தயாராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்?
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments